11 வருட இடைவெளிக்கு பின் மீண்டும் நடிக்க வந்த நடிகர் வாங்கிய புதிய கார்... குடும்பத்துடன் மாஸாக எண்ட்ரீ
லேண்ட் ரோவர் (Land Rover) நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர் (Range Rover) கார்களுக்கு உலகம் முழுவதிலும் இலட்சக்கணக்கில் கஸ்டமர்கள் உள்ளனர். இந்தியாவிலும் கூட. அவ்வாறான ரேஞ்ச் ரோவர் கஸ்டமர்களுள் ஒருவராக பிரபல நடிகர் (Actor) ஒருவர் இணைந்துள்ளார். புத்தம் புதிய ரேஞ்ச் ரோவர் காரில் அந்த நடிகர் நிகழ்ச்சி ஒன்றிற்கு வருகை தந்த போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. யார் அந்த நடிகர் என்பதையும், அவர் புதியதாக வாங்கியுள்ள ரேஞ்ச் ரோவர் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
அதிக விலையில் எத்தனை சொகுசு கார்களை வைத்திருந்தாலும், ரேஞ்ச் ரோவர் கார்கள் என்றாலே எல்லாருக்குமே தனி ஈர்ப்பு உண்டு. பாமர மக்களில் இருந்து சினிமா நடிகர், நடிகையர் உள்பட பெரிய பெரிய கோடீஸ்வரர்கள் வரையில் கூட ரேஞ்ச் ரோவர் கார் பிரியர்களாக உள்ளனர்.

குறிப்பாக, பாலிவுட் சினிமா (Bollywood Cinema) வட்டாரத்தில் பெரும்பாலானோரிடத்தில் குறைந்தது ஒரு ரேஞ்ச் ரோவர் கார் ஆவது உள்ளது. தற்போது புதியதாக ரேஞ்ச் ரோவர் காரை வாங்கியிருப்பதும் ஒரு பிரபலமான பாலிவுட் நடிகர் ஆவார். இவர் வேறு யாருமில்லை, நடிகர் எம்ரான் ஹஸ்மி (Emraan Hashmi) ஆவார்.
ஆள் பார்க்க நன்கு வாட்ட சாட்டமாக அரேபியர்களை போன்று இருப்பதால், ஆக்ஷன் திரைப்படங்களில் அதிகமாக எம்ரான் ஹஸ்மியை பார்க்க முடியும். ஆனால், சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் காதல் திரைப்படங்களில் தான் இவர் அதிகமாக நடித்தார். முக்கியமாக, திரைப்படங்களில் முத்த காட்சிகளில் அதிகமாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகினார்.

அதன்பின், மனைவியின் வேண்டுக்கோளை அடுத்து, முத்த காட்சிகளை தவிர்த்த எம்ரான் ஹஸ்மியின் நடிப்பில் வெளியான மர்டர் மற்றும் மர்டர் 2 திரைப்படங்கள் பிரபலமானவை. 45 வயதான எம்ரான் ஹஸ்மி 2013ஆம் ஆண்டிற்கு பின் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த 2024ஆம் ஆண்டில் 'டைகர் 3' திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.
இந்த நிலையில், மும்பையில் நடைபெற்ற தயாரிப்பாளர் விக்கி பக்னானியின் திருமண விழாவில் குடும்பத்துடன் நடிகர் எம்ரான் ஹஸ்மி கலந்துக் கொண்டார். இந்த திருமண நிகழ்ச்சிக்கு தனது புத்தம் புதிய ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி லாங்-வீல்பேஸ் (Autobiography LWB) காரில் எம்ரான் ஹஸ்மி வந்திறங்கியது அங்கிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது.

கோல்டன் நிறத்திலான ஆட்டோபயோகிராபி லாங்-வீல்பேஸ் காரை நடிகர் எம்ரான் ஹஸ்மி வைத்துள்ளார். இந்த லக்சரி எஸ்யூவி ரக காரில் 13.2 இன்ச்சில் நன்கு அளவில் பெரியதான டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்பிளே ஆனது பிவி புரோ ஓஎஸ் உடன் டேஸ்போர்டில் வழங்கப்படுகிறது. 3.0 லிட்டர் பி400 இங்கேனியம் டர்போசார்ஜ்டு இன்லைன்-6 சிலிண்டர் மைல்ட்-ஹைப்ரீட் பெட்ரோல் என்ஜின் இந்த காரில் பொருத்தப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் எம்ரான் ஹஸ்மியை இதற்கு முன்னர் ரோல்ஸ்-ராய்ஸ் (Rolls-Royce) காரில் செல்வதை கூட பார்த்துள்ளோம். ஆனால், இந்த ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி லாங்-வீல்பேஸ் காரில் பார்த்ததில்லை. ஆதலால், இந்த காரை இந்த பாலிவுட் நடிகர் சமீபத்தில்தான் வாங்கியிருக்க கூடும்.


Click it and Unblock the Notifications









