சிட்டியை விட கிராமத்துல தான் அதிகமாக இவி விக்குதா? இந்த விஷயம் அரசுக்கே தெரியாது போலயே!
சமீப காலமாக இந்தியாவில் டயர் 1 நகரங்களை விட டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில் இணைந்து எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகமாக இருப்பதாக சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கை ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது. ஏன் இப்படி டயர் 2 மற்றும் 3 நகரங்களில் டயர் 1 நகரங்களை விட அதிகமாக எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகிறது? இதற்கு பின்னால் உள்ள உளவியல் என்ன? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சமீபத்தில் ஜேஎஸ்டபிள்யூ ரிசர்ச் என்ற நிறுவனம் ஒயிட் பேட்டர் -INDIA'S EV SHIFT: How Small Cities Are Driving Big Change என்ற பெயரில் புதிய ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையில் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் எந்தளவிற்கு ஊடுருவியுள்ளது என்ற தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் டயர் 1 நகரங்களுக்கு இணையாக டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களிலும் விற்பனை அதிகரித்து வருவதை காண முடிகிறது.

கடந்த நிதியாண்டுகளை காட்டிலும் இந்தியவாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகன ஊடுருவல் அதிகமாகியுள்ள நிலையில் இதற்கு டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில் அதிக பங்கு வகித்துள்ளன. இந்தியாவில் டயர் 1 நகரங்களை விட டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்கள் தான் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருப்பதாக கருத்து ஒன்றும் நிலவி வருகிறது.
ஜேஎஸ்டபிள்யூ ரிசர்ச் நிறுவன ஆய்வறிக்கையின் படி எலெக்ட்ரிக் வாகன ஊடுருவலை பொருத்தவரை கடந்த 2016ம் நிதியாண்டில் டயர் 1 நகரங்களில் 0.44 சதவீதமும், டயர் 2 நகரங்களில் 0.17 சதவீதமும், டயர் 3 நகரங்களில் 0.08 சதவீதமாகவும் இருந்தது. இது எலெக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகுமான காலகட்டம் என்பதால் இந்த காலகட்டங்களில் பெரிய அளவில் விற்பனை இல்லை என்பதால் அடுத்த சில ஆண்டுகளுக்கு பெரிய அளவில் எலெக்ட்ரிக் வாகன ஊடுருவல் அதிகமாகவில்லை.

