தலையில் கட்டும் டர்பனுக்கு பொருத்தமாக கலர் கலரான ரோல்ஸ்ராய்ஸ் கார்களில் வலம் வரும் நிஜ சிங் இஸ் கிங்

Written By:
Recommended Video - Watch Now!
Tata Nexon Faces Its First Recorded Crash

'சிங் இஸ் கிங்' என்ற ஒரு சொல்லாடல் இந்தியாவில் மிக பிரபலம். திரைப்படங்கள் மற்றும் கதைகளில் வரும் சீக்கிய கதாபாத்திரத்திரங்களுக்கு இப்படியொரு வடிவம் எப்படியாவது கொடுக்கப்பட்டு விடும்.

ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு மேட்சிங்காக டர்பன் கட்டும் சிங்..!

இந்தியாவை பூர்விகமாக கொண்ட ரூபன் சிங் என்ற சீக்கியர், இங்கிலாந்தில் ஒரு நிஜ 'சிங் இஸ் கிங்'காகவே வாழ்ந்து வருகிறார்.

கார் காதலரான இவர், ட்விட்டரில் பக்கத்தில் புதிய வைரலை ஏற்படுத்தியுள்ளார். அதைப்பற்றிய தகவல்களை பார்க்கலாம்.

ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு மேட்சிங்காக டர்பன் கட்டும் சிங்..!

இங்கிலாந்தில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார் ரூபேன் சிங்.

முன்னதாக, 90-களில் இங்கிலாந்தை கலக்கிய 'மிஸ் ஏட்டிட்யூடு' என்ற ஆடை விற்பனை நிறுவனத்தை நடத்தி வந்தார்.

ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு மேட்சிங்காக டர்பன் கட்டும் சிங்..!

பல பெண்கள் விரும்பும் பிராண்டாக 'மிஸ் ஏட்டிட்யூடு' இருந்து வந்தது. அப்போது கோடிகளில் புரண்ட ரூபேன் சிங்கை ‘பிரிட்டிஷ் பில் கேட்ஸ்' என்று இங்கிலாந்தின் வணிக பிரிவு ஊடகங்கள் புகழ்ந்தன.

ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு மேட்சிங்காக டர்பன் கட்டும் சிங்..!

2007ம் ஆண்டில் தனது ஆடை தயாரிப்பு தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக. அந்நிறுவனத்தை ரூபேன் சிங் விற்றுவிட்டார்.

ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு மேட்சிங்காக டர்பன் கட்டும் சிங்..!

இனி இவர்அவ்வளவு தான் என பல பத்திரிக்கைகள் எழுதின. ஆனால் அதை சற்றும் பொருட்படுத்தாமல், ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கும் சேர்ந்து, தற்போது அதற்கு சி.இ.ஓ-வாக உயர்ந்துள்ளார் ரூபேன் சிங்.

Trending On DriveSpark Tamil:

புதிய ஹோண்டா எச்ஆர்வி ஃபேஸ்லிஃப்ட் மாடல் குறித்த தகவல்கள்: க்ரெட்டா போட்டியாளர்!

ஸ்கூட்டர் ஓட்டதெரியாமல் லாரி அடியில் விழுந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் உயிர் பிழைத்த பெண்கள்..!!

ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு மேட்சிங்காக டர்பன் கட்டும் சிங்..!

இங்கிலாந்தில் வாழ்ந்து வந்தாலும் மனதாலும், செயலாலும் இந்திய கலாச்சாரங்களை பின்பற்றி வருபவர் தான் இந்த ரூபேன் சிங்.

சீக்கிய மதத்தை பின்பற்றும் இவர் டர்பன் கட்டுவதை வழக்கமாக்கி கொண்டவர். இதைப்ப்பார்த்த ஒரு ட்விட்டர் வாசி டர்பனை 'பேன்டேஜ்' என்று கூற வெடித்தது கோபம்.

ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு மேட்சிங்காக டர்பன் கட்டும் சிங்..!

இங்கிலாந்தை சேர்ந்த அந்த ட்விட்டர் வாசிக்கு தக்க பதிலடி கொடுக்க நினைத்த ரூபேன் சிங், தலையில் கட்டும் டர்பனின் நிறத்திற்கு பொருத்தமான தோற்றம் கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்களுடன் புகைப்படம் எடுத்து பதிவிடுவதாக சவால் விட்டார். அதுவும் ஒரு வாரம் முழுக்க செய்வேன் என அவர் கூறினார்.

ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு மேட்சிங்காக டர்பன் கட்டும் சிங்..!

