எஞ்சின் ஆயில் கலர வச்சே அது என்ன பாதிப்புக்கு ஆளாகி இருக்குன்றத தெரிஞ்சுடலாம்! ஒவ்வொரு கலருக்கும் ஒரு அர்த்தம்
வாகனங்களின் இயக்கத்தில் எஞ்சின் ஆயில் முக்கிய பங்கினை வகிக்கின்றன. ஆரோக்கியமான எஞ்சின் தடையற்ற இயக்கத்திற்கு உதவியாக இருக்கும். இதன் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும் எனில் எஞ்சின் ஆயிலும் அதிக ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அது ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே அதனால் அதன் முக்கிய பணிகளை திறம்பட செய்ய முடியும். அதிக உஷ்ணத்தில் இருந்து எஞ்சினைக் காப்பது, உராய்வுகள் மற்றும் தேய்மானத்தில் இருந்து காப்பாற்றுவது போன்ற முக்கிய பணிகளையே எஞ்சின் ஆயில்கள் மேற்கொள்கின்றன. இதுமட்டுமில்லைங்க, எஞ்சினுக்குள் இருக்கும் கழிவுகள் மற்றும் நுண்ணிய அளவிலான மெட்டல் பாகங்கள் போன்றவற்றை அகற்றவும் எஞ்சின் ஆயில் உதவுகின்றது.
இதனால்தான், ஆயிலை ஹெல்த்தியாக பார்த்துக் கொள்வது ஒவ்வொரு வாகன உரிமையாளரின் கடமை என கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே 'ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு' (Federation of Automobile Dealers Associations) எஞ்சின் ஆயில் என்ன நிறத்தில் என்ன மாதிரியான நிலையில் அது இருக்கின்றது என்பது பற்றிய தகவலை வெளியிட்டு இருக்கின்றது. இதுகுறித்த விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

நிலை ஒன்று: எஞ்சின் ஆயில் ஆம்பர் அல்லது கோல்டன் (Amber / Golden) நிறத்தில் இருந்தால் அந்த ஆயில் சுத்தமானதாகவும், நல்ல நிலையில் இருக்கின்றது என்றே அர்த்தம். ஆயிலை மாற்றிய புதிதில் இந்த நிறத்திலேயே அது இருக்கும். ஒவ்வொரு முறையும் ஆயிலை புதிதாக மாற்றும்போது இந்த நிறத்தில்தான் அது இருக்கின்றதா என்பதை உறுதிச் செய்துக் கொள்வதும் நல்லது.
இரண்டாம் நிலை: லைட் பிரவுன் (Light Brown), இந்த நிறத்தில் உங்கள் எஞ்சின் ஆயில் இருக்கின்றது எனில் அது நீண்ட காலமாக பயன்பாட்டில் இருக்கின்றது என்று அர்த்தம். அத்துடன், அந்த ஆயிலை மாற்றுவதற்கான நேரம் இது என்றும் அர்த்தம். ஆகையால், உங்கள் வாகனத்தில் உள்ள எஞ்சின் ஆயில் இந்த நிறத்தில் இருக்கும் எனில் உடனடியாக மாற்றிவிடவும். இல்லை எனில் எஞ்சின் ஆயுட்காலத்தில் பாதிப்பு ஏற்படக் கூடலாம்.

மூன்றாம் நிலை: டார்க் பிரவுன் (Dark Brown) அல்லது கருப்பு நிறம்: இந்த நிறத்தில் உங்கள் வாகனத்தின் எஞ்சின் இருக்கும் எனில் யோசிக்கவே வேண்டாம் அதை உடனடியாக மாற்றிவிட வேண்டும். இல்லை எஞ்சின் விரைந்து பழுதாக நேரிடலாம். எஞ்சின் ஆயிலில் அதிகம் கழிவுகள் கலந்திருப்பதையே இந்த நிறம் உறுதிச் செய்கின்றன.
நான்காம் நிலை: மில்க்கி அல்லது கிரீமி: அதிக பழுப்பு நிறம் அல்லது கருப்பு நிறம், இதற்கு அடுத்த நிலையே இதுவாகும். இந்த நிலையில் எஞ்சினில் இருக்கும் ஆயில் இருக்கும் எனில் அதில் கூலண்டு ஆயில் லீக்கேஜ் இருக்கின்றது என்று அர்த்தம். இது எஞ்சினுக்கு மிகவும் ஆபத்தான நிலை ஆகும். இந்த நிலையிலும் கட்டாயம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஐந்தாம் நிலை: சிவப்பு நிறம், இதுவும் எஞ்சினுக்கு மிகவும் ஆபத்தான நிலை ஆகும். இந்த நிலை தென்படும் எனில் கசிவு அல்லது வேறு ஏதேனும் வழிகளில் எஞ்சினுக்குள் கழிவு ஏற்படும் சூழல் இருக்கின்றதா என்பதை செக் செய்துக் கொள்ளவும். இதனால்தான் உங்கள் எஞ்சின் ஆயில் சிவப்பு நிறத்தில் இருக்கும் எனில் அதை உடனடியாக கவனிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது.
ஆறாம் நிலை: பச்சை நிறம், எஞ்சின் ஆயிலில் வேறு ஒரு கலப்படம் ஏற்பட்டு இருப்பதை உறுதிச் செய்யக் கூடிய நிறமே இதுவாகும். எனவே இந்த நிறத்தில் உங்கள் வாகனத்தின் ஆயில் இருக்கும் என்றாலும் அதை உடனடியாக மாற்றுவதே நல்லது ஆகும். அத்துடன், என்ன மாதிரியான கலப்படம் அதில் ஏற்பட்டு இருக்கின்றது? அதை தவிர்ப்பது எப்படி என்பதுகுறித்த ஆய்வையும் வாகனத்தில் செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த சிக்கல் மீண்டும் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு இந்த ஆறு நிறங்களையும், அது குறிக்கக் கூடிய சிக்கல்கள் குறித்தும் கூறியிருக்கின்றது. இதில் முதல் நிறத்தை தவிர வேறு எந்த நிறத்தில் எஞ்சின் ஆயில் தென்பட்டாலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதையே ஃபடா உறுதிச் செய்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








