ஒரே ஒரு படம் மூலம் தமிழ்நாட்டை மிரட்டிய நடிகையா இது! கார் கதவை திறந்து விட்றதுக்கே நீ நான்னு போட்டி போட்றாங்க!
இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனத்தின் கார்களுக்கு மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் பட்டாளம் இருக்கிறது. எனவே இந்தியாவின் சொகுசு கார் (Luxury Car) சந்தையை ஆண்டு கொண்டிருக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக பிஎம்டபிள்யூ திகழ்கிறது. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கார்கள், சொகுசு வசதிகளை மட்டுமல்லாது, கவர்ச்சிகரமான டிசைன் மற்றும் செயல்திறன் மிக்க இன்ஜின் ஆப்ஷன்கள் ஆகிய சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளன. இதனால்தான் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் வாடிக்கையாளர் வட்டம் மிகப்பெரியதாக இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரையில், தொழில் அதிபர்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் என பலரும் பிஎம்டபிள்யூ கார்களை வைத்துள்ளனர்.
முகேஷ் அம்பானி (Mukush Ambani), அமிதாப் பச்சன் (Amitabh Bachchan) மற்றும் ஷில்பா ஷெட்டி (Shilpa Shetty) போன்ற பிரபலங்களிடம் எல்லாம், பிஎம்டபிள்யூ சொகுசு கார்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) போன்றோரிடம் ஏராளமான பிஎம்டபிள்யூ கார்கள் உள்ளன.

எனவே இந்திய சாலைகளில் தொழில் அதிபர்கள், திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் போன்ற பிரபலங்களை, பிஎம்டபிள்யூ கார்கள் உடன் அடிக்கடி பார்க்க முடியும். இந்த வரிசையில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சொகுசு காரை பயன்படுத்திய ஒரு பிரபலத்தின் வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில் நாம் பார்க்கும் நபர், ஈஷா குப்தா (Esha Gupta) ஆவார். பிரபல பாலிவுட் நடிகையான இவர் தமிழில் ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டும் நடித்துள்ளார். யார் இவன் (Yaar Ivan) என்ற அந்த திரைப்படம், கடந்த 2017ம் ஆண்டு வெளியானது.

இது ஆக்ஸன் த்ரில்லர் (Action Thriller) திரைப்படம் ஆகும். தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவில், ஈஷா குப்தா பயன்படுத்தியதாக குறிப்பிடப்பட்டிருப்பது, பிஎம்டபிள்யூ 330எல்ஐ எம் ஸ்போர்ட் ப்ரோ எடிசன் (BMW 330Li M Sport Pro Edition) என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
இதன் எக்ஸ்-ஷோரூம் விலையே (Ex-showroom Price) 63.60 லட்ச ரூபாய் வரும். ஆன்-ரோடு விலை (On-Road Price) தோராயமாக 80 லட்ச ரூபாய் என்ற அளவில் வரும். விலை உயர்ந்த இந்த சொகுசு காரில், 2.0 லிட்டர் பெட்ரோல் (Petrol) இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் அதிகபட்சமாக 5,000 ஆர்பிஎம்மில் 255 பிஹெச்பி பவரையும், 1,550-4400 ஆர்பிஎம்மில் 400 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. சக்தி வாய்ந்த இன்ஜின் உடன், 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவை நன்றாக கவனித்தால், இரு வேறு இடங்களில் ஈஷா குப்தாவின் கார் கதவை 2 வெவ்வேறு நபர்கள் திறந்து விடுவதை நம்மால் பார்க்க முடிகிறது. அவர்கள் ஈஷா குப்தாவின் ரசிகர்கள் அல்லது ஊழியர்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பாலிவுட் திரையுலகின் மற்ற பெரும்பாலான நட்சத்திரங்களை போலவே, ஈஷா குப்தாவும் பிஎம்டபிள்யூ சொகுசு கார்களில் பயணம் செய்வதை அதிகமாக விரும்ப கூடியவர். ஏனெனில் அவரிடம் ஏற்கனவே பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் 520டி (BMW 5 Series 520d) கார் ஒன்று உள்ளது.


Click it and Unblock the Notifications








