அனைத்து இருக்கைகளுக்கும் ஜன்னல்: மலைக்கவைக்கும் ஆகாய கப்பல்

Written By:

விண்வெளிக்கு செல்வோமா, நிலாவை சுற்றிப்பார்ப்போமோ என்பது பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதருக்குள் இருக்கும் கற்பனையான ஆசை. இதை நிஜமாக்க அமெரிக்க நிறுவனம் ஒன்று தீவிரமாக முயற்சித்து வருகிறது. ஆம், அந்த நிறுவனம் மனிதர்களை அடுத்த வருடம் விண்வெளிக்கு சுற்றுலா அழைத்து செல்ல தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

விண்வெளிக்கு சுற்றுலா அழைத்து செல்லும் ஆகாய கப்பல் ரெடி

இணையதள வர்த்தக சேவையில் உலகின் முன்னணி நிறுவனமாக உள்ள அமேசான்.காம், விண்வெளி துறைக்கு வேண்டிய பொருட்களை தயாரிக்க ப்ளூ ஆர்ஜின் என்ற நிறுவனத்தை இயக்கி வருகிறது.

விண்வெளிக்கு சுற்றுலா அழைத்து செல்லும் ஆகாய கப்பல் ரெடி

விண்வெளிக்கு சுற்றுலா செல்ல முடியுமா? இது சாத்யம்தானா என பலரும் வேடிக்கையாக பார்த்து வந்த நிலையில்,ப்ளூ ஆர்ஜின் தலைவர் ஜெஃப் பிஸோஸ், தனது சமூகவலைதள பக்கத்தில் விண்வெளிக்கு சுற்றுலா அழைத்து செல்வதற்காக தயாரிக்கப்பட்டு வரும் ஆகாய கப்பலின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

விண்வெளிக்கு சுற்றுலா அழைத்து செல்லும் ஆகாய கப்பல் ரெடி

’ஷெப்பர்ட் ராக்கெட்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆகாய கப்பலில் உள்ள அனைத்து இருக்கைகளும் ஜன்னலுக்கு அருகில் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் பயணிகள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தவாறே விண்வெளியை கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பார்க்கலாம்.

விண்வெளிக்கு சுற்றுலா அழைத்து செல்லும் ஆகாய கப்பல் ரெடி

வாழ்க்கையில் ஒருநாள் கிடைக்கும் வாய்பிற்காக எந்த இடையூறையும் பயணிகளுக்கு தரக்கூடாது என்ற முடிவில், ஆகாய கப்பலின் அனைத்து இருக்கைகளுக்கும் ஜன்னல் பொருத்தப்பட்டுள்ளதாக ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விண்வெளிக்கு சுற்றுலா அழைத்து செல்லும் ஆகாய கப்பல் ரெடி

ப்ளூ ஆர்ஜின் அமைப்பை போலவே விண்வெளி பாகங்களை உற்பத்தி செய்து தரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் மனிதர்களை விண்வெளிக்கு அழைத்து செல்லக்கூடிய பணிகளில் இறங்கியுள்ளது. ஆனால் ஸ்பேஸ் எக்ஸ், ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்திற்கு ஒருபடி மேலே போய், நிலாவிற்கு மனிதர்கள் சூற்றுலா அழைத்து செல்லப்படுவர் என்று தெரிவித்திருக்கிறது.

விண்வெளிக்கு சுற்றுலா அழைத்து செல்லும் ஆகாய கப்பல் ரெடி

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை நிர்வாகித்து வரும் இலான் மஸ்க், நிலாவிற்கு மனிதர்களை அடுத்தாண்டு சுற்றுலா அழைத்து செல்லப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். அதற்கான இறுதிக்கட்ட பணிகளில் ஸ்பேக்ஸ் எக்ஸ் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் இலான் மிஸ்க் கூறியுள்ளார்.

விண்வெளிக்கு சுற்றுலா அழைத்து செல்லும் ஆகாய கப்பல் ரெடி

அமெரிக்காவில் உள்ள டெக்ஸஸ் மாகணத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ராக்கெட் ஏவுதளம் இயங்கி வருகிறது. நிலாவிற்கு சுற்றுலா செல்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ள பயணிகள் ராக்கெட்டை,துணை சுற்றுப்பாதை வரை செலுத்தி மீண்டும் பூமியில் இறக்கப்படும் சோதனையை ஸ்பேஸ் எக்ஸ் கடந்த நவம்பர் மாதத்திலிருந்து 5 முறை செய்துள்ளது.

விண்வெளிக்கு சுற்றுலா அழைத்து செல்லும் ஆகாய கப்பல் ரெடி

நிலாவிற்கு சுற்றுலா செல்வதற்காக நடத்தப்பட்ட இந்த சோதனை வெற்றியடைந்துள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் கூறியுள்ளது. 'ஃபாலாகான் 9' என்ற பெயரிடப்பட்டுள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான அந்த ராக்கெட், மறுசுழற்சி முறையில் இயங்கக்கூடிய திறன் பெற்றது.

விண்வெளிக்கு சுற்றுலா அழைத்து செல்லும் ஆகாய கப்பல் ரெடி

நிலாவிற்கு சுற்றுலா செல்ல நிச்சயம் கோடிக்கணக்கில் கட்டணமாக வசூலிக்கப்படும். நிலாவிற்கு ஒருமுறை சுற்றுலா செல்ல எத்தனை பேர் அழைத்து செல்லப்படுவர், அவர்களுக்கான செலவீனங்கள் என்ன? ராக்கெட்டின் செயல்திறன் குறித்த திட்டவரையரை என்ன? என்பன போன்ற தகவல்களை தற்போது வரை இரண்டு நிறுவனங்களுமே வெளியிடவில்லை.

விண்வெளிக்கு சுற்றுலா அழைத்து செல்லும் ஆகாய கப்பல் ரெடி

இருப்பினும் நிலாவிற்கு சுற்றுலா செல்ல இரண்டு நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு பணியாற்றி வருவதால், எதிர்பார்த்த அளவிற்கு கட்டணங்கள் இருக்காது எனவும், தொழில்ரீதியான போட்டியால் சிறப்பு தள்ளுபடிகள், ஆடம்பர வசதிகளை குறைந்த கட்டணங்களில் பயணிகளுக்கு செய்து தர இரண்டு நிறுவனங்களும் முனைப்பு காட்டும் என்றும் நிலாவில் கால்பதிக்க கனவு காண்போரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Blue Origin take tourists to space as soon as next year. Founder Jeff Bezos shared an inside look at the layout of the space ship.
Story first published: Thursday, March 30, 2017, 16:07 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more