ஒரு குடும்பம் போற மாதிரியான பறக்கும் காரை தயாரிக்கும் சென்னை நிறுவனம்.. 2025 மார்ச்சுக்குள் ரெடியாகிடுமாம்!

சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் இ-பிளேன் (ePlane). இது பிளேன் மற்றும் ஹெலிகாப்டர் அல்லாத பறக்கும் திறன் கொண்ட மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனமே விரைவில் பறக்கும் எலெக்ட்ரிக் டாக்சியின் மாதிரி மாடலை உருவாக்க இருக்கின்றது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த பணிகள் தொடங்கிவிடும் என தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இ-பிளேன் நிறுவனம் விரைவில் இந்தியாவில் அதன் பறக்கும் டாக்சியை பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருக்கின்றது. இதற்கு முன்னதாக தன்னுடைய பறக்கும் டாக்சிக்கான முக்கிய சான்றிதழ்களைப் பெறுவது கட்டாயமாகி இருக்கின்றது.

eplane

இதன் அடிப்படையிலேயே அந்நிறுவனம் தனது பறக்கும் டாக்சியின் முன் மாதிரி மாடலை தயார் செய்வதற்கான பணியில் களமிறங்கி இருக்கின்றது. ஐஐடி மெட்ராஸ் (Indian Institute of Technology)-இன் ஒத்துழைப்பில் இயங்கும் நிறுவனமே இ-பிளேன் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிறுவனம் விரைவில் தன்னுடைய வர்த்தக பயன்பாட்டிற்கான ட்ரோன்களின் சேவையைத் தொடங்க இருக்கின்றது.

வரும் மாதங்களில் இந்த ட்ரோன் சேவை பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ட்ரோன்கள் 2 கிலோ முதல் 6 கிலோ வரையிலான எடையுள்ள பொருட்களைச் சுமக்கும் திறன் கொண்டது. இந்த ட்ரோன்களைக் கொண்டு டெலிவரி சேவையையே இ-பிளேன் சிறப்பிக்க இருக்கின்றது.

இந்த நிலையிலேயே தற்போது எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சியை உருவாக்கும் பணியிலும் இ-பிளேன் தீவிரம் காட்டிக் கொண்டிருக்கின்றது. நிறுவனத்தின் கூற்றின்படி, சாலை மார்க்கமாக செல்ல 60 நிமிடங்கள் வரை ஆகும் எனில், அதே இடத்திற்கு இ-பிளேன் தயாரிக்கும் எலெக்ட்ரிக் டாக்சியில் பயணித்தால் வெறும் 14 நிமிடத்திலேயே சென்று சேர்ந்துவிட முடியும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

மேலும், ஒரே நேரத்தில் 3 முதல் நான்கு பேர் வரை பயணிக்கும் வகையிலேயே தன்னுடைய பறக்கும் டாக்சியை உருவாக்கிக் கொண்டிருப்பதாக இ-பிளேன் தெரிவித்து இருக்கின்றது. இந்த பறக்கும் டாக்சிகள் பறப்பதற்கு ஓடு தளம் தேவைப்படாது. மேலும், அது தரையிறங்கவும் பெரிய மைதானம் போன்ற இடம் தேவைப்படாது.

ஹெலிகாப்படரைப் போல அது தரையிறங்க சிறிய இடமே போதுமானதாக உள்ளது. மேலும், இந்த பறக்கும் டாக்சி செங்குத்தாகவே வான் நோக்கும் எழும் திறன் கொண்டதாக. எனவேதான் இது பறக்க மற்றும் தரையிறங்க சிறிய இடமே போதுமானது என கூறப்படுகின்றது. இந்த மாதிரியான ஓர் பறக்கும் வாகனத்தையே சென்னையைச் சேர்ந்த இ-பிளேன் இந்தியாவிற்காக தயார் செய்துக் கொண்டிருக்கின்றது.

இதுபோன்ற பணியில் நம் சென்னை நிறுவனம் மட்டுமல்ல பிரபல விமான போக்குவரத்து சேவை நிறுவனமான இன்டர்குளோப் என்டர்பிரைசஸும் இதே மாதிரியான ஓர் பணியிலேயே ஈடுபட்டு வருகின்றது. அது அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்சர் ஏவியேஷன் உடன் இணைந்து இந்தியாவிற்கான பறக்கும் டாக்சிகளை தயார் செய்திருக்கின்றது.

முதலில் இதன் பறக்கும் டாக்சி சேவை தலைநகர் டெல்லியை மையமாகக் கொண்டே இயக்கப்பட இருக்கின்றது. 2026 ஆம் ஆண்டிற்குள் இந்த கனவு திட்டம் நிஜ வாழ்க்கையில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. இந்த பறக்கும் டாக்சியில் 7 நிமிடத்திலேயே டெல்லியில் இருந்து குருகிராம் போய்விட முடியும் என இன்டர்குளோப் தெரிவித்து இருக்கின்றது. ஆகையால், அதிக வேகத்தில் இந்த பறக்கும் டாக்சியில் பயணிக்க முடியும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னை நிறுவனம் மின்சார பறக்கும் டாக்சியை விரைவில் உருவாக்கி இருக்கின்றது என்பது தமிழகத்திற்கு ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமிதம் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. மேலும், இந்த நிறுவனத்தின் முயற்சியால் இன்னும் சில மாதங்களில் இந்தியா வான்வெளியில் பறக்கும் டாக்சிகள் பறக்கும் என்கிற சூழல் உருவாகி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 2, 2024, 5:00 [IST]
English summary
Eplane to develop electric air taxi prototype by next year march
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+