இவ்ளோ நாளா தெரியாம போச்சே... இந்திய விமானங்களில் உள்ள VT என்ற குறியீட்டிற்கு இதுதான் அர்த்தமா? உடனே மாத்துங்க

இந்திய விமானங்களில் ஏன் 'VT' என்ற குறியீடு இருக்கிறது? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

இவ்ளோ நாளா தெரியாம போச்சே... இந்திய விமானங்களில் உள்ள VT என்ற குறியீட்டிற்கு இதுதான் அர்த்தமா? உடனே மாத்துங்க

விமானங்களை பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்த வகையில் மிகவும் சுவாரஸ்யமான ஒரு தகவலைதான் இன்று நாம் பார்க்க போகிறோம். பொதுவாக விமானங்களில் பல்வேறு குறியீடுகள் இருக்கும். விமானங்களை உன்னிப்பாக கவனித்து பார்த்தால், அது உங்களுக்கு தெரியும்.

இவ்ளோ நாளா தெரியாம போச்சே... இந்திய விமானங்களில் உள்ள VT என்ற குறியீட்டிற்கு இதுதான் அர்த்தமா? உடனே மாத்துங்க

இந்திய விமானங்களை பொறுத்தவரையில் 'VT' என்ற குறியீடு இடம்பெற்றிருக்கும். வைசிராய் பிரதேசம் என்பதன் சுருக்கம்தான் 'VT' (Viceroy Territory) என குறிப்பிடப்படுகிறது. இந்திய விமானங்கள் அனைத்திலும் இந்த 'VT' என்ற குறியீட்டை நீங்கள் காண முடியும். இது பிரிட்டீஷ் ஆட்சியின் மரபு என தெரிவிக்கப்படுகிறது.

இவ்ளோ நாளா தெரியாம போச்சே... இந்திய விமானங்களில் உள்ள VT என்ற குறியீட்டிற்கு இதுதான் அர்த்தமா? உடனே மாத்துங்க

சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் (International Civil Aviation Organisation - ICAO) உலகளாவிய விதிமுறைகளின்படி, ஒவ்வொரு விமானமும் ஒரு நாட்டில் பதிவு செய்யப்படும். அங்கு அந்த விமானத்திற்கு ஒரு பதிவு எண் ஒதுக்கப்படும். இந்த பதிவு எண் இரண்டு ஆங்கில எழுத்துக்களை கொண்டதாக இருக்கும்.

இவ்ளோ நாளா தெரியாம போச்சே... இந்திய விமானங்களில் உள்ள VT என்ற குறியீட்டிற்கு இதுதான் அர்த்தமா? உடனே மாத்துங்க

இதனை நாட்டின் குறியீடு (Country Code) என குறிப்பிடுகின்றனர். இதை தொடர்ந்து மூன்று எழுத்துக்கள் இடம்பெற்றிருக்கும். இந்த மூன்று எழுத்துக்களும் விமானத்தின் உரிமையாளர்கள் அல்லது விமான நிறுவனத்தின் விருப்பத்திற்கு ஏற்ப வழங்கப்படும். இதன்படி 'VT' என்பது இந்திய விமானங்களுக்கான பதிவு எண் ஆகும்.

இவ்ளோ நாளா தெரியாம போச்சே... இந்திய விமானங்களில் உள்ள VT என்ற குறியீட்டிற்கு இதுதான் அர்த்தமா? உடனே மாத்துங்க

இந்தியாவில் பதிவு செய்யப்படும் விமானங்களுக்கு 'VT' என்ற குறியீடு வழங்கப்படும். அதை தொடர்ந்து விமானங்களின் உரிமையாளர்கள் அல்லது விமான நிறுவனங்களின் விருப்பத்திற்கு ஏற்ப மூன்று எழுத்துக்கள் வழங்கப்படும். இதன்படி இந்திய விமானங்களில் VT-INV, VT-IVM, VT-IVP, VT-IHW போன்ற குறியீடுகள் இடம்பெற்றிருக்கும்.

இவ்ளோ நாளா தெரியாம போச்சே... இந்திய விமானங்களில் உள்ள VT என்ற குறியீட்டிற்கு இதுதான் அர்த்தமா? உடனே மாத்துங்க

பிரிட்டீஷ் ஆட்சியின் கீழ் இருந்தபோது, இந்தியாவிற்கு 'VT' என்ற குறியீடு ஒதுக்கப்பட்டது. முன்பு இந்தியாவை போன்று இன்னும் பல்வேறு நாடுகள் பிரிட்டீஷ் ஆதிக்கத்தின் கீழ் இருந்தன. அந்த நாடுகளுக்கு எல்லாம் VA முதல் VZ வரையிலான சீரிஸ்கள் குறியீடாக ஒதுக்கப்பட்டன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இவ்ளோ நாளா தெரியாம போச்சே... இந்திய விமானங்களில் உள்ள VT என்ற குறியீட்டிற்கு இதுதான் அர்த்தமா? உடனே மாத்துங்க

ஆனால் இந்தியாவிற்கான விமான பதிவு குறியீட்டை மாற்ற வேண்டும் என மிக நீண்ட காலமாக கோரிக்கைகள் இருந்து வருகின்றன. பாஜக உறுப்பினர்கள் கூட இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் பேசியுள்ளனர். ''ஹிந்துஸ்தான் வைசிராயின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் பகுதி கிடையாது.

