6 மாசம் வெயிட் பண்ணுங்க! இவி விலை தாறுமாறா குறையப்போகுது! இவரே சொல்லிட்டாரே!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான மோகம் மக்கள் மத்தியில் அதிகமாகி வருகிறது. மக்கள் பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க ஆர்வம் காட்டி வரும் சூழ்நிலையில், இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை பெட்ரோல்/டீசல் வாகனங்களின் விலைக்கு இணையாக மாறும் என மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். இது தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக பெட்ரோல்/டீசலுக்கு மாற்றாக மக்கள் பலர் இந்த ரக வாகனங்களை வாங்கி வருகின்றனர். இந்த வாகனங்கள் மார்கெட்டில் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் இந்திய மார்கெட்டில் பெட்ரோல்/டீசல் வாகனங்களை விட எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக உள்ளது.

Ev Cost Cut

இந்நிலையில் சமீபத்தில் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி ஒரு கூட்டத்தில் பேசும் போது இன்னும் 4-6 மாதத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை பெட்ரோல்/டீசல் வாகனங்களின் விலைக்கு சமமாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மக்கள் மாசு இல்லாத வாகனத்தை இனி குறைவான விலையில் வாங்கலாம் என தெரிவித்துள்ளார்.

சமபத்தில் FICCI உயர் படிப்பிற்கான 20வது மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர் இந்தியா பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளை சார்ந்து இருப்பது இந்திய சுற்றுசூழலுக்கு மட்டுமல்ல பொருளாதாரத்திற்கும் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி வருகிறது. ஆண்டிற்கு ரூ 22 லட்சம் கோடி எரிபொருட்களை இந்தியா இறக்குமதி செய்கிறது. இதனால் மிக அவசரமாக மாற்று எரிசக்தியை நோக்கி நாம் பயணிக்க வேண்டிய தேவை இருக்கிறது.

Ev Cost Cut

அடுத்த 4-6 மாதங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை பெட்ரோல் வாகனங்களின் விலைக்கு சமமாக வரும் என கூறினார். இதற்கு தொழிற்நுட்பவளர்ச்சி அதிக உற்பத்தி காரணமாக தயாரிப்பு செலவு குறைவு ஆகிய காரணங்களால் இந்த வாகனங்களின் விலை கணிசமாக குறையும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும் போது அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா ஆட்டோமொபைல் மார்கெட்டில் உகலின் நம்பர் 1 நாடமாக மாறும் என தெரிவித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இந்திய ஆட்டோமொபைல் மார்கெட்டின் மதிப்பு ரூ14 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது இது ரூ22 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவித்து்ளார். பாலிசி மாற்றம், தொழிற்நுட்ப வளர்ச்சி, மாற்று எரிசக்தி உள்ளிட்டவை இதற்கு முக்கியமான காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

Ev Cost Cut

தற்போது அமெரிக்காதான் உலகின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் மார்கெட்டாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அந்நாட்டின் ஆட்டோமொபைல் மார்கெட் மதிப்பு ரூ78 லட்சம் கோடியாக இருப்பதாகவும், அடுத்த இடத்தில் சீனா 47 லட்சம் கோடியில் இருப்பதாகவும், 3 இடத்தில் இந்தியா இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் பெட்ரோலில் எத்தனால் கலப்பது மூலம் இந்திய விவசாயிகள் அதிக லாபம் ஈட்டி வருவதாக குறிப்பிட்டுள்ளார். இதுவரை இந்திய விவசாயிகள் எத்தனால் தயாரிப்பு மூலம் ரூ45,000 கோடி வருமானத்தை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சுற்றுசூழலுக்கு ஏற்படும் மாசும் குறையும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை அதிக எண்ணிக்கையில் தயாரித்தால் விலை குறையும் என்ற நோக்கில் இவர் இதை பேசியுள்ளார். விற்பனை தொடர்ந்து அதிகரித்தால் மட்டுமே இது சாத்தியம். எலெக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரி தயாரிக்கும் விலையை குறைத்தால் நிச்சயம் மிகப்பெரிய அளவில் விலை குறையும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 7, 2025, 14:20 [IST]
English summary
Ev cost cut gadkari says price parity with petrol cars soon
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X