துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
15 வயது மகளை தனியாக இந்தியாவிற்கு விமானத்தில் ஏத்திவிட்ட தந்தை மகள் பத்திரமாக சென்னைக்கு வருவாளா என காத்திருந்த நிலையில், துபாயில் விமானம் ரத்தானது. இந்நிலையில் விமான சேவை நிறுவனம் 15 வயது சிறுமிக்கு செய்த உதவியை தந்தை தனது எக்ஸ தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது மிகவும் நெகிழ்ச்சிகரமான சம்பவமாக உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
புதுச்சேரியைச் சேர்ந்தவர் மணிஷ் கல்காடிக்கி, இவர் மொராக்கோ நாட்டில் பணியாற்றி வருகிறார். இவர் குடும்பத்துடன் அந்த நாட்டில் தங்கி இருக்கும் நிலையில் இவருக்கு சொந்த ஊரான பாண்டிச்சேரியில் உறவினர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் இவரது 15 வயது மகள் இந்தியாவிற்கு கட்டாயமாக வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்த நேரத்தில் இவரால் உடன் பயணிக்க முடியவில்லை. இதனால் தனது 15 வயது மகளை விமானத்தில் தனியாக அனுப்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

மொரக்காவிலிருந்து நேரடியாக சென்னைக்கு விமான சேவை இல்லாததால் இவர் மொராக்கோவில் உள்ள காசாப்ளான்கா விமான நிலையத்திலிருந்து துபாய் செல்லும் விமானத்தில் ஏறி துபாயில் இவர் மகள் இறங்கியதும் அங்கிருந்து வேறு விமானம் பிடித்து சென்னைக்கு வர வேண்டியது திட்டமாக இருந்தது. இதற்கான டிக்கெட்டுகள் எல்லாம் புக் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் துபாய் சந்தித்துள்ள பெரும் வெள்ளம் காரணமாக அந்த நாட்டிற்குள் வரும் விமானங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகள் எல்லாம் இதனால் தவிர்த்து வருகிறார்கள். தவிர்க்க முடியாத பயணிகள் எல்லாம் வேறு விமானங்களுக்கு மாற்றி விடப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இவரது மகள் வந்த விமானம் பத்திரமாக துபாயில் தரையிறங்கியது. அங்கிருந்து இவர் மகள் சென்னை செல்ல வேண்டிய விமானத்தை பிடிக்க வேண்டும். ஆனால் துபாயில் இருந்து சென்னை வரும் விமானம் வெள்ளம் காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனால் இவரால் துபாய் விமானத்தை பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் இதை முன்கூட்டியே அறிந்தால் எமிரேட்ஸ் நிர்வாகம் உடனடியாக இது சிறுமிக்கான மாற்று ஏற்பாடு செய்திருந்தது.
15 வயது சிறுமி தனியாக பயணிப்பதை அறிந்த எமிரேட்ஸ் நிர்வாகம் உடனடியாக அந்த சிறுமையை தொடர்பு கொண்டு சென்னை விமான ரத்து செய்யப்பட்டதையும், அதனால் மாற்று விமானம் வரும் வரை அவர்களுக்காக தங்கும் விடுதி மற்றும் உணவு வழங்கப்பட்டுள்ளதையும், மாற்று விமானம் தயாரானதும் அவர்களுக்கான டிக்கெட் மற்றும் போர்டிங் பாஸ் வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்கள்.

இந்நிலையில் மொரக்கோவில் உள்ள அந்த சிறுமியின் தந்தைக்கு அதிகாலை 4 மணிக்கு போன் கால் ஒன்று வந்தது. அதிகாலை போன் காலை பார்த்து பதறி அடித்து அதை எடுத்துப் பேசியதற்கு எதிரில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மைய ஊழியர் ஒருவர் பேசினார்.
அப்பொழுது அவரது மகள் தனியாக பயணிப்பது குறித்தும், மேலும் துபாயில் இருந்து சென்னை வரை செல்ல வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டது குறித்தும், தெரிவித்தார். இதனால் சிறுமியின் தந்தை பதறி துடித்தார். தனது மகள் துபாயில் தனியாக என்ன செய்வாள் என தெரியாமல் யோசித்தார்.
அவரை சமாதானப்படுத்தி அந்த ஊழியர் விமான சேவை நிறுவனம் எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கமளித்தார். தங்கள் மகள் பத்திரமாக இருப்பதாகவும் அவரை பத்திரமாக சென்னை விமான நிலையத்திற்கு செல்லும் விமானத்தில் ஏற்றி விட தாங்கள் திட்டமிட்டு இருப்பதாகவும் விளக்கம் அளித்தார். இதை கேட்ட பின்பு தான் அவருக்கு நிம்மதி ஏற்பட்டது. இதன் பின்னர் அவர் தனது மகளை தொடர்பு கொண்டு பேசி அவரது நலனை தெரிந்து கொண்டார்.
எமிரேட்ஸ் நிர்வாகம் பின்னர் சென்னை செல்லும் விமானத்தை பார்த்து அதில் உள்ள சீட்டுகளை பார்த்து அதில் 15 வயது சிறுமிக்கு சீட்டை வழங்கி அவருக்கான போர்டிங் பாஸையும் வழங்கியது. இதனால் அந்த 15 வயது சிறுமி பத்திரமாக சென்னை வந்தடைந்தார். இங்கு அவரது உறவினர்கள் அவரை சென்னை விமான நிலையத்தில் வந்து பிக்கப் செய்து கொண்டார்கள்.
இந்த பயணத்தின் போது எமிரேட்ஸ் நிர்வாகம் 15 வயது சிறுமி தனியாக பயணிப்பதை அறிந்து அவருக்கு தேவையான உதவி தங்குமிடம் பாதுகாப்பு உணவு என அனைத்தையும் வழங்கி அதே நேரம் அவரது தந்தைக்கும் தொடர்பு கொண்டு நிலைமையை எடுத்துக் கூறி அந்தப் பயணத்தை சுலபமாக மாற்றியது. முழு சம்பவத்தையும் அவர் தனது எக்ஸ்தள பக்கத்தில் பகிர்ந்து எமிரேட்ஸ் நிர்வாகத்திற்கு தனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்து இருந்தார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விமான சேவையில் தடங்கள் ஏற்படும் போது அது பல்வேறு விதமான பாதிப்புகளை மக்களுக்கு ஏற்படுத்தும். இதனால் பயணிகளுக்கு அவர்களின் பாதிப்பை குறைக்க விமான சேவை நிறுவனங்கள் உடனடியாக செயல்பட்டு உதவிகளை வழங்க வேண்டியது கட்டாயமாக இருந்தது. இதன்படி 15 வயது சிறுமி தனியாக பயணிக்கிறார் என்பதை அறிந்து விமான சேவை நிறுவனம் அந்த சிறுமிக்கு வழங்கிய உதவி என்பது நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது.


Click it and Unblock the Notifications









