இந்தியாவே பார்த்து வியக்கும் பெண் தொழிலதிபர்!! வைத்திருக்கும் லக்சரி கார்கள் மட்டும் பல கோடி ரூபாய்...
நமிதா தாபர் (Namita Thapar), இந்தியாவின் மருத்துவ இராணி என அழைக்கப்படும் தொழிலதிபர் மற்றும் 2 குழந்தைகளுக்கு தாய். புனேவை சேர்ந்தவரான நமிதா தாபர், எம்க்யுர் பார்மசிடிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தை நிர்வகிக்கும் நிர்வாக இயக்குனர் மற்றும் இன்கிரிடிபிள் வென்சர்ஸ் லிமிடெட் என்கிற நிறுவனத்தை நிறுவியவர். இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, பல தொழிலதிபர்களை உருவாக்கும் ஷார்க் டேங்க் இந்தியா என்கிற தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியில் முதலீடு செய்திருப்பவர் மற்றும் அந்த நிகழ்ச்சியின் நடுவரும் கூட. இவ்வாறு ஒரே நேரத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்துவரும் இரும்பு பெண் என்று கூட நமிதா தாபரை சொல்லலாம்.
செல்வந்தர்கள் என்றாலே அவர்களிடத்தில் ஏகப்பட்ட சொகுசு கார்கள் இருக்கும் என்பதை கூற வேண்டியதில்லை. அந்த வகையில், நமிதா தாபரிடமும் ஏகப்பட்ட சொகுசு கார்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. குறிப்பாக, பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ்-பென்ஸ், ஆடி போன்ற ஜெர்மன் கார்களில் நமிதா தாபர் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். இதனால், இந்த 3 பிராண்ட்களில் இருந்தும் தலா ஒரு கார் இவரிடம் உள்ளது. அவை என்னென்ன என்பதை பற்றி இனி பார்க்கலாம்.

மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.இ (Mercedes-Benz GLE): மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் லக்சரியான மிட்-சைஸ் எஸ்யூவி கார். முரட்டுத்தனமான தோற்றம், லக்சரியான வசதிகள் மற்றும் ஆற்றல்மிக்க என்ஜினை கொண்டிருப்பதால், நமிதா தாபரை போன்று ஜிஎல்இ காரை இந்தியாவில் நிறைய பேர் விரும்பி வாங்குகின்றனர். இந்த மெர்சிடிஸ் கார் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் கிடைப்பதில்லை.

2 லிட்டர் இன்லைன்-4 சிலிண்டர் மிட்-ஹைப்ரீட் டீசல் என்ஜின் மற்றும் 3 லிட்டர் டீசல் என்ஜின் என இரு விதமான டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது. இதில் எந்த டீசல் என்ஜின் ஆப்ஷன் உடன் நமிதா தாபர் ஜிஎல்இ காரை வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை. 2 லிட்டர் என்ஜின் ஆப்ஷனில் அதிகப்பட்சமாக கார் மணிக்கு 230கிமீ வேகத்திலும், 3 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனில் 250கிமீ வேகத்திலும் இயங்கக்கூடியதாக வழங்கப்படுகிறது.

பி.எம்.டபிள்யூ எக்ஸ்7 (BMW X7): இந்தியாவில் மக்களால் அதிக எண்ணிக்கையில் வாங்கப்படும் பிஎம்டபிள்யூ கார். பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் டீசல் என்ஜின் உடன் இந்த காரை நமிதா தாபர் வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வகையில் 3-லிட்டர் மைல்ட் ஹைப்ரீட் இன்லைன்-6 சிலிண்டர் டீசல் என்ஜின் நமிதா தாபரின் எக்ஸ்7 காரில் பொருத்தப்பட்டுள்ளது.
அதிகப்பட்சமாக 335 பிஎச்பி மற்றும் 700 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் மூலமாக எக்ஸ்7 காரில் இருந்து 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 5.9 வினாடிகளில் எட்டிவிட முடியும். எக்ஸ்7 காரில் வழங்கப்படும் 3 லிட்டர் மைல்ட் ஹைப்ரீட் இன்லைன்-6 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் மூலமாக அதிகப்பட்சமாக 375 பிஎச்பி மற்றும் 520 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம்.

ஆடி க்யூ7 (Audi Q7): டீசல் என்ஜின் ஆப்ஷன் இல்லாமல், பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே விற்பனை செய்யப்படும் ஆடி கார். ஆடியின் லக்சரி எஸ்யூவி காரான இது அதன் குவாட்ரோ ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டத்தின் மூலமாக உலகளவில் பிரபலமானதாக உள்ளது. பிளஸ் 55 மற்றும் டெக்னாலஜி 55 என 2 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த ஆடி லக்சரி காரில் பொருத்தப்படும் 3 லிட்டர் வி6 மைல்ட்-ஹைப்ரீட் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 335 பிஎச்பி மற்றும் 500 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 5.9 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த காரின் டாப்-ஸ்பீடு 250kmph ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மற்ற சினிமா நடிகர், நடிகைகளுடன் ஒப்பிடுகையில், தொழிலதிபர் நமீதா தாபரிடம் குறைவான லக்சரி கார்களே உள்ளன. இருப்பினும், வைத்திருக்கும் 3 லக்சரி கார்களையும் மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ, ஆடி என தரமான பிராண்ட்களில் இருந்து இவர் வாங்கியுள்ளார். மேலும், விலையுயர்ந்த கார்களை எஸ்யூவி உடலமைப்பில் வாங்குவதற்கு நமிதா தாபர் விரும்புவதை இந்த தொகுப்பின் மூலம் அறிய முடிகிறது.


Click it and Unblock the Notifications









