“எலக்ட்ரிக் & பெட்ரோல் வாகனங்கள் இன்னும் 2 வருடங்களில் ஒரே விலையில் விற்பனையாகும்”- அமைச்சர் நிதின் கட்கரி!!

எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டை அதிகப்படுத்த இந்திய அரசாங்கம் கடந்த சில வருடங்களாக கடுமையாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த விஷயத்தில் ஒன்றிய அரசாங்கத்திற்கு துணையாக மாநில அரசாங்கங்களும் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் நிறுவனத்திற்கு மானியங்களை அறிவித்து வருகின்றன.

இந்த முயற்சிகளுக்கு உடனடியாக பெரும் பலன் கிடைக்காவிட்டாலும், மெல்ல மெல்ல எலக்ட்ரிக் வாகனங்களை புதியதாக வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் ஒவ்வொரு மாதமும் விற்பனையாகும் எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

இருப்பினும் எலக்ட்ரிக் வாகனங்களின் விலை, அதே தோற்றத்தில், ஏறக்குறைய அதே அளவிலான இயக்க ஆற்றலை பெறும் எரிபொருள் என்ஜின் கார்களை காட்டிலும் சற்று அதிகமாக தற்சமயம் உள்ளது. இதன் காரணமாகவே எலக்ட்ரிக் வாகனங்களுக்கும், அவற்றை தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் மானியங்களை அரசுகள் அறிவித்து வருகின்றன.

இதன் வெளிப்பாடாக, இன்னும் இரண்டு வருடங்களில் எலக்ட்ரிக் வாகனங்களின் விலைகள், எரிபொருள் என்ஜின் வாகனங்களுக்கு இணையாக வந்துவிடும் என ஒன்றிய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதற்கான பணிகளில் இந்திய அரசாங்கம் ஏற்கனவே ஈடுப்பட ஆரம்பித்துவிட்டது.

அதிநவீன தொழிற்நுட்பங்களின் வளர்ச்சி, இவி தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையே உள்ள நட்புறவான போட்டி மற்றும் அவற்றின் எதிர்கால திட்டங்கள் உள்ளிட்டவற்றின் காரணமாக எலக்ட்ரிக் வாகனங்களின் விலைகள் தற்போதைய வாகனங்களுக்கு இணையாக வந்துவிடும் என்று ஒன்றிய அரசாங்கம் நம்புவது இதுகுறித்து டைம்ஸ்நௌ செய்திதளத்திற்கு அமைச்சர் நிதின் கட்கரி அளித்த பேட்டியின் மூலம் அறிய முடிகிறது.

அதேநேரம் எத்தனால் மற்றும் சிஎன்ஜி போன்ற மாற்று எரிபொருள் பயன்பாட்டையும் வலியுறுத்துவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், இந்தியாவிற்கான புதை வடிவ எரிபொருளில் கிட்டத்தட்ட 80% வெளிநாடுகளில் இருந்து பெறப்படுகிறது. இதனால் அரசுக்கு சுமார் 8 லட்ச கோடி ரூபாய் செலவாகிறது.

புதைப்படிவ எரிபொருட்களை சார்ந்திருக்கும் நிலை இன்று இவ்வாறு இருக்க, இதே நிலை மேலும் தொடர்ந்தால் ரூ.25 லட்ச கோடியாக அதிகரிக்கலாம். இது இறுதியில் நாட்டு மக்களுக்கு வாங்குவதற்கு அதிக விலை கொடுக்க செய்யும். ஆனால் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான இயங்கும் செலவு இதனை காட்டிலும் 6 மடங்கு குறைவாக உள்ளது.

ஒரு மாதத்தில் பெட்ரோலுக்கு ரூ.12,000-இல் இருந்து ரூ.15,000 வரையில் கார் உரிமையாளர் செலவு செய்கிறார் என்றால், அதுவே அது எலக்ட்ரிக் காராக இருப்பின் வெறும் ரூ.2,000 மட்டுமே செலவாகும் என்றார். இந்திய அரசாங்கம் ஹைப்ரீட் & எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வேகமாக மாறுவதையும், தயாரிப்பதையும் ஊக்கப்படுத்தும் திட்டத்தை (FAME) 2015இல் அறிமுகப்படுத்தியது.

இந்த திட்டத்தின் கீழ் மானியங்களையும், வரி குறைப்பையும் எல்க்ட்ரிக் வாகனங்களுக்கு தயாரிப்பு நிறுவனங்கள் பெற முடியும். இன்று குறிப்பாக எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பில் புதியது புதியதாக அறிமுகமாகும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களில் பெரிய அளவில் அதிகரிப்பதற்கு FAME திட்டம் முக்கிய பங்காற்றி வருகிறது.

இருப்பினும் இன்னமும் எலக்ட்ரிக் வாகனங்கள் சற்று விலைமிக்கதாகவே பார்க்கப்படுகின்றன. பேட்டரி தொழிற்நுட்பங்களை கண்டறிவதில் குறிப்பிடத்தக்க மேம்பாட்டை அடைந்துள்ளோம் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களை விரும்புவோரும் அதிகரிக்க துவங்கியுள்ளனர் என்றாலும், பெட்ரோல் & டீசல் வாகனங்களுக்கு இணையாக எலக்ட்ரிக் வாகனங்களின் விலை வருவதற்கு அமைச்சர் கூறும் 2 வருடங்களுக்கு மேல் கூட ஆகலாம்.

இதற்கிடையில் சமீபத்தில் நெகிழ்வு எரிபொருள்களை இன்னும் சில நாட்களில் கட்டாயமாக்க உள்ளதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மேலும் இந்த பேட்டியில் பெட்ரோல் & எத்தனால் விலைகளுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை குறைக்கும் ரஷ்யன் தொழிற்நுட்பம் ஒன்றின் பெயரையும் குறிப்பிட்டு பேசியுள்ளார். சில வெளிநாட்டு சந்தைகளில் பெட்ரோலின் விலை எத்தனாலை காட்டிலும் குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.இருப்பினும் இந்த மாற்றம் அதிகப்படியான பெட்ரோல் இறக்குமதியை குறைக்கும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Electric vehicles to cost same as petrol vehicles in two years Transport Minister Nitin Gadkari
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X