மீண்டும் கை மாறுகிறது மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானா பயன்படுத்திய ஆடி கார்!

By Saravana Rajan

மறைந்த வேல்ஸ் இளவரசி டயானா பயன்படுத்திய ஆடி 80 கேப்ரியோ கார் ஏலத்திற்கு வந்துள்ளது. 20ம் நூற்றாண்டில் உலக அளவில் மிகவும் பிரபலமான பெண்மணிகளில் ஒருவரான டயானா இந்த காரை மிகவும் விரும்பி வாங்கிய கார் மாடல் இது.

அப்போது பிரபலங்களின் சாய்ஸாகவும் இருந்தது. இந்த நிலையில், பலரது கைமாறிவிட்ட இந்த கார் ஏலம் மூலமாக புதிய உரிமையாளரின் கைகளுக்கு செல்ல இருக்கிறது. கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

ஏலத்திற்கு வந்தது மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் கார்!

1997ம் ஆண்டு டயானா விபத்தில் மரணமடைவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த காரை வாங்கினார். அதாவது, 1994ம் ஆண்டு இந்த காரை மேற்கு லண்டனில் உள்ள ஆடி கார் டீலர்ஷிப்பில் இருந்து இந்த காரை அவர் டெலிவிரி பெற்றார்.

ஏலத்திற்கு வந்தது மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் கார்!

1994ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் டயானா தனது மகன்களான இளவசர்கள் சார்லஸ் மற்றும் ஹாரி ஆகியோர் சிறுவர்களாக இருந்தபோது இந்த காரை அடிக்கடி பயணித்திருக்கிறார். அப்போது இந்த காருடன் ஏராளமான புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஏலத்திற்கு வந்தது மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் கார்!

இந்த புகைப்படங்கள் அப்போது இந்த காருக்கு கூடுதல் விளம்பரமாக அமைந்தது. இந்தநிலையில், கார் சேகரிப்பாளர் ஒருவரிடம் இருக்கும் இந்த பச்சை வண்ண ஆடி கார் அடுத்த மாதம் ஏலம் விடப்பட உள்ளது.

ஏலத்திற்கு வந்தது மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் கார்!

நவம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெற இருக்கும், என்இஎஸ் கிளாசிக் மோட்டார் ஷோவில் ஏலம் மூலமாக விற்பனை செய்யப்பட உள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த சில்வர்ஸ்டோன் ஏல நிறுவனம் இந்த காரை விற்பனை செய்யும் பொறுப்பை ஏற்றிருக்கிறது.

ஏலத்திற்கு வந்தது மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் கார்!

50,000 பவுண்ட் விலையில் இந்த கார் விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டயானா இந்த காரை வெறும் 4,000 மைல்கள் தூரம் பயன்படுத்தியிருந்தார். தற்போது 21,412 மைல்கள் தூரம் ஓடிய நிலையில் மீண்டும் விற்பனைக்கு வருகிறது.

ஏலத்திற்கு வந்தது மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் கார்!

22 ஆண்டுகள் பழமையான இந்த கார் புதுப்பிக்கப்பட்டு நல்ல கண்டிஷனில் உள்ளது. இந்த காரில் 5 சிலிண்டர்கள் கொண்ட 2.3 லிட்டர் எஞ்சின் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது.

ஏலத்திற்கு வந்தது மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் கார்!

டயானாவுக்கு பிறகு மூன்று உரிமையாளர்களை பார்த்துவிட்டு தற்போது நான்காவதாக ஒரு புதிய உரிமையாளரின் கையில் சென்று சேர இருக்கிறது.

ஏலத்திற்கு வந்தது மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் கார்!

இந்த கார் தவிர்த்து, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உள்பட, அந்நாட்டு அரச வம்சத்தினர் பயன்படுத்திய பல கார்களும் ஏலம் மூலமாக விற்பனை செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Late England Princess Diana's car goes up for Auction. Read in Tamil.
Story first published: Monday, October 10, 2016, 15:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X