Just In
- 5 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 6 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 7 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 8 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிரீமியம் விமானத்தின் உட்பகுதி இப்படிதான் இருக்குமா!! அரண்மனையை மிஞ்சும் வசதி... ஒரு முறையாவது இதுல போகணும்...
தனது புதுமுக பிரீமியம் விமானத்தின் உட்பகுதி புகைப்படங்களை பிரபல விமான போக்குவரத்து நிறுவனமான எமிரேட்ஸ் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

விமான பயணம் மிகவும் சாதாரண ஒன்றாக மாறியிருக்கின்ற இந்த வேலையிலும், பலருக்கு அதில் பயணிக்க வேண்டும் என்பது வாழ்நாள் லட்சியமாக இருக்கின்றது. இதில் ஒரு சிலர் பிரீமியம் தரத்திலான விமானத்தில் போக வேண்டும் என்பதைக் கனவாகக் கொண்டிருக்கின்றனர். பிரீமியம் தரத்திலான விமானங்கள் எண்ணற்ற வசதிகளைக் கொண்டதாக இருக்கின்றன.

குறிப்பாக, நாம் ஓர் விமானத்தில் தான் பயணிக்கின்றோம் என்கிற எண்ணத்தையே அது மழுங்கச் செய்து, நட்சத்திர விடுதியில் இருப்பதைப் போன்ற அனுபவத்தை வழங்கும். இதனால்தான் பெரும் தொழிலதிபர்கள் மற்றும் கோடீஸ்வரர்கள் தங்களின் பெரும்பாலான வெளிநாட்டு பயணங்களுக்கு பிரீமியம் கிளாஸ் விமானங்களையேப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தொழிலதிபர்கள் மற்றும் பெரும் பணக்காரர்களைக் கவர்கின்ற வகையில் பிரபல விமான போக்குவரத்து நிறுவனமான எமிரேட்ஸ், அதன் பிரீமியம் தர விமானம் ஏ380 பற்றிய புகைப்படங்களை வெளியிட்டிருக்கின்றது. இந்த விமானத்தின் அனைத்து வகுப்பு பிரிவுகளும் பிரீமியம் தரத்திலான வசதிகளைக் கொண்டதாக இருக்கின்றது.

இந்த வசதிகள் மனதை கொள்ளைக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றன. ஆமாங், ஒவ்வொரு இருக்கைக்கும் தனி தொலைக்காட்சி திரை, மிக சொகுசான இருக்கை வசதி என எக்கசக்க லக்சூரி வசதிகளை இந்த விமானம் பெற்றிருக்கின்றது. இவ்விமானத்தில் ஒட்டுமொத்தமாக 56 இருக்கைகள் இடம் பெற்றிருக்கின்றன.

இதில், சில சிறப்பு ரயில்களில் இருப்பதைப் போல தனியறை மற்றும் கேப்டன் இருக்கை வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன. இதில், பயணிப்போர் மிக அமைதியான மற்றும் தனிமையான உணர்வைப் பெற முடியும். மேலும், இவர்களுக்கென தனி கழிவறை, வாஷ்பேஷன் என ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இதுதவிர சொகுசு நட்சத்திர விடுதிகளில் இருப்பதைப் போன்று மினி பார் வசதியும் இந்த விமானத்தில் காணப்படுகின்றது. பயணிகளை விருந்தினரைப் போல் கவனிக்கக்கூடிய பணிப் பெண்களும் இதில் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்துடன், ஒவ்வொரு இருக்கையிலும் உணவை வைத்துக் கொள்கின்ற வகையில் டேபிள் வசதி வழங்கப்பட்டிருக்கின்றது.

தனியறை இருக்கைகளுக்கு பிரத்யேக டேபிள் மற்றும் தொலைக் காட்சி பெட்டி வசதி வழங்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றிருக்கும் திரை 13.3 இன்சிலானதாகும். இதன் மூலம் இசை, திரைப்படம், செய்தி என பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளைப் பயணிகளால் பெற முடியும்.

இதுதவிர, செல்போனைச் சார்ஜ் செய்துகொள்ள ஏதுவாக பிளக் பாயிண்ட், ஏசியைக் கட்டுப்படுத்தும் வசதி, தனி மின் விளக்கு உள்ளிட்ட வசதிகள் இதில் வழங்கப்பட்டிருக்கின்றன. இதன் இருக்கைகளை 6 விதமாக அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும் என கூறப்படுகின்றது.

இது ஓர் லெதர் போர்வைக் கொண்ட இருக்கையாகும். மேலும், இதன் இருக்கைகளில் தலை, கை மற்றும் கால் ஆகியவற்றிற்கு கூடுதல் ஓய்வளிக்கின்ற வகையில் பிரத்யேக ஸ்பாஞ்சுகள் மற்றும் தலையணைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஆகையால், இதில் பயணிக்கும்போது ராஜாவின் அரண்மனையில் இருப்பதைப் போன்ற அனுபவத்தைப் பெற முடியும் என்பதை எங்களால் நிச்சயம் அடித்து கூற முடியும். மேலும், வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த விமானத்தில் சென்று விட வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டும் வகையில் தற்போது வெளியாகியிருக்கும் புகைப்படங்களை இருக்கின்றன.