36 வயதுக்கு பின் 2வது இன்னிங்க்ஸ்... பரிசாக டாடா கார் கிடைத்தால் யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள்?

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) ஒருவருக்கு பரிசாக தனது காரை வழங்குகிறது என்றால், அதனை பெறும் நபர் எத்தகையவர் என்பதை அறியலாம். அதுவும், மார்க்கெட்டில் மிக சமீபத்தில் விற்பனைக்கு வந்து பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள காரை பெறுகிறார் என்றால் நிச்சயம் கவனிக்க வேண்டிய விஷயம் தான். விருதை பெறுவர் நடந்து முடிந்த 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர். யார் அவர் என்பதையும், இந்தியாவில் எந்த பகுதியில் வசிக்கிறார் என்பதையும், அவர் பரிசாக பெற்றிருக்கும் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பிரான்ஸ் நாட்டில் நடந்து முடிந்த பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் தங்க பதக்கம் எதுவும் பெறப்படவில்லை. இதனால்தான் பதக்க பட்டியலில் 71வது இடத்தில் இந்தியா ஒலிம்பிக்கை நிறைவு செய்தது. ஆனால், பல வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை நம் இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சொந்தமாக்கினர். வழக்கம்போல், ஹாக்கி பிரிவில் ஒரு பதக்கம் கிடைத்தது.

ex-hockey player gets curvv ev

இந்திய ஆண்கள் ஹாக்கி அணியினர் 2024 ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கத்தை பெற்றனர். கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கிலும் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெண்கல பதக்கத்தை வென்று இருந்தது. பாரீஸ் ஒலிம்பிக்கின் இறுதிப்போட்டி உடன் இந்திய ஹாக்கி அணியின் 36 வயதான கோல் கீப்பர் தனது ஓய்வை முடிவை அறிவித்தார். இது, பதக்கம் வென்ற மகிழ்ச்சிக்கு மத்தியில் ஹாக்கி ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தியது.

அவர் வேறு யாரும் இல்லை, பி.ஆர் ஸ்ரீஜேஷ் எனப்படும் பரட்டு ரவீந்திரன் ஸ்ரீஜேஷ். கேரளாவின் கொச்சியில் பிறந்தவரான பி.ஆர் ஸ்ரீஜேஷ் இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கை போல், 2024 பாரீஸ் ஒலிம்பிக்கிலும் இந்திய ஹாக்கி அணி பதக்கம் வெல்வதற்கு ஸ்ரீஜேஷ் மிகவும் உறுதுணையாக இருந்தார்.

ex-hockey player gets curvv ev

ஒலிம்பிக்கில் மீண்டும் பதக்கம் வென்ற திருப்தியோடு ஓய்வு முடிவை அறிவித்த பிஆர் ஸ்ரீஜேஷ் 21 வயதுக்கு உட்பட்ட இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். அந்த மகிழ்ச்சியோடு மகிழ்ச்சியாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஸ்ரீஜேஷுக்கு கர்வ் இவி என்கிற எலக்ட்ரிக் காரை பரிசாக அறிவித்துள்ளது.

கர்வ் இவி ஆனது டாடா நிறுவனத்தில் இருந்து பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார் ஆகும். கொச்சியில் உள்ள ஒரு டாடா ஷோரூம் மூலம் ஸ்ரீஜேஷிடம் இந்த எலக்ட்ரிக் கார் டெலிவிரி செய்யப்பட்டுள்ளது. காரின் மேற்கூரையில் அமர்ந்திருப்பது என ஸ்ரீஜேஷ் கொடுத்த போஸ்களினால் டெலிவிரியின் போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ex-hockey player gets curvv ev

விலைமிக்க டாடா எலக்ட்ரிக் காராக விளங்கும் கர்வ் இவி -இன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.17.49 லட்சத்தில் இருந்து ரூ.21.99 லட்சம் வரையில் உள்ளன. டாடா மோட்டார்ஸின் 5வது எலக்ட்ரிக் காராக அறிமுகம் செய்யப்பட்ட கர்வ் இவி மொத்தம் 5 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. அக்கம்ப்ளீஷ்டு, அக்கம்ப்ளீஷ்டு+, அக்கம்ப்ளீஷ்டு+ எஸ், எம்பவர்டு+ மற்றும் எம்பவர்டு+ ஏ என்பன அந்த 5 வேரியண்ட்கள் ஆகும்.

கர்வ் இவி எலக்ட்ரிக் காரில் 45kWh பேட்டரி மற்றும் 55kWh என 2 விதமான பேட்டரி ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன. இதில் 45kWh பேட்டரியில் காரில் 502கிமீ வரையிலான ரேஞ்ச்சையும், 55kWh பேட்டரியில் 585கிமீ ரேஞ்சையும் பெறலாம். அக்கம்ப்ளீஷ்டு+ வேரியண்ட் 45kWh பேட்டரி ஆப்ஷன் உடன் மட்டுமே கிடைக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு விளையாட்டு போட்டிகளில் சாதிப்பவர்களுக்கு கார் பரிசளித்து வழக்கமாக மகிழ்ச்சி காண்பது மஹிந்திரா நிறுவனமே. ஆனந்த் மஹிந்திரா அவர்களின் எக்ஸ் பக்கத்திற்கு சென்றால் அவர்கள் அனைவரையும் காணலாம். ஆனால் தற்போது, மஹிந்திராவின் யுக்தியை டாடா மோட்டார்ஸும் பின்பற்ற ஆரம்பித்துள்ளது. இது உண்மையில் நல்ல விஷயமே.

More from DriveSpark

Article Published On: Friday, September 6, 2024, 16:59 [IST]
English summary
Ex indian hockey player sr sreejesh gets tata curvv ev electric car as prize
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X