காருக்காக நடுரோட்ல அமர்ந்து அழுத நபர்.. பாக்குறவங்க எல்லாரையும் வேதனையில ஆழ்த்திருச்சு! சோகத்த வரவச்ச நிகழ்வு!
கார் வாங்குவது பலருக்கு பெரிய கனவாக உள்ளது. அப்படியாக ஆசை ஆசையாக வாங்கிய கார் விபத்தில் சிக்கியதனாலேயே அந்த காரின் உரிமையாளர் சாலையிலேயே அமர்ந்து கண்ணீர் வடித்திருக்கின்றார். அது புத்தம் புது கார் ஆகும். சமீபத்திலேயே அவர் டெலிவரி எடுத்திருக்கின்றனர். இதை உறுதிப்படுத்தும் விதமாக கார் மாலையாளும், ரிப்பன்களாலும் அந்த அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே அந்த கார் விபத்தில் சிக்கி இருக்கின்றது. இதுவே அதன் உரிமையாளரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது.
அதுமட்டும் அல்ல நடு ரோட்டிலேயே அவரை அமர்ந்து அழவும் செய்து இருக்கின்றது. விபத்தில் சிக்கியது நிஸான் மேக்னைட் (Nissan Magnite) கார் மாடல் ஆகும். இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் விலை குறைவான எஸ்யூவி (SUV) ரக கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறைவான விலையில் எஸ்யூவி ரக காரை வாங்க வேண்டும் என்கிற ஆசையில் உள்ளவர்களின் பிரியமான தேர்வாகவும் இந்த கார் மாடல் மாறியிருக்கின்றது. அப்படியாக மிகப் பெரிய கனவுடன் வாங்கப்பட்ட கார் மாடலே இதுவாகும்.
டெலிவரி எடுத்த ஒரு சில மணி நேரங்களிலேயே கார் விபத்திற்கு ஆளாகி இருக்கின்றது. இதன் உரிமையாளர் கதறி அழும் காட்சி பலரை வேதனையில் ஆழ்த்தி இருக்கின்றது. இந்த சம்பவம் மஹாராஷ்டிரா மாநிலம் புனேவிலேயே அரங்கேறி இருக்கின்றது. விபத்திற்கான காரணம் முழுமையாக தெரியவில்லை.
இருப்பினும், ஓட்டுநரின் கவனக் குறைவின் காரணமாக இந்த விபத்து சம்பவம் அரங்கேறியிருக்கலாம் என யூகிக்க முடிகின்றது. விபத்தினால் காரின் ஒருபக்கம் லேசான பாதிப்பைச் சந்தித்து இருக்கின்றது. புதிய கார் என்றாலும், அது பதிவு செய்யப்பட்டு இருப்பதனால் இன்சூரன்ஸைப் பெறுவதில் எந்த சிக்கலும் இருக்காது என தெரிகின்றது.
ஃபெண்டர், பம்பர் மற்றும் ஹெட்லைட் உள்ளிட்டவையே சேதமாகி இருக்கின்றது. இவற்றில் பெரும்பாலானவற்றிற்கு இன்சூரன்ஸ் கவர் ஆகும் என்பது கவனிக்கத்தகுந்தது. நிஸான் மேக்னைட் ஓர் சப்-4 மீட்டர் எஸ்யூவி ரக காராகும். எல்இடி ஹெட்லைட்டுகள், 8 அங்குல தொடு திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டடவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதி, கார் இணைப்பு தொழில்நுட்பம் என ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும், ஏர் பியூரிஃபயர், ஜேபிஎல் மியூசிக் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட் செட் போன்ற பிரீமியம் அம்சங்களும் மேக்னைட் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரூ. 4.99 லட்சம் என்கிற விலையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட இந்த கார் மாடல் தற்போது ரூ. 6 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இருப்பினும், இந்தியர்கள் பலரின் ஃபேவரிட் கார் மாடலாக மேக்னைட் காட்சியளிக்கின்றது.


Click it and Unblock the Notifications








