அரபு நாடுகளின் வாலை ஒட்ட நறுக்கிய மோடி அரசு! மொத்தமா முடிச்சு விட்டுட்டாங்க!
பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) என 2 மிக முக்கியமான எரிபொருட்களின் மூலப்பொருளாக கச்சா எண்ணெய் (Crude Oil) உள்ளது. இந்த கச்சா எண்ணெய் வளத்தால், உலகின் பல்வேறு நாடுகள் செல்வ செழிப்பில் திளைத்து வருகின்றன. ஆனால் இந்தியாவிடம் கச்சா எண்ணெய் வளம் கிடையாது.
எனவே தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 80 சதவீதத்தை இந்தியா இறக்குமதியின் மூலமாக மட்டுமே பூர்த்தி செய்து கொள்கிறது. ஆனால் இது இந்தியாவின் பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக மிகப்பெரிய தொகையை செலவிடுவதுதான் இதற்கு காரணம்.

எனவே கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க வேண்டும் என இந்திய அரசு விரும்புகிறது. இதன் ஒரு பகுதியாக பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் (Electric Vehicles) பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இது ஒரு வகையில் இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்சனையை குறைக்கவும் உதவி செய்யும் என்பது கூடுதல் பலம்.
எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதுடன் மட்டுமல்லாது, கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க வேண்டும் என்பதற்காக, பெட்ரோல் உடன் எத்தனால் (Ethanol) கலந்து பயன்படுத்துவதையும் மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இந்தியாவில் பெட்ரோல் உடன் எத்தனால் கலந்து பயன்படுத்துவது, கடந்த 11 ஆண்டுகளில், 1.5 சதவீதத்தில் இருந்து 19.97 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 260 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்க்கு பதிலாக எத்தனால் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் அந்திய செலாவணியில் (Foreign Exchange), 1.55 லட்சம் கோடி ரூபாயை இந்தியா மிச்சப்படுத்தியுள்ளது. இந்த தகவலை, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சரான ஹர்தீப் சிங் பூரி (Hardeep Singh Puri), நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பெட்ரோல் உடன் எத்தனால் கலந்து பயன்படுத்துவது இன்னும் பல்வேறு வழிகளில் பலன் அளிப்பதாக இருக்கும். குறிப்பாக எத்தனால் உற்பத்தி இந்தியாவை சேர்ந்த விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்திற்கு வழி ஏற்படுத்தி கொடுக்கும். அத்துடன் இந்தியாவின் கிராமப்புறங்களில் கூடுதல் வேலைவாய்ப்புகளையும் இது உருவாக்கும்.
மேலும் பெட்ரோல் உடன் எத்தனால் கலந்து பயன்படுத்துவதால், எரிபொருளுக்காக மற்ற நாடுகளை இந்தியா சார்ந்து இருக்கும் நிலையும் குறையும். அத்துடன் எத்தனாலை பெட்ரோல் உடன் கலந்து பயன்படுத்துவது, இந்தியாவின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் உதவி செய்யும். அதாவது எத்தனால் முழுமையாக எரியும் தன்மை உடையது. இதன் காரணமாக கார்பன் மோனாக்ஸைடு மற்றும் ஹைட்ரோகார்பன்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் வாயுக்களின் உமிழ்வு குறையும்.
இந்தியாவின் பல்வேறு நகரங்கள், குறிப்பாக தலைநகர் டெல்லி போன்ற நகரங்கள், காற்று மாசுபாடு பிரச்சனையில் சிக்கி மூச்சு திணறி வருகின்றன. இந்த பிரச்சனையை குறைக்கவும் எத்தனால் உதவி புரிகிறது என்பதால், பெட்ரோல் உடன் எத்தனால் கலந்து பயன்படுத்துவதை மத்திய அரசு மேலும் ஊக்குவிக்க விரும்புகிறது. எனவே வரும் காலங்களில் பெட்ரோல் உடன் கலக்கப்படும் எத்தனாலின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படலாம் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருகிறது.


Click it and Unblock the Notifications








