முன்னாள் முதல்வரை பைக் டிரைவராக மாற்றிய தொழிலதிபர்! மொத்த மாநிலத்தையும் திரும்பி பார்க்க வெச்சிட்டாரு!!

தொழிலதிபர்கள் தங்களது அதிகமான பொறுப்புகளினால் பெரும்பாலும் வெளியில் தெரிவதில்லை. ஆனால், ஒரு சில செல்வந்தர்கள் தங்களிடம் உள்ள பணத்தை வைத்து போடாத ஆட்டமே கிடையாது என சொல்லலாம். உதாரணத்திற்கு, உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் (Elon Musk)-ஐ சொல்லலாம். அதேபோன்றதான இந்திய தொழிலதிபராக கௌதம் சிங்கானியா (Gautam Singhania) உள்ளார். பிரபலமான ரேமண்ட் க்ரூப் (Raymond Group)-இன் தலைவர் தான் கௌதம் சிங்கானியா ஆவார். அவ்வப்போது ஏதேனும் ஒன்றை சுவாரஸ்யமாக செய்து அதன் மூலம் கவனத்தை ஈர்க்கக்கூடிய கௌதம் சிங்கானியா, சமீப காலமாக லம்போர்கினி (Lamborghini) நிறுவனத்துடன் மல்லுக்கட்டி கொண்டிருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன் தனது லம்போர்கினி கார் பாதி வழியில் நின்றுப்போனதற்கு பிறகு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் லம்போர்கினி நிறுவனத்தையும், அதன் கார்களையும் மட்டம் தட்டி வருகிறார். இந்த நிலையில்தான், கௌதம் சிங்கானியாவின் ரேமண்ட் க்ரூப் மஹாராஷ்டிரா மாநிலம், தானேவில் 'ரேமண்ட் 100 ஆட்டோஃபெஸ்ட்' (Autofest) என்கிற பெயரில் மோட்டார் கண்காட்சியை துவங்கியுள்ளது.

ex-cm eknath shinde rides trike

ஜனவரி 14ஆம் தேதி துவங்கி, 3 நாட்களுக்கு நடைபெறவிருக்கும் இந்த கண்காட்சியில் 700க்கும் அதிகமான சூப்பர்கார்கள் மற்றும் சூப்பர்பைக்குகள் காட்சிக்கு நிறுத்தப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியில் கலந்துக்கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்த்ரி தனது 40 வருட பழைய ஆடி 100 காரில் வந்திறங்கியதை பற்றி நமது செய்தித்தளத்தில் கூட பார்த்திருந்தோம்.

தானேவில் ஜேகே க்ராம் என்கிற பகுதியில் நடைபெற்ற இந்த மோட்டார் கண்காட்சியில் மஹாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய துணை முதலமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே (Eknath Shinde)-வும் கலந்துக் கொண்டார். இதைவிட ஆச்சிரியம் என்னவென்றால், தொழிலதிபர் கௌதம் சிங்கானியாவை பின்னால் அமரவைத்து ஏக்நாத் ஷிண்டே மோட்டார்சைக்கிள் ஓட்டி பரவசப்படுத்தி உள்ளார்.

ex-cm eknath shinde rides trike

இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வீடியோவில், ஃபெராரி 488 பிஸ்டா, 458 ஸ்பெஷியல் மற்றும் எஃப்8 டிரிப்யூடோ உள்ளிட்ட ஃபெராரி கார்களுடன் பல்வேறு பழமையான ரோல்ஸ்-ராய்ஸ், பேட்மொபைல் மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களையும் பார்க்க முடிகிறது. கிளாசிக் கார்கள் மட்டுமின்றி, தனித்துவமான & பழமையான பைக்குகளையும் பார்க்க முடிகிறது.

மஹாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஓட்டியது மோட்டார்சைக்கிள் என்று கூட சொல்ல முடியாது. ஏனெனில், இதில் 3 சக்கரங்கள் உள்ளன. இவ்வாறான 3-சக்கர பைக்குகளை டிரைக் (Trike) என அழைக்கின்றனர். பெரும்பாலும் இவ்வாறான 3-சக்கர டிரைக் வாகனங்களை கஸ்டமர்களின் விருப்பத்திற்கேற்ப உருவாக்கி வழங்குகின்றனர்.

ex-cm eknath shinde rides trike

கௌதம் சிங்கானியாவின் ரேமண்ட் க்ரூப்பின் கீழ் பல்வேறு கார் & பைக் மாடிஃபிகேஷன் (Modification) நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவற்றுள் ஒரு நிறுவனம் கூட இந்த டிரைக் வாகனத்தை உருவாக்கி இருக்கலாம். மஹாராஷ்டிரா துணை முதல்வர் பெரும்பாலும் தனது அன்றாட போக்குவரத்துக்கு பாதுகாப்புமிக்க சொகுசு கார்களையே விரும்பக்கூடியவர். இவரிடம் லெக்ஸஸ் எல்.எக்ஸ்570 (Lexus LX570) என்கிற சொகுசு கார் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு மாநிலத்தின் துணை முதலமைச்சர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஒரு பைக்கை இவ்வாறு பொது வெளியில் ஓட்டியுள்ளார் என்பது ஆச்சிரியமாக உள்ளது. மற்றப்படி, ஏக்நாத் ஷிண்டே அவர்களும், தொழிலதிபர் கௌதம் சிங்கானியாவும் பயணம் செய்திருப்பது என்ன மாதிரியான டிரைக் வாகனம் என்பதை அறிய முடியாதது சற்று வருத்தமே.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 15, 2025, 22:26 [IST]
English summary
Ex chief minister eknath shinde rides trike with multi millionaire gautam singhania
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X