கடந்த 2021ம் நதியாண்டு வரையில் பெரிய மாற்றம் இல்லாத நிலையில் இந்த மாற்றம் 2022ம் நிதியாண்டிலிருந்து தென்படுவது தெளிவாக தெரிய துவங்கியுள்ளது. 2022ம் நிதியாண்டில் டயர் 1 நகரங்களில் 5.73 சதவீதமும், டயர் 2 நகரங்களில் 4.16 சதவீதமும், டயர் 3 நகரங்களில் 1.69 சதவீதமும் ஊடுருவல் இருந்துள்ளது.
கடந்த 2025ம் நிதியாண்டில் டயர் 1 நகரங்களில் 12.82 சதவீதமும், டயர் 2 நகரங்களில் 1067 சதவீதமும், டயர் 3 நகரங்களில் 8.68 சதவீதமும் அதிகமாகியுள்ளது. அதன்படி பார்த்தால் டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களை சேர்த்து பார்க்கும் போது அது டயர் 1 நகரங்களில் ஏற்பட்ட ஊடுருவதை விட அதிகமாக இருக்கிறது. இது கடந்த நிதியாண்டு மட்டுமல்ல அதற்கு முன்னர் 3 நிதியாண்டுகளாக உள்ள நிலைமை தான் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த அறிக்கையில் உள்ள தகவலின் படி தமிழக நகரங்களை ஒப்பிட்டுபார்க்கும் போது சென்னையில் 14.83 சதவீதமும், கோவையில் 6.62 சதவீதமும், மதுரையில் 4.05 சதவீதமும் எலெக்ட்ரிக் வாகன ஊடுருவல் இருப்பதாலக தெரியவந்துள்ளது. டயர் 1 நகரங்களை விட டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில் தான் அதிகமாக எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகும் சூழ்நிலை இருக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.
டயர் 1 நகரங்களில் அதிக போக்குரவரத்து நெருக்கடி இருக்கிறது. அதை ஒப்பிடும் போது டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில் போக்குவரத்து நெருக்கடி மிக குறைவு தான். அடுத்தாக பயணிக்கும் தூரம் பெரு நகரங்களில் அதிகமாக உள்ளது, டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில் மக்கள் சராசரியாக பயணிக்க வேண்டிய தூரம் குறைவாக இருப்பதால் அதற்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் ஏற்றதாக இருக்கிறது. தற்போது உள்ள எலெக்ட்ரிக் வாகனங்களில் அதிக ரேஞ்ச் இல்லை என்பதால் பெரு நகரங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களை இயக்க சார்ஜ் போதாமல் போக வாய்ப்புள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் போட அதிக நேரம் தேவைப்படும். பெரு நகரங்களில் அப்பார்ட்மென்ட் கலாச்சாரம் இருப்பதால் சார்ஜிங் பிரச்சனை இருக்கிறது. டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில் அப்பார்ட்மென்ட் கலாச்சாரம் குறைவு, தனி வீடுகள் என்பதால் அங்குள்ள மக்களுக்கு சார்ஜ் போடுவது பெரிய தலைவலி கிடையாது. அதே நேரம் எலெக்ட்ரிக் கட்டணமும் டயர் 1 நகரங்களில் அதிகமாகவும், டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில் குறைவாகவும் இருக்கிறது.
தமிழகத்தில் சென்னைக்கும் மற்ற நகரங்களுக்கும் எலெக்ட்ரிக் கட்டணத்தில் வேறுபாடு இல்லை என்றாலும் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு நகர் பகுதிக்கும் மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கும் எலெக்ட்ரிக் கட்டணத்தில் மாறுபாடு இருக்கிறது. இதுவும் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் முடிவை எடுக்கும் முன் வாடிக்கையாளர்களின் மன நிலையை மாற்ற வாய்ப்புள்ளது.
இது போக டயர் 2 மற்றும் டயர் 3 பகுதிகளில் மிடில் கிளாஸ் குடும்பத்தினர் அதிகமாக இருக்கின்றனர். இவர்கள் எப்படியாவது காசு மிச்சம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பார்கள். தற்போது 2வீலர் செக்மெண்டில் எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிகமாக விற்பனயைாவதால் இந்த பகுதிகளில் உள்ள மக்கள் புதிய டூவீலரை வாங்கும் போது அதிக லாபகரமாக இருக்கும் என்பதால் எலெக்ட்ரிக் டூவீலர்களை அதிகம் தேர்வு செய்கின்றனர்.
ஜேஎஸ் டபிள்யூ ரிசர்ச் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்விறிக்கையின்படியும். கடந்த 2016ம் ஆண்டு முதல் கடந்த 2025ம் நிதியாண்டு வரை டயர் 1 நகரங்களில் 58.53 சதவீதம் எலெக்ட்ரிக் டூவீலர்கள் தான் விற்பனையாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கு டயர் 2 மற்றும் டயர் 3 நிறுவனங்கள் சளைத்தது இல்லை என்பது போல டயர் 2 நகரங்களில் 57.84 சதவீதமும், டயர் 3 நிறுவனங்களில் 70.94 சதவீதமும் எலெக்ட்ரிக் டூவீலர்கள் தான் விற்பனையாகியுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன ஊடுருவல் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. டயர் 1 நகரங்களை விட டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களின் விற்பனை கணிசமாக அதிகமாக வருகிறது. எதிர்காலத்தில் இந்த நகரங்களின் விற்பனை டயர் 1 நகரத்தின் விற்பனையை முந்தி செல்ல வாய்ப்புள்ளது. இந்த டிரெண்டை புரிந்து கொண்டு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான கட்டுமானத்தை அரசும், நிறுவனங்களும் டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்கள் பக்கம் திருப்ப வேண்டிய காலம் இது.


Click it and Unblock the Notifications









