ராமர் கோயிலுக்கு வர்றவங்க கொஞ்சம்கூட கஷ்டப்பட கூடாது! பக்தர்கள் பயன்பாட்டிற்காக இத்தன கார்களா!!

உத்தரபிரதேசம் மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் நிறைவுடைந்திருக்கும் நிலையில் விரைவில் அது திறக்கப்பட இருக்கின்றது. ஜனவரி 22 ஆம் தேதி அன்றே கோயில் திறக்கப்பட இருக்கின்றது. இந்தியாவில் நடைபெற இருக்கும் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகின்றது.

ஆகையால் ஒட்டுமொத்த தேசத்தின் பார்வையும் இதன் பக்கம் திரும்பி இருக்கின்றது. மேலும், கோயில் திறப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே, கோயில் திறப்பை முன்னிட்டு மிக அதிக எண்ணிக்கயைில் எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Ayodhya ram mandir

இந்த வாகனங்கள் யாத்ரீகர்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அயோத்தி மேம்பாட்டு ஆணையத்தினாலேயே எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்கப்பட்டு இருக்கின்றன. மாசில்லா போக்குவரத்தை கோயில் திறப்பு நிகழ்வின்போது உருவாக்கும் பொருட்டு மின்சார வாகனங்கள் வாங்கப்பட்டு இருக்கின்றன. இரு விதமான மின்சார வாகனங்கள் வாங்கப்பட்டு உள்ளன.

எலெக்ட்ரிக் கார் மற்றும் கோல்ஃப் வகை வாகனங்களே வாங்கப்பட்டு உள்ளன. இதில் மின்சார கார்கள் முக்கிய பிரமுகர்களையும் ஏற்றிச் செல்லவும், கோல்ஃப் வகை வாகனங்கள் அனைத்து வகையான யாத்ரீகர்களையும் ஏற்றும் செல்லும் வகையிலும் பயன்படுத்தப்பட இருக்கின்றது. சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு இவை உபயோகப்படுத்தப்பட இருக்கின்றன.

தற்போது 15 கார்கள் மற்றும் 15 கோல்ஃப் கார்ட் வகை வாகனங்கள் என ஒட்டுமொத்தமாக 30 எலெக்ட்ரிக் வாகனங்களை அயோத்தி மேம்பாட்டு ஆணையம் வாங்கி குவித்து இருக்கின்றது. இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் கார் மாடல்களில் ஒன்றான டிகோர் இவி-யே வாங்கப்பட்டு இருக்கின்றது.

இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எலெக்ட்ரிக் கார் மாடல்களில் ஒன்றாக இந்த இ-கார் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இது இந்தியாவில் ரூ. 12.49 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த காரில் ஒரே நேரத்தில் டிரைவருடன் சேர்த்து ஐந்து பேர் வரை பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதுமட்டுமில்லைங்க, இன்னும் ஏராளமான சிறப்புகளைத் தாங்கியதே இந்த எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இதில், ஓர் முழு சார்ஜில் 315 கிமீ தூரம் வரை டிராவல் செய்ய முடியும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக எலெக்ட்ரிக் காரில் 26 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இத்துடன், 74 பிஎச்பி மற்றும் 170 என்எம் டார்க்கை வெளியேற்றும் மின்சார மோட்டாரும் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. தடையில்லா மற்றும் மிக சிறந்த டிராவல் அனுபவத்தைப் பெற இவையே போதுமானவை ஆகும். இந்த கார்களுடன் சேர்த்தே கோல்ஃப் கார்ட் மின்சார வாகனங்களும் பயன்படுத்தப்பட உள்ளன.

இதனை சீன நிறுவனம் ஆஃபர் செய்ததாகக் கூறப்படுகின்றது. இந்த வாகனத்தில் ஒரே நேரத்தில் 6 பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும். இந்த வாகனம் மிக முக்கியமாக வயதானோருக்கு பயன்படுத்தப்பட இருக்கின்றது. வயதானவர்கள் மிக சுலபமாக ஏறி இறங்க ஏற்ற வாகனமே கோல்ஃப் கார்ட் ஆகும்.

ஹனுமன்கர்ஹி மற்றும் ஸ்ரீ ராம் ஜென்ம பூமி இடையிலேயே இந்த வாகனம் பயன்பாட்டிற்கு ஈடுபடுத்தப்பட உள்ளது. பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என அனைவராலும் இந்த வாகனத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என உபி அரசாங்கம் தெரிவித்து இருக்கின்றது. இந்த சேவையை அயோத்தி மேம்பாட்டு ஆணையமே மேற்கொள்ள இருக்கின்றது.

மேலும், தற்போது களமிறக்கப்பட்டு இருக்கும் வாகனங்களுடன் சேர்த்து இன்னும் 200 மின்சார வாகனங்கள் பயன்பாட்டிற்குக் களமிறக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அனைத்தும் பூஜ்ஜியம் மாசு உமிழ்வை மையமாகக் கொண்டு இயங்கும் வாகனமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. அதாவது, மின்சார வாகனங்களே பயன்பாட்டிற்கு களமிறக்கப்பட இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது ஆளும் மத்திய அரசு பெட்ரோல்- டீசல் வாகனங்களே பயன்பாட்டில் இல்லாத நிலைக்கு இந்தியாவைக் கொண்டு செல்லும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது. இதன் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அது கொஞ்சம் கொஞ்சம் கட்டவிழ்த்து வருவது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே அயோத்தி ராமர் கோயில் பயன்பாட்டில் இ-வாகனங்கள் களமிறக்கப்பட்டு இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 3, 2024, 21:57 [IST]
English summary
Ev to use in ayodhya ram mandir
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+