2025ம் ஆண்டில் கரும்பிலிருந்து அதிக பெட்ரோல்! மத்திய அரசு திட்டத்தில் இப்படி ஒரு மாற்றமா?
மத்திய அரசு பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டத்தை 2025ம் ஆண்டுக்குள் 20 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. அல்லது ஆண்டுக்கு 990 கோடி லிட்டர் அளவிலான எத்தனால் பெட்ரேலுடன் கலக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்காக தற்போது இந்தியாவில் கரும்பு மற்றும் தானிய விவசாயங்கள் அதிக அளவில் நடக்க வேண்டும் என சமீபத்தில் வெளியான ரிப்போர்ட் ஒன்றில் தகவல் கிடைத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்கள் எல்லாம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயிலிருந்துதான் பிரித்தெடுக்கப்படுகின்றன. இதனால் இந்தியாவிற்கு தேவையான எரிபொருளுக்கு வெளிநாட்டை களை சார்ந்து தான் இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இந்நிலையில் வெளிநாட்டு சார்பை குறைப்பதற்காக பல்வேறு விதமான திட்டங்களை மத்திய அரசு வகுத்து வருகிறது. அதன்படி பெட்ரோல் சேவையை குறைக்க பெட்ரோலுடன் எத்தனாலை கலக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

பெட்ரோலுடன் எத்தனாலை கலக்கும்போது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் அளவு குறைகிறது. இதனால் இந்தியா படிப்படியாக எரிபொருள் துறையில் தற்சார்பு அடையும் நிலையை ஏற்படுத்துவதற்காக இந்த திட்டத்தை வகுத்துள்ளது. 2025ம் ஆண்டு இந்தியாவில் விற்பனையாகவும் அனைத்து விதமான பெட்ரோல்களிலும் 20% எத்தனால் கலக்கப்பட வேண்டும் என்ற இலக்கை குறிவைத்து தற்போது மத்திய அரசு நகர்ந்து வருகிறது.
இந்நிலையில் இந்த இலக்கை எட்ட தற்போது இந்தியாவில் கரும்பு கொள்முதல் அதிகமாக தேவைப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கரும்பிலிருந்து சர்க்கரை எடுக்கும் வழிமுறையில் கழிவாக வெளியேறும் சக்கையில் இருந்து தான் எத்தனால் போன்ற எரிபொருள் தயாரிக்கப்படுகிறது. இதனால் இந்த சக்கையின் அளவு அதிகரித்தால் மட்டுமே எத்தனால் அதிக அளவில் தயாரிக்க முடியும். அப்படி என்றால் கரும்பை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்ற சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.

தற்போது இதுபோன்ற விவசாய கழிவுகளில் இருந்து ஆண்டு தோறும் சுமார் 350 கோடி லிட்டர் அளவிலான எத்தனால் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதை ஆண்டிற்கு 600 கோடி லிட்டராக மாற்ற வேண்டும் என தற்போது தெரியவந்துள்ளது. இதை செய்தால் மட்டுமே 2025 ஆம் ஆண்டுக்குள் 990 கோடி லிட்டர் அளவிலான எத்தனால் பெட்ரோலுடன் கலப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளன என தெரியவந்துள்ளது.
இதனால் இந்தியாவில் அதிக அளவிலான கரும்பை பயிர் செய்து அதை சர்க்கரைக்காக பயன்படுத்தக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு எத்தனாலை தயாரிக்கும் அளவு அதிகரித்தால் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதனால் சர்க்கரை அதிக அளவில் ஸ்டாக் இருக்க வேண்டிய தேவை இருக்கும். இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு சர்க்கரை ஏற்றுமதி என்பது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோலுடன் எத்தனாலை கலப்பதன் மூலம் வெளிநாட்டில் கச்சா எண்ணெய்க்காக எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இந்தியாவிற்கு குறையும் என்ற வாதம் தற்போது எழுந்துள்ளது. இந்தியாவில் தற்போது படிப்படியாக எத்தனாலை பெட்ரோலுடன் கலக்கும் அளவை அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு சீசனுக்கும் 200 முதல் 300 பேசிக் பாயிண்ட் வரை அதிகரிக்கப்பட்டு வருகிறது.
தற்போது கரும்பு விவசாயத்திலிருந்து மட்டும் ஆண்டுக்கு 250கோடி லிட்டர் எத்தனால் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த எத்தனால் தயாரிப்பிற்காக ஆண்டிற்கு 2.5மில்லியன் டன் அளவிலான சர்க்கரையும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த 2024ம் ஆண்டு மொத்தம் 14சதவீதமான எத்தனாலை பெட்ரோல் உடன் கலந்துவிட வேண்டும் என்ற திட்டத்தில் மத்தியஅரசு தீவிரமாக இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் தற்போது செய்து வருகிறது. இதற்கு தானியத்திலிருந்து எடுக்கப்படும் எத்தனாலின் அளவை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் போடப்பட்டுள்ளது.
2022ம் ஆண்டு எத்தனால் தயாரிப்பிற்காக அதிக அளவிலான சர்க்கரையை தயாரிக்கும் பட்சத்தில் 2015ம் ஆண்டு மொத்தம் 33.5 மில்லியன் டன் அளவிலான சர்க்கரைகள் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் அந்த காலகட்டத்தில் வெறும் 29.5 மில்லியன் அளவிலான சர்க்கரை மட்டுமே தேவையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீதமுள்ள சர்க்கரை எல்லாம் வெளிநாட்டிற்கு ஏற்றுமதியாக வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒவ்வொரு முழுதும் ஒரு லிட்டர் எத்தனால் தயாரிப்பதற்காக நான்கு மில்லியன் டன் அளவிலான சர்க்கரையை தயாரிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. எத்தனால் தயாரிப்புக்காக சர்க்கரை தயாரிப்பை அதிகரிக்கும் பட்சத்தில் அது சர்க்கரை மார்க்கெட்டில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இருந்தாலும் பெட்ரோல் விலையை ஒப்பிடும்போது இது மிகப்பெரிய பிரச்சினையாக இருக்காது என கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








