இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் அதிகாரப்பூர்வ கார் விற்பனைக்கு வந்தது!

Written By:

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பயன்படுத்திய பென்ட்லீ லிமோசின் கார் விற்பனைக்கு வந்துள்ளது.

ஆட்டோ டிரேடர் என்ற இணையதளத்தில் இந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது. இரண்டு ஆண்டுகள் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் அதிகாரப்பூர்வ கார் மாடலாக பயன்படுத்தப்பட்ட இந்த காரை வாங்குவதற்கு கார் சேகரிப்பாளர் மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டிருக்கிறது.

அதிகாரப்பூர்வ கார்

அதிகாரப்பூர்வ கார்

கடந்த 2012ம் ஆண்டு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் வைர விழாவின்போது இந்த கார் அதிகாரப்பூர்வ காராக அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, இரண்டு ஆண்டுகள் சேவைக்கு பின்னர், 2014ம் ஆண்டு இந்த காருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது.

பயன்பாடு

பயன்பாடு

இரண்டு ஆண்டுகளில் 9,656 கிமீ தூரம் ஓடியிருக்கும் இந்த கார் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இந்த கார் நல்ல கண்டிஷனில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சாட்நவ் நேவிகேஷன்

சாட்நவ் நேவிகேஷன்

இந்த காரில் இருக்கும் சாட்நவ் நேவிகேஷனில் தற்போது வீட்டு முகவரியாக விண்ட்சர், பெர்க்ஷயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. வாங்குபவர் இந்த வீட்டு முகவரியை மட்டுமே மாற்ற வேண்டியிருக்கும். மற்றபடி மிக சிறப்பான கண்டிஷனில் உள்ளதாம்.

சாட்நவ் நேவிகேஷன்

சாட்நவ் நேவிகேஷன்

இந்த காரில் இருக்கும் சாட்நவ் நேவிகேஷனில் தற்போது வீட்டு முகவரியாக விண்ட்சர், பெர்க்ஷயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. வாங்குபவர் இந்த வீட்டு முகவரியை மட்டுமே மாற்ற வேண்டியிருக்கும். மற்றபடி மிக சிறப்பான கண்டிஷனில் உள்ளதாம்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

ராணி இரண்டாம் எலிசபெத் பயன்படுத்திய இந்த காரில் 6.75 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 20 இன்ச் அலாய் வீல்கள், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், சொகுசான இருக்கைகள் இருக்கின்றன. இந்த கார் மணிக்கு 296 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது.

ஏல விலை

ஏல விலை

2 லட்சம் பவுண்ட் அடிப்படை விலையில் இந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காரை வாங்குவதற்கு கார் சேகரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இரண்டாம் எலிசபெத் பயன்படுத்தும் கார்கள் இந்த காரின் சிறப்புகள் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

ஸ்டேட் கார்

ஸ்டேட் கார்

உலகம் முழுவதும் அரசியல் தலைவர்கள் பயன்படுத்தும் அதிகாரப்பூர்வ கார்கள் ஸ்டேட் கார்கள் என்று அழைக்கப்படுகிறது. அதேபோன்று, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பயன்படுத்தும் அதிகாரப்பூர்வ கார்களுக்கு ஸ்டேட் கார் என்று பொதுவான பெயரில் குறிப்பிடப்பட்டாலும், அவரது குடும்பத்தினர் பயன்படுத்தும் கார்களை ஒட்டுமொத்தமாக ராயல் கார்கள் என்றும் குறிப்பிடுகின்றனர்.

முந்தைய பென்ட்லீ கார்கள்

முந்தைய பென்ட்லீ கார்கள்

தற்போதைய பென்ட்லீ கார் மட்டுமின்றி, கடந்த 2002ம் ஆண்டு ராணி எலிசபெத் முடிசூட்டிய 50ம் ஆண்டு பொன்விழாவின்போது பென்ட்லீ நிறுவனம் 2 அதிகாரப்பூர்வ கார்களை தயாரித்து வழங்கியது நினைவிருக்கலாம்.

 முக்கிய விஷயம்

முக்கிய விஷயம்

இதுவரை நாம் கொடுத்திருக்கும் படங்களை பார்த்தவர்களுக்கு ஒரு விஷயம் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. ஸ்டேட் கார் என்று குறிப்பிடப்படும் இங்கிலாந்து ராணியின் அதிகாரப்பூர்வ கார்களில் நம்பர் பிளேட் இருக்காது. ஆனால், ராயல் கார்கள் எனப்படும் ராணியின் இதர கார்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பயன்படுத்தும் இதர கார்களில் நம்பர் பிளேட் பொருத்தப்பட்டிருக்கும்.

