இவி வச்சிருக்கீங்களா? ஐடி ரிட்டன் போடும் போது ஈஸியா ரூ1.5 லட்சத்தை குறைக்கலாம் எப்படி தெரியுமா?
தற்போது இந்தியாவில் கடந்த நிதியாண்டிற்கான வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் பலர் வருமான வரியை தாக்கல் செய்யும் பணியில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கிய பலர் அந்த வாகனத்திற்காக பெறப்பட்ட கடனுக்கான வட்டி தொகையை வருமானத்தில் கழித்து கொள்ளும் ஆப்ஷன் இருக்கிறது. இது பலருக்கும் தெரியாத அம்சமாக இருக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஒவ்வொரு நிதியாண்டிற்கும் குறிப்பிட்ட அளவிற்கு மேல் சம்பாதிப்பவர்கள் தங்கள் வருமான வரி கணக்குகளை சமர்பித்து அதற்கான வரியை செலுத்த வேண்டும். அல்லது வரி ஏற்கனவே அதிகமாக பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் அந்த தொகையை திரும்ப பெற வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது அவசியம்.

இந்நிலையில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் போது வருமானத்தில் நீங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை கடன் மூலம் வாங்கியிருந்தால் அதற்கு செலுத்திய வட்டி தொகையை நீங்கள் வருமான வரியிலிருந்து கழித்துக்கொள்ள முடியும். இதற்காக 80EEB என்ற பிரிவு இருக்கிறது. இது குறித்து பலருக்கும் தெரியாது.
இந்த பிரிவில் கீழ் நீங்கள் சம்பாதித்த பணத்தை இதற்காக செலவு செய்திருந்தால் அதிகபட்சமாக ரூ1.5 லட்சம் வரை இதில் குறைத்துக்கொள்ள முடியும். இது எலெக்ட்ரிக் வாகனத்தை கடன் மூலம் வாங்கியவர்கள் குறிப்பிட்ட நிதியாண்டில் அந்த கடனுக்கு கட்டிய வட்டியை மட்டுமே கணக்கிட்ட கழிக்க முடியும்.

இந்த வருமான வரியில் வட்டி தொகையை குறைக்கும் வாய்ப்பை மத்திய அரசு கடந்த 2019-20ம் நிதியாண்டில் அறிவித்து 2020-21ம் நிதியாண்டில் அமலுகு்கு கொண்டு வந்தது. ஆனால் இந்த சலுகை கடந்த 2023ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை வாங்கப்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான கடன் வட்டியை கழிக்க முடியாது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன விற்பனையை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு வழங்கிய சலுகை. தற்போது இது செயல்பாட்டில் இல்லை. அந்த காலகட்டத்தில் வாகனத்தை வாங்கி தற்போது அதற்கான கடன் கட்டிக்கொண்டிருந்தால் அந்த கடனுக்கான வட்டியை இந்த திட்டத்தின் கீழ் தள்ளுபடி செய்து கொள்ளலாம். இதுவும் பழைய வரி விதிப்பு முறையில் இருப்பபவர்கள் மட்டுமே இந்த சலுகையை அனுபவிக்க முடியும்.

புதிய வரிவிதிப்பு முறையை பின்பற்றுபவர்கள் இந்த சலுகைகளை பெற முடியாது. இந்தியாவில் தற்போது ஆண்டிற்கு ரூ12 லட்சத்திற்குள் குறைவாக சம்பாதிப்பவர்களுக்கு இந்த நிதியாண்டு முதல் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வருமான வரி விலக்கு வழங்கியது நிச்சயம் பாராட்ட தக்கது தான். ஆனால் தற்போது இந்த சலுகை இல்லை என்பது ஏமாற்றம் தான். எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு தற்போதும் இந்த சலுகையை வழங்கினால் நிச்சயம் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









