எலெக்ட்ரிக் கார்களின் விலை குறையப்போகுது! டெஸ்லா வரனும்னு எல்லாத்தையுமே மாத்திட்டாங்க!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பை அதிகப்படுத்த வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வரியை 110 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்க முடிவு செய்துள்ளது. ஆனால் இது அனைத்து விதமான நிறுவன கார்களுக்கும் கிடையாது. குறிப்பிட்ட விதிமுறையை பின்பற்றும் வாகன நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த இறக்குமதி விலையில் தள்ளுபடி பொருந்தும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மத்திய கனரக தொழிற்துறை அமைச்சகம் சார்பில் புதிய எலெக்ட்ரிக் வாகன பாலிசி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பாலிசிக்கும் ஸ்கீம் டூ புரோமோட் மேனுஃபேக்சரிங் எலெக்ட்ரிக் கார் இன் இந்தியா SPMPCI என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தற்போது 110 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படும் கார்களுக்கு 15 சதவீதமாக இந்த இறக்குமதி வரி குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

EV Policy Import Duty Cut

இந்த SPMPCI திட்டம் மூலம் காரை குறைந்த இறக்குமதி வரியில் செய்ய வேண்டும் என்றால் அந்நிறுவனம் பல்வேறு விதமான கட்டுபாடுகளுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும். இந்நிறுவனம் அடுத்த 3 ஆண்டுகளாில் இந்தியாவில் 500 மில்லியன் டாலர் அதாவது இந்தியாவில் ரூ4150 கோடி முதலீட்டை கொண்டு வர வேண்டும். இதன் மூலம் அந்நிறுவனம் எலெக்ட்ரிக் வான கட்டுமான ஆலைகளை கட்டமைக்க வேண்டும்.

இது மட்டுமல்ல ஏற்கனவே மற்ற நிறுவனம் நடந்தி வரும் ஆலையில் அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து இந்த நிறுவனத்திற்கான தயாரிப்பு ஆலையில் தனியாக தயாரிப்பு லைன் அப்பை உருவாக்கி கூட வாகன தயாரிப்பை செய்யலாம் அதற்கான இடம், கட்டிடத்திற்கான முதலீட்டை குறைத்துக்கொள்ளலாம். இரண்டாவதாக இந்தியாவில் வாகனங்களை இறக்குமதி செய்யும் போது இந்நிறுவனம் குறிப்பிட்ட அளவு டர்ன் ஓவர் செய்ய வேண்டும்.

EV Policy Import Duty Cut

இரண்டாம் ஆண்டு 2500 கோடியும், 5ம் ஆண்டில் 5000 கோடியும், 7ம் ஆண்டில் 7500 கோடியும் டார்ன் ஓவர் செய்ய வேண்டம். இதில் மூன்றாம் ஆண்டில் தயாரிப்பு ஆலையை துவங்கியிருக்க வேண்டும். அதில் 25 சதவீதம் உள்ளூர் பொருட்களை வாகனங்களில் பயன்படுத்த வேண்டும். 5ம் ஆண்டு இறுதிக்குள் 50 சதவீதமான இதை உயர்த்த வேண்டும்.

இது மட்டுமல்லாமல் அனைத்து வாகனங்களுக்கும் இந்த இறக்குமதி வரியில் தள்ளுபடியை பெற முடியாது. ஆண்டிற்கு 8000 பிரிமியம் இவி வாகனங்களுக்கு மட்டுமே இந்த தள்ளுபடி வழங்கப்படும். பிரிமியம் இவி கார்கள் என்றால் அதன் மதிப்பு 35,000 அமெரிக்க டாலருக்கும் அதிகமாக விலை கொண்ட கார்கள் பிரிமியம் இவி கார்களாக இருக்கின்றன. அதற்கும் அதிகமான வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டும் என்றால் 110 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலும் இந்த முதலீட்டை எப்படி செலவு செய்ய வேண்டும் என்ற விபரங்களையும் இந்நிறுவனம் எடுத்துள்ளது. அதன்படி தயாரிப்பு உபகரணங்கள், மிஷின்கள், ரிசார்ச் மற்றும் டெவலப்மென்ட் ஆகியவற்றிற்கு மொத்த முதலீட்டில் 5 சதவீதமும், இடம் மற்றும் கட்டுமானத்திற்காக 10 சதவீதமும், செலவு செய்யலாம் என தெரிவித்துள்ளது மேலும் இதற்கான விண்ணப்பங்கள் விரைவில் வழங்கப்படும் எனவும் இந்த பணிகளை வாகன தயாரிப்பு நிறுவனம் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 4, 2025, 12:40 [IST]
English summary
Ev policy import duty cut to 15 percent finalized in india
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+