இனி ஒரு பய பெட்ரோல் வண்டி வாங்க கூடாது! இவிகளுக்கு வேறலெவல் மானியத்திற்கு பிளான் போட இன்னும் 2 மாசம் ஆகும்!

எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக வழங்கப்படும் இஎம்பிஎஸ் என்ற மானியத்தை மேலும் இரண்டு மாதங்களுக்கு தொடர்ந்து வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து அறிவிப்பையும் தற்போது வெளியிட்டுள்ளது. இதனால் ஃபேம் 3 மானியம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வழங்கி வரும் இஎம்பிஎஸ் மானியம் என்றால் என்ன? இதை ஏன் இரண்டு மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் விற்பனையாகி வரும் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு ஃபேம் என்ற மானியத்தை அறிமுகப்படுத்தி அதற்காக நிதி ஒதுக்கி எலெக்ட்ரிக் வாகன விற்பனையை அதிகரிக்க ஊக்கப்படுத்தி வந்தது. ஃபேம் மானியத்தின் முதல் கட்டத்தில் நேரடியாக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த மானியம் வழங்கப்பட்டது.

emps scheme extended

இந்நிலையில் ஃபேம் மானியத்தின் இரண்டாம் கட்டம் அறிவிக்கப்படும் போது இந்த மானியம் நேரடியாக எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வழங்கி அதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையை குறைக்க திட்டமிட்டது. இதன் மூலம் வாகன தயாரிப்பு நிறுவனங்களும் அதிகமான லாபத்தை பெற்றன.

ஃபேம் மானியத்தின் இரண்டாம் கட்ட திட்டத்தின் படி கடந்த மார்ச் மாதம் 31ம் தேதியுடன் இந்த மாநிலத்திற்கான கால அவகாசம் என்பது முடிவடைந்து விட்டது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதமே இந்தியாவில் ஃபேம் மானியத்தின் மூன்றாம் கட்டம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியாவில் பொதுத்தேர்தல் அறிவித்துவிட்டதால் இது குறித்து அறிவிப்புகள் வெளியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

emps scheme extended

இதனால் இந்த ஃபேம் மானியம் 3ம் கட்ட அறிவிப்பு வெளியாகும் இடைக்காலத்திற்கு இஎம்பிஎஸ் என்ற எலெக்ட்ரிக் மொபிலிட்டி புரோமோஷன் ஸ்கீம் என்ற இடைக்கால திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன்படி ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூலை மாதம் 31ம் தேதி வரை இந்த திட்டம் அமலில் இருக்கும் எனவும் இதற்காக ரூபாய் 500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தது.

இந்தலையில் கடன் சில தினங்களுக்கு முன்னர் பட்ஜெட் அறிவிப்பு வெளியான போது ஃபேம் மானியம் குறித்து அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெரிய அளவில் எந்த அறிவிப்புகளும் இல்லாமல் இருந்தது. இது பலருக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இஎம்பிஎஸ் மானியத்தின் கால அவகாசமும் முடியப்போவதால் இனி எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக பலபேர் பேசி வந்தார்கள்.

emps scheme extended

இதற்கிடையில் ஃபேம் மானியத்தின் 3ம் கட்டம் குறித்து அறிவிப்புகள் வெளியாகிவிடும் என்ற பேச்சும் இருந்து வந்த நிலையில், தற்போது மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது வழங்கி வரும் இஎம்பிஎஸ் என்ற மானியத்தை அடுத்த இரண்டு மாதங்களுக்கு தொடர்ந்து வழங்க முடிவு செய்துள்ளது.

இதற்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்ட ரூபாய் 500 கோடி நிதியை ரூ 778 கோடியாக உயர்த்தி மத்திய அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்த மானியத்தின் படி இந்தியாவில் விற்பனையாகி வரும் எலெக்ட்ரிக் டூவீலர் மற்றும் 3 வீலர்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மானியம் தொடர்ந்து அடுத்த இரண்டு மாதங்களுக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்குள் ஃபேம் மானியத்தின் 3ம் கட்ட திட்டங்கள் முழுமையாக கட்டமைக்கப்பட்டு அது குறித்து அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உள்ள இஎம்பிஎஸ் மானியத்தின் படி இந்தியாவில் தயாரிக்கப்படும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அதன் பேட்டரி அளவை பொருத்து மானியம் வழங்கப்படுகிறது. ஒரு கிலோவாட் ஹவர் பேட்டரிக்கு ரூபாய் 5000 விதம் அதிகபட்சமாக ஒரு வாகனத்திற்கு ரூபாய் 10000 வரை மானியம் வழங்கப்படுகிறது.

இதன் மூலம் மத்திய அரசு இந்தியாவில் மொத்தம் 5,60,789 வாகனங்களுக்கு மானியம் வழங்க முடிவு செய்துள்ளது. இதில் 5,00,080 எலெக்ட்ரிக் டூவீலர்களுக்கும் 60,709 3 சக்கர வாகனங்களுக்கும் மானியங்கள் வழங்க முடிவு செய்துள்ளது. இந்த மூன்று சக்கர வாகனங்களில் 13,590 இ ரிக்ஷாக்கள் மற்றும் 47,119 எலெக்ட்ரிக் l5 ரக மூன்று சக்கர வாகனங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை ஊக்குவிப்பதன் மூலம் காற்று மாசு குறையும் என்பதால் மத்திய அரசு இந்த திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. ஃபேம் 3 மானியம் காலதாமதம் ஆவதின் காரணமாக இந்த இஎம்பிஎஸ் மானியத்தை இரண்டு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறையாமல் அப்படியே இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Saturday, July 27, 2024, 23:30 [IST]
English summary
Emps scheme extended sept 30 rs 270 crore outlay enhanced
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X