வீட்டுல இவியை வேகமா சார்ஜ் போட்டா ஃபிரிட்ஜ், வாசிஷ் மெஷின் எல்லாம் புகைஞ்சிடுமா?
இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. வாகன தயாரிப்பு நிறுவனங்களும் ஏகப்பட்ட எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க துவங்கிவிட்டனர். ஆனால் எலெக்ட்ரிக் கார்களை வீட்டில் ஃபாஸ்ட் சார்ஜ் போடும் போது இந்த விஷயத்தை கவனிக்காமல் வீட்டில் உள்ள மற்ற எலெக்ட்ரானிக் பொருட்கள் பாதிக்கப்படும் என்பது உங்களுக்கு தெரியுமா? இது குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே காணப்போகிறோம்.
இன்று மார்கெட்டில் விற்பவனை செய்யப்படும் எலெக்ட்ரிக் கார்களுக்கு ஹோம் சார்ஜர்கள் வழங்கப்படுகின்றன. இந்த சார்ஜர்களை நாம் வீட்டிலேயே பொருத்தி எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்து கொள்ள முடியும். ஆனால் வீட்டில் உள்ள சார்ஜிரில் எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் ஏற்றினால் மெதுவாக தான் சார்ஜ் ஏறும் சொல்லப்போனால் சார்ஜ் ஏற பல மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.

இதற்கு மாற்றாக பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஃபாஸ்ட் சார்ஜர்களை கூடுதல் தயாரிப்பாக விற்பனை செய்து வருகின்றனர். வாடிக்கையாளர்கள் விரும்பினால் அந்த சார்ஜர்களை பணம் கொடுத்து பெற்றுக்கொள்ள முடியும். அதை வாங்கி வீட்டில் பொருத்திவிட்டால் வீட்டில் சார்ஜ் போடும் போது சார்ஜ் வேகம் அதிகம் ஆகும். இதனால் விரைவாக சார்ஜ் போட்டு விடலாம்.
இது பொதுவாக தெரிந்த விஷயம் தான். இருந்தாலும் நம் வீடுகளில் பெரும்பாலும் சிங்கிள் பேஸ் எலெக்ட்ரிக் கரெண்டை தான் பயன்படுத்துவோம். ஆனால் பாஸ்ட் சார்ஜர்கள் பல பொருத்துவதற்கு 3 பேஸ் கரெண்ட் தேவைப்படலாம். 3 பேஸ் கரெண்ட்டில் வேலை செய்யும் ஒரு சார்ஜரை சிங்கிள் பேஸ் கரெண்ட் மட்டும் இருக்கும் வீட்டில் போட்டால் சார்ஜர் போட்டவுடன் வீட்டில் ஃபீல் போகும் அல்லது அந்த நேரத்தில் கரெண்டில் கனெக்டாகியிருக்கும் எலெக்ட்ரானிக் சாதனங்களை பாதிப்படைய வைக்கும்.

அப்படி என்றால் எந்த சார்ஜர் சிங்கிள் பேஸில் இயங்கும்? எந்த சார்ஜர், 3 பேஸ் கரெண்டில் இயங்கும் என்பதை எப்படி கண்டுபிடிப்பது? இது மிக சுலபம் தான். சிங்கிள் பேஸ் கரெண்டால் அதிகபட்டசம் 4kW பவரை வழங்க முடியும். உங்கள் சார்ஜர் இந்த பவருக்குள் இருந்தால் நீங்கள் இந்த சார்ஜரை பயன்படுத்தலாம். 3 பேஸ் கரெண்டால் அதிகபட்சம் 112kw பவரை வழங்க முடியும். 4 kW பவருக்கு மேல் உங்கள் சார்ஜர் இருந்தால் அதை நீங்கள் 3 பேஸ் கரெண்டில் மட்டுமே பொருத்த வேண்டும்.
நீங்கள் ஒரு 50kWh பேட்டரியுடன் கூடிய ஒர எலெக்ட்ரிக் காரை பயன்படுத்துகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். இதை சிங்கிள் பேஸ் கொண்ட 4 kW சார்ஜரை கொண்டு சார்ஜ் ஏற்றினால் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஏற 10-12 மணி நேரம் வரை செலவாகும். இதுவே மார்கெட்டில் வீட்டி்ல் வைத்து சார்ஜ் ஏற்ற வழங்கப்படும் 22kW பவர் தரும் ஃபாஸ்ட் சார்ஜரை கொண்டு சார்ஜ் ஏற்றினால் 2-3 மணி நேரம் வரை மட்டுமே சார்ஜ் ஏற எடுத்துக்கொள்ளும்.

இன்று மார்கெட்டில் உள்ள பெரும்பாலான ஹோம் சார்ஜர்கள் சிங்கிள் பேஸ் கரெண்டிலேயே சிறப்பாக வேலை செய்யும் திறன் கொண்டவைகள் தான். 3 பேஸ் கரெண்டில் வேலை செய்யும் சார்ஜர்களை வாங்கினாலே உங்கள் வீட்டில் 3பேஸ் கரெண்ட் இருக்கிறதா என வாங்கும் இடத்தில் கேட்ட விடுவார்கள். இதை இன்ஸ்டால் செய்யும் போதாவது இது குறித்த தகவல் உங்களுக்கு வந்துவிடும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 3 பேஸ் கரெண்ட் என்பது அதிக பவரை கொண்டது. அதிக திறன் கொண்ட சாதனங்களை பயன்படுத்த முடியும். இதனால் நீங்கள் ஃபாஸ்ட் சார்ஜரை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்றால் நீங்கள் வீட்டில் 3 பேஸ் கரெண்ட் கனெக்ஷன் வைத்திருக்க வேண்டும் இல்லை என்றால் உங்கள் வீட்டில் உள்ள மற்ற எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.


Click it and Unblock the Notifications