 புல்லட் புரூஃப் வசதி

புல்லட் புரூஃப் வசதி

விற்பனைக்கு வந்திருக்கும் இந்த காரில் இருந்த புல்லட் புரூஃப் கண்ணாடிகள் உள்ளிட்ட சில வசதிகள் அகற்றப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அரிது

அரிது

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கார் கலெக்ஷனை பார்த்தால் தலை சுற்றுகிறது. அவரிடம் 50க்கும் மேற்பட்ட கார்கள் உள்ளன. இதில், பெரும்பாலான கார்கள் விற்பனை செய்யப்பட்டதில்லை. இந்தநிலையில், பென்ட்லீ லிமோசின் கார் விற்பனைக்கு வந்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

மற்றொரு கார்

மற்றொரு கார்

இங்கிலாந்து ராணி முடிசூட்டப்பட்டதின் 60 ஆண்டுகள் நிறைவடைந்த வைர விழாவிற்காக பென்ட்லீ லிமோசின் கார் அதிகாரப்பூர்வ காராக அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிரபல கார் கஸ்டமைஸ் நிறுவனமான கான் டிசைன்ஸ் ஒரு மேபக் காரை ராணிக்காக கஸ்டமைஸ் செய்தது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இரட்டை வண்ணம், 20 இன்ச் அலாய் வீல்கள், காருக்கு இணையான விலை கொண்ட ஸ்பெஷல் நம்பர் பிளேட், 604 பிஎச்பி பவரை வாரி வழங்க வல்ல சக்திவாய்ந்த 6.0 லிட்டர் எஞ்சின் கொண்டதாக இருந்தது இந்த ஸ்பெஷல் கார். இறுதியில் இந்த கார் ஏலம் விடப்பட்டது.

பென்ட்லீ பென்டைகா

பென்ட்லீ பென்டைகா

உலகின் அதிவேக எஸ்யூவி மாடலாக வர்ணிக்கப்படும் பென்ட்லீ பென்டைகா எஸ்யூவியின் முதல் வாடிக்கையாளரும் ராணி இரண்டாம் எலிசபெத் என்பது குறிப்பிடத்தக்கது.

மான் வேட்டை

மான் வேட்டை

ஸ்காட்லாந்தில் இங்கிலாந்து அரச குடும்பத்துக்கு சொந்ததமாக பல்மோரல் ஹாலிடே எஸ்டேட் உள்ளது. கோடை காலத்தில் இரண்டாம் எலிசபெத் இங்கு விடுமுறையை கழிக்க வருவார். அப்போது, பாரம்பரிய வழக்கப்படி, வேட்டைக்கு செல்வர். அப்போது, இந்த எஸ்யூவியை பயன்படுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டது.

 சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இந்த எஸ்யூவியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 6.0 லிட்டர் டபிள்யூ12 எஞ்சின் மணிக்கு 301 கிமீ வேகம் வரை தொடச் செய்யும் வல்லை கொண்டது.

 டிரைவர் வேலை

டிரைவர் வேலை

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்திற்காக டிரைவர் தேவையென்று கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது நினைவிருக்கலாம். இதன்படி, நாள் ஒன்றுக்கு 10 நிகழ்ச்சிகளில் ராணி கலந்து கொள்வார். அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்று வருவதற்கான டிரைவர் பணிக்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

 தங்குமிடம் இலவசம்

தங்குமிடம் இலவசம்

வாரத்திற்கு 48 மணி நேரம் பணிபுரிய வேண்டியிருக்கும் டிரைவர் வேலைக்கு 37,000 டாலர் சம்பளம் தரப்படுகிறது. கார் பழுது நீக்குதலில் கைதேர்ந்தவராக இருக்க வேண்டும். அவருக்கு சாப்பாடு, தங்குமிடம் இலவசமாக தரப்படுகிறது.

இரண்டாம் எலிசபெத்

இரண்டாம் எலிசபெத்

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு தற்போது 90 வயது ஆகிறது. இங்கிலாந்து மன்னராக இருந்து வந்த ஆறாம் ஜார்ஜ் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டதையடுத்து, அவரது மகள் எலிசபெத் இங்கிலாந்து அரசியாக அறிவிக்கப்பட்டார். 1953ல் உலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு மிக பிரம்மாண்டமாக எலிசபெத் அரசியாக முடி சூடினார். அப்போது எலிசபெத்துக்கு வயது 26. பின்னர் லட்சக்கணக்கானோர் திரண்டிருந்த கூட்டத்துக்கு மத்தியில் ராணி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட அரியாசனத்தில் அமர வைக்கப்பட்டார்.

சொத்து மதிப்பு

சொத்து மதிப்பு

இங்கிலாந்து அரச குடும்பத்துக்கு ரூ.65,600 கோடி மதிப்புடைய சொத்துக்கள் இருக்கின்றன. அரண்மனைகள் தவிர பிற சொத்துக்களை அந்நாட்டு அரசு பராமரித்து வருகிறது. மேலும், அரண்மனை பராமரிப்பு மற்றும் அரச குடும்பத்தினரின் செலவுக்காக ராஜ குடும்பத்தின் சொத்துக்களிலிருந்து வரும் வருவாயின் லாபத்திலிருந்து 15 சதவீதத்தை ஆண்டுதோறும் ராணியின் சம்பளமாக அந்நாட்டு அரசு வழங்கி வருகிறது. ஆண்டுதோறும் ரூ.300 கோடி வரை வழங்கப்படுகிறது.

 

Images Source: Auto trader

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
England Queen Elizabeth II Bentley on sale.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark