துல்கர்சல்மான், பிரித்திவிராஜ் வீடுகளில் ரெய்டு! கார் வாங்கியதில் இவ்வளவு முறைகேடு இருக்குதா?
கேரள மாநிலத்தில் சினிமா பிரபலங்கள் உட்பட பலர் வெளிநாட்டிலிருந்து காஸ்ட்லியான காரை இறக்குமதி செய்ததில் முறைகேட்டில் ஈடுப்பட்டுள்ளதாக எழுந்த புகாரை அடுத்தஒரே நேரத்தில் 17 இடங்களில் அமலாக்கத்துறையில் ரெய்டு செய்து வருகின்றனர். இந்த ரெய்டு எதற்காக எப்படி இவர்கள் முறைகேடு செய்ததாக கூறப்படுகிறது? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இன்று காலையில் கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள அமலாக்க இயக்குநரம் சார்பில் ஃபாரின் எக்ஸ்சேஞ்ச் மேனேஜ்மென்ட் சட்டத்தின் கீழ் முறைகேடாக வெளிநாட்டில் வாங்கப்பட்ட வாகனத்தை இந்தியாவில் குறைவான வரியில் இறக்குமதி செய்ய நேப்பாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகள் வழியாக வாகனங்களை இறக்குமதி செய்து முறைகேட்டில் ஈடுபட்டதா எழுந்த புகாரின் அடிப்படையில் 17 இடங்களில் ரெய்டு நடந்து வருகிறது.

இதில் பிரபல மலையாள சினிமா நடிகர்களான, பிரித்திவி ராஜ், துல்கர் சல்மான், அமித் உள்ளிட்ட சில வாகன உரிமையார்கள், வாகன ஓர்க்ஷாப் மற்றும் டிரேடர்கள் ஆகியோரது இடங்களில் ரெய்டு நடந்து வருகிறது. ஒரே நேரத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு, மலப்புரம், கோட்டாயம் ஆகிய பகுதகளிலும் கோவையிலும் இந்த ரெய்டு நடக்கிறது.
இந்த புகாரில் காஸ்ட்லியான சொகுசு கார்களா லேண்ட் க்ரூஸர், டிஃபென்டர் மற்றும் மசரட்டி ஆகிய கார்களை கோவையை சேர்ந்த ஒரு நிறுவனம் சிலருக்கு பூட்டான் மற்றும் நேப்பாள் வழியாக முறையாக இறக்குமதி செய்துள்ளது. இப்படியாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் முறைகேடான ஆவங்கள் ழவியாக இந்தியாவிற்குள் கொண்டு வரப்பட்டு அருணாச்சல பிரதேசம், ஹிமாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்குள் கொண்டு வரப்பட்டு பின்னர் இது கேரளா, தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட வாகனங்களை இந்தியாவிற்குள் நேரடியாக இறக்குமதி செய்யவேண்டும் என்றால்இறக்குமதி வரி 100 சதவீதம் வரை இருக்கிறது. இதனால் பலர் குறுக்கு வழிகளை பார்க்க துவங்கிவிட்டனர். இதை நேபாளத்தில் இறங்குமதி செய்து, இந்தியா நேபாளம் இடையேயான உறவில் உள்ள வரி குறைப்பு சலுகைகளை பயன்படுத்தி நேபாளத்திற்கு அருகே உள்ள மாநிலத்தில் இதை பதிவு செய்து பின்னர். அந்த வாகனத்தை கேரளாவில் விற்பது போல ஆவணங்களை தயார் செய்து அம்மாநில பதிவெண்ணை ரத்து செய்து கேரளா, தமிழகத்தில் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது நேரடியாக அரசுக்கு வரும் வரியை ஏமாற்றும் முறைகேடான வேலையாக பார்க்கப்படுகிறது. இது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவே அமலாக்கத்துறை இந்த ரெய்டு நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. இந்த ரெய்டு மூலம் முக்கிய ஆவணங்கள் சிக்கினால் அதை வைத்து வழக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பிரபலங்கள், சினிமா நடிகர்கள் என பலர் காஸ்ட்லியான வெளிநாட்டில்தயாரிக்கப்பட்ட சொகுசு கார்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் இறக்குமதி வரி செலுத்திதான் இந்த காரை வாங்கினார்களா எனசோதித்தால் உண்மை தெரியவரும். இந்த கார்கள் முறைகேடாக இந்தியாவிற்கு வந்திருந்தால் நிச்சயம் இவர்கள் மீதும், இவர்கள் முறைகேடாக வாகனத்தை இந்தியாவிற்குள் கொண்டு வர உதவிய நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்ய அதிக வரி விதிப்பை செய்கிறது. இதற்கு உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதே முக்கியமான காரணம் ஆகும். ஒருநபர் உள்நாட்டில் கார் வாங்கினால் இந்தியாவில் இது மறைமுகமாக பல மக்களுக்கு பலனை தரும். இதை அப்படியேவிட்டுவிட்டு நேரடியாக வெளிநாட்டு நிறுவனத்திற்கு பணம் வழங்கினால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் வெளிநாட்டு இறக்குமதிக்கு அதிக வரி விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்க பலனளிக்கும் வகையில் தான் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இதை சில முறைகேடாக பயன்படுத்தி இறக்குமதி வரி இல்லாமல் காரை இந்தியாவிற்குள் கொண்டு வருவது சட்ட விரோதம் ஆகும். இந்த புகார் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை தீவிரமாக எடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









