Just In
- 2 hrs ago
ஆக்டிவாவை யாருமே அடிச்சிக்க முடியாது.. சமீபத்தில் சைலண்டா நடந்த சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டீர்களா?
- 3 hrs ago
அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் புதிய ஸ்கார்பியோ காரின் அறிமுகம் எப்போது? அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு!
- 5 hrs ago
ரயில் இன்ஜின் ஹாரனிற்கு பின்னால் இவ்வளவு அர்த்தம் இருக்கிறதா? எத்தனை விதமான சத்தங்கள் இருக்கிறது தெரியுமா?
- 7 hrs ago
மாருதி வேகன்ஆர் காரில் வலம் வந்த கிரிக்கெட் வீரர்... இப்ப அவரு வாங்கியிருக்க கார பாத்தீங்களா? மெர்சலா இருக்கு!
Don't Miss!
- Sports
ஜடேஜாவை முந்திய ரியான் பராக்.. விமர்சனங்களுக்கு மத்தியில் இப்படி ஒரு சாதனையா?? ரசிகர்கள் வியப்பு!
- Finance
பெங்களூர் நிறுவனத்தில் ஹேக்கர்கள் கைவரிசை.. ரூ.7.3 கோடி திருட்டு..!
- News
நெஞ்சுக்குநீதி ரிலீஸ், மாமன்னன் சூட்டிங்.. சேலத்தில் உதயநிதிக்கு நன்றி சொன்ன பேரறிவாளன்,அற்புதம்மாள்
- Movies
வருண் அக்ஷராவுக்கு திருமணமா ?... இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்!
- Technology
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி42: சாதனம் இப்படியும் இருக்கலாம்!
- Lifestyle
உடல் எடையை குறைக்கும்போது இரவு உணவிற்கு முட்டை அல்லது கோழி எடுத்துக்கொள்வது நல்லதா?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரயில்வே ஸ்டேஷன் போர்டில் உள்ள MSL என்பது எதை குறிக்கிறது தெரியுமா? இவ்ளோ பெரிய விஷயத்தை கவனிக்காம விட்டுட்டோமே
ரயில்வே ஸ்டேஷன் போர்டில் இருக்கும் MSL என்ற குறியீடு எதை குறிக்கிறது? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரயில் பயணங்கள் நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாதவை. அலுங்காமல், குலுங்காமல் சொகுசாக செல்லும் மல்டி ஆக்ஸில் பஸ்கள், அதிவேகமாக செல்லும் விமானங்கள் என போக்குவரத்து முறைகள் அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்றாலும், ரயில் பயணம் நம் வாழ்க்கையுடன் பின்னி பிணைந்து விட்டன. எனவே தற்போதும் கூட ரயில் பயணங்களுக்கு நிறைய பேர் முன்னுரிமை வழங்குகின்றனர்.

ரயில் பயணங்களுக்காக ரயில்வே ஸ்டேஷன்களுக்கு செல்லும்போது நிறைய விஷயங்கள் நம் கண்களில் சிக்கும். அப்படி நாம் கவனிக்கும் முக்கியமான விஷயங்களில் ஒன்று ரயில் நிலையத்தின் பெயர் பலகை. அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும் மஞ்சள் நிற பெயர் பலகை வைக்கப்பட்டிருக்கும். இதில் கருப்பு நிறத்தில் சம்பந்தப்பட்ட ஊரின் பெயர் எழுதப்பட்டிருக்கும்.

ஆங்கிலம், ஹிந்தி மற்றும் உள்ளூர் மொழி என்று மொத்தம் 3 மொழிகளில் ஊரின் பெயர் எழுதப்பட்டிருக்கும். உள்ளூர் மொழியை பொறுத்தவரையில், தமிழ்நாடு என்றால் தமிழிலும், கர்நாடகா என்றால் கன்னடத்திலும், கேரளா என்றால் மலையாளத்திலும், ஆந்திரா என்றால் தெலுங்கிலும் எழுதப்பட்டிருக்கும். ரயில்வே ஸ்டேஷனின் ஆரம்பத்திலும், இறுதியிலும் இந்த மஞ்சள் நிற பெயர் பலகை வைக்கப்பட்டிருக்கும்.

