எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இன்று முதல் புதிய மானியம்! ஒரு வண்டிக்கு இவ்வளவு பணம் மிச்சமாகுமா?

இன்று முதல் இந்தியாவை எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கினால் ஏகப்பட்ட லாபம் கிடைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த நான்கு மாதங்களுக்கு இந்த சலுகை என்பது வழங்கப்படுகிறது. மத்திய அரசு இந்த குறிப்பிட்ட கால சலுகையை ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், இது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை ஊக்குவிக்கவும், மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களின் புழக்கத்தை அதிகரிக்கவும் மத்திய அரசு எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்களுக்கும் ஃபேம் என்ற மானியத்தை வழங்கி வருகிறது. இந்த மானியத்தின்படி முதல் கட்டமாக நேரடியாக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியம் வழங்கப்பட்டது.

EMPS 2024

தற்போது இந்த ஃபேம் மானியம் இரண்டாம் கட்டமாக நேரடியாக எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வந்தது. இந்த ஃபேம் இரண்டாம் கட்ட மானியம் அறிவிக்கப்படும்போது, அது 2024-ம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரைக்கும் மட்டுமே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் நேற்றுடன் இந்த பேம்2 மானியம் என்பது முடிவுக்கு வந்தது.

மத்திய அரசு இந்த ஃபேம் மானியத்தை நீட்டிக்கும் என்ற பேச்சு மக்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மத்திய அரசிடம் இருந்து. இது குறித்த விரிவான அறிக்கை ஒன்று வெளியானது அதன்படி தற்போது இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் வருவதால் உடனடியாக எந்த பெரிய திட்டத்தையும் அறிவிக்க முடியாத சூழ்நிலை உள்ளது.

EMPS 2024

இதன் காரணமாக மத்திய அரசு ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூலை மாதம் 31ஆம் தேதி வரை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியங்களை வழங்க புதிய இடைக்கால திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அந்த திட்டத்திற்கு எலக்ட்ரிக் மொபிலிட்டி புரோமோஷன் ஸ்கீம் இஎம்பிஎஸ் என பெயர் வைத்துள்ளது. இதற்காக மத்திய அரசு ரூபாய் 500 கோடி நிதியையும் ஒதுக்கி உள்ளது.

இதன்படி மத்திய அரசு சொன்ன விதிமுறையின் கீழ் வாகனங்களை தயாரிக்கும் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்களுக்கு ஒரு டூவீலருக்கு ரூபாய் 10 ஆயிரம் மானியமாக வழங்கப்படும். இப்படியாக இந்த நான்கு மாதத்தில் மொத்தம் 3.33 லட்சம் டூவீலர்களுக்கு மானியம் வழங்க மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது. இதுபோக மூன்று சக்கர வாகனங்களுக்கும் மானியங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

EMPS 2024

அதன்படி சிறிய ரக மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூபாய் 25000 வரையிலும், பெரியதாக மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூபாய் 50,000 வரையிலும் மானியங்கள் வழங்கப்படுகின்றன. இந்த மானியம் போக ரூபாய் 41 ஆயிரம் வரை பலன்களும் வழங்கப்படுகின்றன. இதனால் இந்த ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு தயாராகும் வாகனங்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் தான் வாகன தயாரிப்பாளர்களுக்கு மானியம் கிடைக்கும்.

இந்த மானிய திட்டத்தின் கீழ் மொத்தம் 3,72,215 இவிகளுக்கு மானியம் வழங்க மத்தியரசு முடிவு செய்துள்ளது. இந்த மானியத்தை பெற வேண்டுமென்றால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் சில குறிப்பிட்ட விஷயங்களை பூர்த்தி செய்திருக்க வேண்டும். மத்திய அரசின் ஆத்ம பாரத் நிர்வாக திட்டத்தின் கீழ் அந்நிறுவனம் செயல்பட வேண்டும் இதுபோக திறன் வாய்ந்த போட்டி நிறுவனங்கள் தயாரிக்கும் வாகனங்களுக்கு இணையான அட்வான்ஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க வேண்டும்.

இது மட்டுமல்லாமல் குறிப்பிட்ட வாகனம் முற்றிலுமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வாகனமாக இருக்க வேண்டும் இது மட்டும் இல்லாமல் இந்த வாகனம் இந்தியாவில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்பதையும் அந்நிறுவனம் உறுதி செய்ய வேண்டும் இந்நிறுவனம் இந்தியாவில் உள்ள மக்களுக்கு குறிப்பிட்ட அளவிலான வேலை வாய்ப்புகளையும் வழங்கி இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் தான் இந்த மானியம் என்பது வழங்கப்படுகிறது.

இது ஒரு இடைக்கால மானியம் தான் இந்த இடைக்கால மானியத்திற்கு பிறகு புதிதாக அமையும் அரசு ஃபேம் 3 என்ற எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மூன்றாம் கட்ட மானியத்தை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ரூ2671.33 கோடி மத்திய அரசு நிதியாக ஒதுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை மாதம் வெளியாக உள்ள மெயின் பட்ஜெட்டில் இது குறித்து அறிவிப்புகள் எல்லாம் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்களுக்கு மத்திய அரசு வழங்கும் இந்த மானியம் என்பது மிகப் பெரிய உதவியாக இருக்கும் இதனால் இந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் எலெக்ட்ரிக் வாகனங்களில் விலை குறைய அதிகமான வாய்ப்புகள் உள்ளன. தொடர்ந்து அடுத்த நான்கு மாதங்களுக்கு இந்த குறைந்த விலை நீட்டிக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் இது எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க நல்ல நேரம்.

More from DriveSpark

Article Published On: Monday, April 1, 2024, 10:57 [IST]
English summary
Emps 2024 electric mobility scheme begins india for ev boost
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X