இவ்ளோ நாளா தெரியாம போச்சே... இந்திய விமானங்களில் உள்ள VT என்ற குறியீட்டிற்கு இதுதான் அர்த்தமா? உடனே மாத்துங்க

இந்தியா ஏன் இன்னமும் 'VT' குறியீட்டை தொடர வேண்டும்? 'VT' என்ற குறியீடு உடனடியாக மாற்றப்பட வேண்டும்'' என்பதுதான் பலரின் கோரிக்கையாக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் அமையும் அரசாங்கங்கள் இந்த விஷயத்தில் அவ்வளவு ஆர்வமாக இருப்பது போல் தெரியவில்லை. ஏனெனில் இந்த விஷயத்தில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன.

இவ்ளோ நாளா தெரியாம போச்சே... இந்திய விமானங்களில் உள்ள VT என்ற குறியீட்டிற்கு இதுதான் அர்த்தமா? உடனே மாத்துங்க

இதுகுறித்து விபரம் அறிந்தவர்கள் கூறுகையில், ''தற்போது உள்ள 'VT' குறியீட்டை மாற்றினால், அனைத்து ஆவணங்களையும் மாற்ற வேண்டும். அத்துடன் விமானங்களை மறுபடியும் பெயிண்ட் செய்ய வேண்டும். அனைத்து குறியீடுகளையும் மாற்றும் வரை விமானங்களால் வானில் பறக்க முடியாது. இந்த நடைமுறைகள் அனைத்தும் முடியும் வரை விமானங்களை தரையில்தான் நிறுத்தி வைத்திருக்க வேண்டும்.

இவ்ளோ நாளா தெரியாம போச்சே... இந்திய விமானங்களில் உள்ள VT என்ற குறியீட்டிற்கு இதுதான் அர்த்தமா? உடனே மாத்துங்க

இந்த நடைமுறைகள் காரணமாக விமான நிறுவனங்களுக்கும் அதிக செலவு ஏற்படும்'' என்கின்றனர். இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை கடந்து விட்டபோதும் கூட இன்னமும் இந்த பிரிட்டீஷ் மரபு பின்பற்றப்பட்டு வருகிறது. 'VT' குறியீட்டை மாற்றுவது என்பது மிகவும் சிக்கலான மற்றும் செலவு மிகுந்த விஷயமாக இருப்பதால்தான் அடுத்தடுத்து அமையும் அரசாங்கங்கள் இந்த விஷயத்தில் அதிக ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது.

இவ்ளோ நாளா தெரியாம போச்சே... இந்திய விமானங்களில் உள்ள VT என்ற குறியீட்டிற்கு இதுதான் அர்த்தமா? உடனே மாத்துங்க

ஆனால் இந்த குறியீட்டை மாற்றுவதற்கு இந்திய அரசாங்கம் முயற்சி செய்யவே இல்லை என கூற முடியாது. ஏனெனில் இந்த குறியீட்டை மாற்றுவதற்கு இந்திய அரசாங்கம் பல ஆண்டுகளாக முயற்சி செய்தது. இந்தியா என்பதை குறிக்கும் வகையில் IN (India), பாரதம் என்பதை குறிக்கும் வகையில் BH (Bharat) மற்றும் ஹிந்துஸ்தான் என்பதை குறிக்கும் வகையில் HI (Hindustan) போன்ற குறியீடுகளில் ஏதேனும் ஒன்றை பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இவ்ளோ நாளா தெரியாம போச்சே... இந்திய விமானங்களில் உள்ள VT என்ற குறியீட்டிற்கு இதுதான் அர்த்தமா? உடனே மாத்துங்க

ஆனால் சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பிடம் இவை எதுவுமே கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. எனினும் ஒரு சில நாடுகள் தங்களுக்கான குறியீட்டை மாற்றியுள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ஃபிஜி, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் சுதந்திரத்திற்கு பிறகு தங்கள் நாட்டிற்கான குறியீட்டை மாற்றியுள்ளன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Ever wondered what vt on indian airplanes stands for here s everything you need to know
Story first published: Saturday, January 1, 2022, 14:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X