பைக் ஓனரை வைத்தே மின் விளக்கை உடைத்த ஈரோடு போலீஸ்.. அதிரடிக்கான காரணம் தெரிஞ்சா ஷாக் ஆய்டுவீங்க..!
ஈரோடு போலீஸார், பைக்கின் உரிமையாளர்களை வைத்தே வாகனத்தில் பொருத்தியிருந்த மின் விளக்குகளை சுத்தியலால் அடித்து உடைக்கச் செய்துள்ளனர். இதற்கான அதிர்ச்சிகரமான காரணத்தை இந்த பதிவில் காணலாம்.

எல்இடி மின் விளக்குகள் உலகின் மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்று. உலகெங்கிலும் வீடுகள் மற்றும் நிறுவனங்கள் என அனைத்து துறைகளிலும் இதன் பயன்பாடு அதிகரித்து காணப்படுகின்றது. குறிப்பாக, ஆட்டோமொபல்துறையில் இதன் பயன்பாடு மிக அதிகமாக வளர்ச்சியடைந்துள்ளது.
முன்னதாக காணப்பட்ட ஹாலோஜன் பல்புகளுக்கு பதிலாக எல்இடி மின் விளக்குகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இவை மலிவு விலைக் கொண்டதாகவும், குறைந்த ஆற்றல் நுகர்வு தன்மையைக் கொண்டிருப்பதாலும் இதன் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தே காணப்படுகின்றது. மேலும், விலை குறைந்த கார் மற்றும் பைக்குகளிலும் கூட இந்த வகை மின் விளக்குகளே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இருப்பினும், ஒரு சிலர் கூடுதல் அலங்காரங்களுக்காக தங்களது வாகனங்களில் சந்தைக்குப் பிறான எல்இடி மின் விளக்குகளை வாங்கி மாட்டிக் கொள்கின்றனர்.

ஒரு சிலர் தங்களது வாகனத்தில் எல்இடி மின் விளக்கு இடம்பெறாத காரணத்தாலும் ஆஃப்டர் மார்க்கெட் எல்இடி மின் விளக்குகளை வாங்கி மாற்றிக்கொள்கின்றனர். இத்தகைய சந்தைக்கு பிறகான எல்இடி மின் விளக்குகள் மிகவும் ஆபத்தானவை.
ஏனெனில், அவை வாகன உற்பத்தி நிறுவனங்கள் வழங்கும் எல்இடி விளக்குகளைக் காட்டிலும் அதிகம் பிரகாசமானதாக இருக்கின்றன.

குறிப்பாக, அடர்ந்த இருட்டான சாலையில் செல்லும்போது எதிரே வரும் வாகன ஓட்டிகளின் கண்களைக் குருடாக்கின்ற அளவிற்கு சந்தைக்கு பிறகான எல்இடி மின் விளக்குகள் வெளிச்சத்தை உமிழ்கின்றது.

இதனாலயே, சந்தைக்கு பிறகான வாகன அணிகலன்களில் மிகவும் ஆபத்தானவையாக எல்இடி மின் விளக்குகள் கருதப்படுகின்றன. ஆகையால், சந்தைக்கு பிறகான சைலென்சர்களைப் போலவே இந்த மின் விளக்குகள் மீதும் போலீஸார் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அத்தகைய ஓர் கடுமையான நடவடிக்கையைதான் ஈரோடு மாவட்ட காவல்துறையினர் ஆஃப்டர் மார்க்கெட் எல்இடி மின் விளக்குகளுக்கு எதிராக மேற்கொண்டிருக்கின்றனர்.
இதுகுறித்த வீடியோ ஒன்றையும் #TN_Police, #Eroded_District_Police ஆகிய ஹேஸ்டேக்குகளில் ஈரோடு மாவட்ட போலீஸார் அவர்களின் அதிகாரப்பூர்வ முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். முக்கியமாக இந்த வீடியோ பொதுநலன் கருதியே வெளியிடுவதாக அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த வீடியோவில், சட்டத்திற்கு புரம்பான வகையில் எல்இடி மின் விளக்குகளை ஏந்தியவாறு வந்த அனைத்து வாகனங்களையும் ஒரே இடத்தில் நிறுத்தி, அந்த வாகனங்களின் உரிமையாளர்களை வைத்தே மின் விளக்குகளைப் போலீஸார் உடைக்க வைத்துள்ளனர்.
தொடர்ந்து, எல்இடி மின் விளக்கினால் ஏற்படும் ஆபத்து மற்றும் பின் விளைவுகளை அறியாமல் அதனைப் பயன்படுத்தி வந்த உரிமையாளர்களுக்கு முழு விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.
இத்தகைய மின் விளக்குகளைப் பயன்படுத்த இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டாலும், விற்பனைச் செய்வதற்கு இன்னும் தடை விதிக்கவில்லை. அதேசமயம், குறிப்பிட்ட கிராமப்புறங்களில் அதாவது அடர்ந்த காடு போன்ற பகுதியில் இருப்பவர்களுக்கு இதுபோன்ற சந்தைக்குப்பிறகான எல்இடி மின் விளக்குகள் துணை விளக்குகளாக பயன்படுத்த இந்தியாவில் அனுமதி உண்டு. ஆனால், துணை மின் விளக்காக மட்டுமே இருக்க வேண்டும்.

மேலும், பயன்பாடு இல்லாத நேரங்களில் அவை கருப்பு நிற துணி அல்லது பை கொண்டு மூடப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக, சாலைகளில் செல்லும்போது அவை இவ்வாறு மூடப்பட்டிருக்க வேண்டும். அப்போது, அவர்கள் தெரியாமல் ஸ்விட்சை ஆன் செய்திருந்தாலும் எதிரில் வரும் வாகன ஓட்டிகளை துளியளவும் பாதிக்காது.

இந்த விதியை மீறி இந்த வாகனம் துணை மின் விளக்கை முக்கிய விளக்காக பயன்படுத்தினால், அபராதம் அல்லது இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும்.
இதுபோன்ற, அதிக வெளிச்சத்தை உமிழும் எல்இடி மின் விளக்குகள் அதிகளவில் நேருக்கு நேர் விபத்தை ஏற்படுத்துகின்றன. இது, சம்பவ இடத்திலேயே உயிரிழப்பை ஏற்படுத்தும்.

இதை விளக்கும் வகையிலேயே ஈரோடு போலீஸாரின் இந்த விழிப்புணர்வு நிகழ்வு உள்ளது. இதுபோன்ற, கடுமையான நடவடிக்கையில் ஈரோடு போலீஸார் களமிறங்குவது முதல் முறையல்ல.

இதற்கு முன்னதாகவும் இதுபோன்ற குறிப்பிட்ட நடவடிக்கைகளை ஈரோடு மாவட்ட போலீஸார் செய்திருக்கின்றனர். மேலும், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இதுபோன்ற சட்டத்திற்கு புரம்பான அக்ஸசெரீஸ்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்றன.
முக்கியமாக தமிழகத்தின் அண்டை மற்றும் வடக்கு பகுதி மாநிலங்களில் இத்தகைய நடவடிக்கை தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றது.


Click it and Unblock the Notifications