3 மொழிகளில் பெயருடன் சேர்த்து, மற்றொரு மிக முக்கியமான விஷயமும் இந்த மஞ்சள் நிற பலகையில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஊரின் பெயரை கவனிக்கும் நம்மில் பலரும், இந்த முக்கியமான விஷயத்தை கவனிக்க தவறி விடுகிறோம். கடல் மட்டத்தில் இருந்து சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் எவ்வளவு உயரத்தில் அமைந்துள்ளது? என்பதுதான் அந்த முக்கியமான விஷயம்.

ஆம், ஒவ்வொரு ரயில்வே ஸ்டேஷனிலும் வைக்கப்பட்டுள்ள மஞ்சள் நிற பலகையில், கடல் மட்டத்தில் இருந்து அந்த ஸ்டேஷன் எவ்வளவு உயரத்தில் அமைந்துள்ளது? என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கும். அடுத்த முறை ரயில் நிலையத்திற்கு நீங்கள் செல்லும்போது, அதன் மஞ்சள் நிற பெயர் பலகையை உன்னிப்பாக கவனித்து பாருங்கள்.

அதில் 'எம்எஸ்எல்' (MSL) என குறிப்பிடப்பட்டிருக்கும். Mean Sea Level (மீன் சீ லெவல்) என்பதன் சுருக்கமே MSL என குறிப்பிடப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து சம்பந்தப்பட்ட ரயில்வே ஸ்டேஷன் எவ்வளவு உயரத்தில் அமைந்துள்ளது? என்பதை குறிப்பிடுவதற்காக MSL என்ற சுருக்கத்தை இந்திய ரயில்வே பயன்படுத்தி வருகிறது.

சரி, கடல் மட்டத்தில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் எவ்வளவு உயரத்தில் அமைந்துள்ளது? என்பதை எதற்காக குறிப்பிடுகின்றனர்? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். இந்திய ரயில்வே மூலமாக இயக்கப்படும் ரயில்களில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பையும் மனதில் வைத்துதான், MSL குறிப்பிடப்படுகிறது.

MSL குறிப்பிடப்படுவதற்கும், பாதுகாப்பிற்கும் என்ன சம்பந்தம்? என்ற சந்தேகம் எழுவது இயல்புதான். என்ன உயரத்தில் பயணித்து கொண்டிருக்கிறோம்? என்பதை லோகோ பைலட்கள் (ரயில் ஓட்டுனர்கள்) மற்றும் கார்டுகள் (Guards) தெரிந்து கொள்வதற்கு MSL உதவி செய்யும். உயரம் குறித்த எச்சரிக்கையை MSL நேரடியாக லோகோ பைலட்களுக்கு தெரிவிப்பதால், ரயில் பயணம் பாதுகாப்பாக அமையும்.

இன்னும் தெளிவாக சொல்வதென்றால், எவ்வளவு உயரத்தில் பயணித்து கொண்டிருக்கிறோமோ, அதற்கேற்ப ரயிலின் வேகத்தை லோகோ பைலட்டால் கட்டுப்படுத்த முடியும். இதன் மூலம் ரயிலில் பயணம் செய்யும் அனைவரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். ரயில்வே ஸ்டேஷன்களில் வைக்கப்பட்டுள்ள மஞ்சள் பலகைகளில், MSL ஏன் குறிப்பிடப்படுகிறது? என்பது தற்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.

உங்களுக்கு இங்கே மற்றொரு சந்தேகமும் வரலாம். ரயில் நிலையத்தின் பெயர் பலகைகள் ஏன் பொதுவாக மஞ்சள் நிறத்திலேயே இருக்கின்றன? என்பதுதான் அது. ஆம், அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும் பெயர் பலகைகள் மஞ்சள் நிறத்தில்தான் வைக்கப்பட்டிருக்கும். நாங்கள் ஏற்கனவே கூறியபடி அதில் கருப்பு நிற எழுத்துக்கள்தான் எழுதப்பட்டிருக்கும்.

தெளிவாக தெரிய வேண்டும் என்பதற்காகவே இந்த வண்ண கலவையை இந்திய ரயில்வே பயன்படுத்தி வருகிறது. மஞ்சள் நிற பின்னணியில் கருப்பு நிறத்தில் எழுதும்போது, தூரத்தில் இருந்து பார்த்தால் கூட கண்களுக்கு எளிதாக புலப்படும். இதன் காரணமாகவே அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும், பெயர் பலகைகள் மஞ்சள் நிறத்தில் வைக்கப்படுகின்றன.