மஞ்சள் நிறம் தொடங்கி, அடர் பிரவுன், வெள்ளை, சிவப்பு, இலகுவான சாம்பல் நிறம் என பல வண்ணங்களில் டர்பன் கட்டி, அதற்கு மேட்சிங்காக ரோல்ஸ் ராய்ஸ் கார்களுடன் நின்று புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட தொடங்கினார் ரூபேன் சிங்.

ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு மேட்சிங்காக டர்பன் கட்டும் சிங்..!

இவரது இந்த பதிவுகள் பலரால் ரீ-ட்விட் செய்யப்பட்டன. குறிப்பாக இந்தியர்கள் ரூபேன் சிங்கின் ரோல்ஸ் ராய்ஸ் - டர்பன் மேட்சிங் பந்தயத்திற்கு பரவலாக ஆதரவு தெரிவித்தனர். ட்விட்டர் முழுக்க இது வைரலாக தொடங்கியது.

ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு மேட்சிங்காக டர்பன் கட்டும் சிங்..!

ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் வைத்திருப்பது பெருமையான மற்றும் ஆடம்பர அடையாளம். இது இந்தியாவிலும் அப்படித்தான், உலகளவில் பல நாடுகளிலும் இதே நிலை தான்.

ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு மேட்சிங்காக டர்பன் கட்டும் சிங்..!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நம்ம ஊர் ஸ்டார் விஜய் என பல நட்சத்திரங்கள் தலா ஒரு ரோல்ஸ் ராய்ஸ் காரை அவரவர் வசம் சொந்தமாக வைத்துள்ளனர்.

ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு மேட்சிங்காக டர்பன் கட்டும் சிங்..!

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான பணக்காரர்கள் மற்றும் பிரபலங்களிடம் கூட ஒன்றுக்கும் மேற்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார் இல்லை.

Trending On DriveSpark Tamil:

புதிய லெக்சஸ் என்எக்ஸ் 300எச் எஃப்- ஸ்போர்ட் காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

சன்னி லியோனை தொடர்ந்து மஸராட்டி கார் வாங்கிய 'சென்னை எக்ஸ்பிரஸ்' இயக்குநர்..!!

ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு மேட்சிங்காக டர்பன் கட்டும் சிங்..!

நிதர்சனம் இப்படியிருக்க, இங்கிலாந்தில் வாழும் இந்த இந்தியர், டர்பனுக்கு நிறத்திற்கு பொருத்தமான வண்ணங்களில் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் எதையும் ரூபேன் சிங் வாடகையாக வாங்கவில்லை என்பது தான் இங்கே பெரிய ஆச்சர்யம்.

ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு மேட்சிங்காக டர்பன் கட்டும் சிங்..!

ஆம், ட்விட்டரில் பதிவிடப்பட்ட புகைப்படங்கள் அனைத்திலும் இடம்பெற்றிருந்த கலர் கலர் ரோல்ஸ் ராய்ஸ் மாடல்கள் எல்லாமே ரூபேன் சிங்கின் சொந்த கார்கள். மொத்தம் ஏழு நாட்கள், ஏழு ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்.

ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு மேட்சிங்காக டர்பன் கட்டும் சிங்..!

குறிப்பாக அவரிடம் உள்ள வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் ஒன்றின் கூரைப்பகுதி சிவப்பு நிறத்திலானது. அதற்கு வேண்டி வெள்ளை நிற டர்பன் மற்றும் சிவப்பு நிற மேல் சட்டையுடன் புகைப்படத்தில் தோன்றிருந்தார்.

ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு மேட்சிங்காக டர்பன் கட்டும் சிங்..!

இந்தியாவில் இல்லாமல், இங்கிலாந்தில் ஒரு இந்தியர் ஏழு வேவ்வேறு நிறங்களில் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வைத்திருப்பது பல கார் ஆர்வலர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு மேட்சிங்காக டர்பன் கட்டும் சிங்..!

ரூபேன் சிங் தொடங்கி வைத்த இந்த டிரென்டை பல வலைதள வாசிகள் பின்பற்ற தொடங்கியுள்ளனர். கார் வித் பிக் என்ற பெயரில் ட்விட்டரில் பதிவிடப்பட்ட புகைப்படங்கள் மற்றும் பதிவுகள் இணையத்தில் டிரென்டிக்கின்றன.

அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன்னரே வாடிக்கையாளர்களை வந்தடையும் புதிய ஸ்விப்ட் கார்... வாவ்..!!

ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு மேட்சிங்காக டர்பன் கட்டும் சிங்..!

தங்களிடமிருக்கும் எந்த காராக இருந்தாலும், சில ஆர்வலர்கள் அதன் நிறத்திற்கு ஏற்றவாறு உடைகளை அணிந்து புகைப்படங்களை எடுத்து அவற்றை தொடர்ந்து இணையதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: England Sikh Billionare Matches His Turbans To His Rolls Royce for A week. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark