பிளாஸ்டிக்கை விற்றே ரூ8.89 கோடி காரை வாங்கிய தொழிலதிபர்! இதுக்கு 1.5 வருஷம் வெயிட் பண்ணிருக்காரு!
இந்தியாவில் காஸ்ட்லி கார்களை எல்லாம் பணக்காரர்கள்தான் வாங்குவார்கள் இதை தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் லாம்போர்கினி போன்ற சூப்பர் காரை பணக்காரர்கள் வாங்க வேண்டும் என்றாலும் நீண்ட காலம் அதை கனவு தான் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. அந்த காரின் விலை அதிகமாக இருக்கும். இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் லாம்போர்கினி 1.5 ஆண்டுகள் கனவு கண்டு வாங்கியுள்ளார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
கர்நாடக மாநிலம் மைசூருவை சேரந்தவர், வேதநாயகம், இவர் தொழிலதிபாராக இருந்து வருகிறார். இவர் பிரேம் இன்டஸ்ட்ரீஸ் என்ற நிறுனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனம் பேக்கேஜிங் பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் ஆகும். இந்நிறுனத்தில் பிளாஸ்டிக் கொண்டு பேக்கேஜிங் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் வளர்ந்து வரும் தொழிலதிபரான இவருக்கு சொந்தமாக ஒரு லாம்போர்கினி கார் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.

கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் லாம்போர்கினி நிறுவனத்தின் ரிவால்டோ காரை வாங்க முடிவு செய்து அந்த கார் குறித்து விசாரித்தார். அந்த காரின் விலை இவரது பட்ஜெட்டிற்கு அதிகமாக இருந்தது. ஆனால் எப்படியாவது அந்த காரை வாங்க வேண்டும் என யோசித்தார். சுமார் 1.5 ஆண்டுகள் கனவிற்கு பிறகு இவர் தற்போது லாம்போர்கினி ரிவால்டோ காரை சொந்தமாக்கியுள்ளார். இது தான் கர்நாடக மாநிலத்தின் முதல் லாம்போர்கினி ரிவால்டோ கார் ஆகும்.
கடந்த மே மாதம் தன் 1.5 ஆண்டுகள் கனவு கண்ட காரை சொந்தமாக்கியுளு்ளார். இந்த கார் ஆரஞ்ச் நிறத்தில் அவர் தேர்வு செய்துள்ளார். இந்த கார் இந்திய மார்கெட்டில் ரூ8.89 கோடி என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இது முழுமையான அம்சங்கள் கொண்ட வேரியன்டின் விலையாகும். இந்த காரை லாம்போர்கினி நிறுவனம் அவென்டேட்டர் காருக்கு மாற்றாக இந்த காரை விற்பனைக்கு கொண்டு வந்தது.

இந்த ரிவால்டோ காரின் வடிவமைப்பை பொருத்தவரை ஒய் வடிவ எல்இடி டிஆர்எல், ஹெக்ஸகோனல் வடிவிலான எக்ஸாஸ்ட் போர்ட்கள், முன்பக்கம் 20 இன்ச் வீல், பின்பக்கம் 21 இன்ச் வீல், சிஸர் வடிவ டோர்கள் என இவை வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் மோனோ ஃப்யூஸ்லேக் சேஸிஸ் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த லாம்போர்கினி ரிவால்டோ கார் மோனோ-ப்யூஸ்லேக் சேஸிஸ் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 6.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு வி12 பெட்ரோல் இன்ஜின் பொரத்தப்பட்டள்ளது. இந்த இன்ஜின் எடை குறைந்த அதே நேரம் அதிக ஃபவர்புல்லான இன்ஜினாக இருக்கிறது. இந்த இன்ஜின் 825 பிஎஸ் பவரையும் 725 என்எம் டார்க் திறனையும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இ்த காரில் பொருத்தப்பட்டுள்ள ஹைபிரிட் சிஸ்டம் 3.8 கிலோ வாட் ஹவர் லித்தியம் அயான் பேட்டரியால்இயங்கும் தன்மை கொண்டது. இது முன்பக்கம் உள்ள 2 எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் பின்பக்கம் உள்ள ஒரு எலெக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தமாக 1015 பிஎஸ் பவரையும், 807 என்எம் டார்க் தறினையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இந்த இன்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் நேரடியாக 8 ஸ்பீடு டுயல் கிளட்ச் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 2.5 நொடியில் பிக்கப் செய்துவிடும். இந்த கார் அதிகபட்சமாக 350 கி.மீ வேகத்தில் சீறிபாயும் அம்சம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிலதிபர் வாங்கும் முதல் காஸ்ட்லிகார் அல்ல இது. இவரிடம் மெர்சிடீஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி, ரோல்ஸ்ராய்ஸ் கல்லீனன், டிஃபென்டர் உள்ளிட்ட ஏகப்பட்ட கார்களை சொந்தமாக வைத்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தொழிலபர்கள் அதிக பணம் புழக்கம் இருப்பவர்களாக இருப்பார்கள் அவர்களுக்கே இந்த காரை வாங்குவது கனவாக இருக்கிறது. ரூ8 கோடிக்குஇந்த கார் விற்பனையாகிறது என்றால் சும்மாவா? பலர் இந்த காரை வாங்க வேண்டும் என்ற கனவில் இன்னும் இருக்கிறார். இவர் இந்த காரை சாலையில் எடுத்து செல்லும் போது ஓட்டு மொத்த ஊரே இவரை திரும்பி பார்க்கும்.


Click it and Unblock the Notifications








