கலப்பட பெட்ரோலை குடுத்து மக்களை ஏமாத்துறாங்க! கோர்ட்டுல இப்ப கேஸ் போட்டாங்க!
இந்தியாவில் தற்போது மத்திய அரசு கட்டாயமாக பெட்ரோலில் எத்தனால் கலப்பை செய்து வருகிறது. இதன் மூலம் வாகன ஓட்டிகள் கட்டாயம் எத்தனால் கலந்த பெட்ரோலை தான் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இது தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் மத்திய அரசு இப்படியாக எத்தனால் கலந்த பெட்ரோலை விற்பனை செய்வதற்கு எதிராக பொது நல வழக்கு ஒன்று தாக்கலாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாரங்கள்.
இந்தியா முழுவதும் மாசு கட்டப்பாட்டை ஏற்படுத்தவும், பொரோலுக்காக வெளிநாட்டுகளை சார்ந்திருப்பதை குறைப்பதற்காக மத்திய அரசு பெட்ரோலில் எத்தனாலை கலந்து விற்பனை செய்து வருகிறது. முதலில் 8-10 சதவீதமாக கலக்கப்பட்ட எத்தனால் அதன் பிறகு படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது 20 சதவீத எத்தனால் கலப்பை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.

இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்த பொது நல வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்ப்டடுள்ளது. இந்த மனுவில் மக்கள் பலருக்கு பெட்ரோலில் எத்தனால் கலப்பது குறித்த விழிப்புணர்வு இல்லை. ஆனால் கன்ஸ்யூமர் பாதுகாப்பு சுட்டம் 2019ன்படி இந்த தகவல் மக்களுகஅக தெரியப்படுத்தப்பட வேண்டும். 2023ம் ஆண்டு ஏப்ரல் மாத்திற்கு முன்பு தயாரிக்கப்பட்ட வாகனங்கள் பிஎஸ்6 வாகனங்களாகவே இருந்தாலும் இ20 பெட்ரோல் பயன்படுத்த ஏற்ற இன்ஜினை கொண்டிருக்காது.
அதிக எத்தனால் கலந்த பெட்ரோலை இந்த இன்ஜினில் பயன்படுத்துவதால் இன்ஜினில் அரிப்பு, ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பார்ட்களில் சேதாரம், குறைவான மைலேஜ், அதிக பாராமரிப்பு செலவு எல்லாம் ஏற்படும் என இந்த மனுவில் தெரிவிக்கபட்பட்டுள்ளது. மேலும் அரசு வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு போதுமான அவகாசம் கொடுக்காமல் இ20 பெட்ரோலை நடைமுறைக்கு கொண்டு வந்துவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த பொது நல வழக்கு பெட்ரோலியம் நிறுவனங்கள் எத்தனால் கலப்பு இல்லாத பெட்ரோலையும் விநியோகம் செய்ய வேண்டும் என்றும், பெட்ரோல் விநியோகம் செய்யும் இடத்தில் இது என்ன வகை பெட்ரோல் என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும் எனவும், பெட்ரோல் போட வாடிக்கையளர்கள் வரும்போது பம்ப் ஊழியர்கள் என்ன வகையான பெட்ரோல் போடப்படுகிறது என்பதை கட்டாயம் தெரிவிக்க வேண்டும் எனவும், நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் இது குறித்து ஒரு வரமுறைகளை கொண்டு வர வேண்டும் என தெரவித்துள்ளது. நீண்ட காலம் இ20 பெட்ரோலை சாதாரண இன்ஜினில் பயன்படுத்தினால் என்ன ஆகும் என்பது குறித்து ஆய்வு நடத்த வேணடும். என தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தப்படும். இதற்காக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதன் பிறகு தான் இது குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது இ20 ரக பெட்ரோலை தயாரிக்கிறது. இ20 ரக இன்ஜின் தவிர மற்ற இன்ஜின்களில் இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது என கூறினாலும் சிலர் பிரச்சனைகளை கண்டறிவதாக கூறுகின்றனர். இது குறித்து விரிவான ஆய்வை நடத்தினால் தான் உண்மை தெரியவரும். ஆய்வு முடிவு வெளியானால் தான் அரசு சொல்வது மக்கள் மத்தியில் நம்பிக்கையை தரும்.


Click it and Unblock the Notifications








