நம்மல மாதிரி ஒரு எளிமையான ஆளு இந்த காரை ஓட்ட போறாருன்றது கேட்கும் போதே சந்தோஷமா இருக்கு..
கார்களை அதிகம் நேசிக்கக் கூடிய கிரிக்கெட் விளையாட்டு வீரர்களில் ஒருவராக ரோஹித் ஷர்மா உள்ளார். இதற்கு சான்றாக இவரிடத்தில் ஏகப்பட்ட ஆடம்பர கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அவற்றில் மிக சிறந்த மற்றும் அதிகம் லக்சூரி அம்சங்கள் நிறைந்த கார் மாடலாக நீல நிறம் கொண்ட லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus) கார் மாடல் இருக்கின்றது. இது ஓர் அதீத ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட எஸ்யூவி (SUV) ரக கார் மாடல் ஆகும்.
இந்த காரே தற்போது வேறொருவருக்கு சொந்தமாகி இருக்கின்றது. டிரீம் 11 (Dream 11) போட்டியின் வாயிலாகவே இந்த காரை ஓர் நபர் வெற்றி பெற்றிருக்கின்றார். நம்மை போலவே ஓர் ஆடம்பர காரையாவது வாங்கிவிட மாட்டோமா என்கிற கனவுடன் இருந்த ஓர் நபருக்கே கார் பரிசாக கிடைத்திருக்கின்றது.

Image Source: Full Throttle Mumbai டிரீம் 11 வாயிலாக தன்னுடைய லம்போர்கினி உருஸ் எஸ்யூவி ஆடம்பர காரை கிவ்-அவே (Give Away) தருவதாக சமீபத்தில் ரோஹித் ஷர்மா அறிவித்திருந்தார். இதையே தற்போது அவர் செய்துக் காட்டி இருக்கின்றார். இந்த காரை பரிசாக பெற்றவர் பற்றிய முழு விபரங்கள் வெளியாகவில்லை.
அதேவேளையில், சேடன் போர்கர் எனும் நபருக்கே இந்த கார் பரிசாக விழுந்திருக்கின்றது என்பதும், அவரின் படங்கள் மட்டுமே இப்போது வெளியாகி இருக்கின்றது. இந்தியாவில் லம்போர்கினி உருஸ் கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டே ரூ. 4.18 கோடிக்கும் அதிகமான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆனால், இந்த காரை ரோஹித் ஷர்மா வாங்கியபோது ரூ. 3.15 கோடி என்கிற விலையிலேயே விற்கப்பட்டது. இந்த காரை அவர் 2022 மார்ச் மாதத்திலேயே வாங்கினார் என்பது கவனிக்கத்தகுந்தது. உருஸ் இதுவே லம்போர்கினி நிறுவனத்தின் முதல் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும்.
இந்த காருக்கு பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட வெறும் 3.3 செகண்டுகளே போதும் என்பது கவனிக்கத்தகுந்தது. அதேவேளையில், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 300 கிமீ ஆகும். இந்த அதீத ஆற்றலை உருவாக்குவதற்காக இந்த காரில் 4.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் வி8 பெட்ரோல் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இது அதிகபட்சமாக 657 எச்பி மற்றும் 850 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இத்தகைய அதீத ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட காரையே டிரீம் 11 போட்டியின் வாயிலாக நம்மை போன்ற மிகவும் எளிமையான ஓர் நபர் வென்றிருக்கின்றார்.
இந்த காரை கிவ்-அவே கொடுத்திட்டாரே ரோஹித் ஷர்மா இப்போ எப்படி டிராவல் பண்ணுவாரு என்கிற சந்தேகம் எழும்பலாம். இந்த காரை இழந்தாலும் வேறு பல ஆடம்பர கார்கள் அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன. குறிப்பாக, சொகுசு மற்றும் அரிய வகை கார்கள் ஏகப்பட்டவை அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன.
அந்தவகையில், ஆடி ஆர்எஸ் க்யூ8 (Audi RSQ8), ஆஸ்டன் மார்டின் டிபிஎக்ஸ் 707 (Aston Martin DBX 707), போர்ஷே கேயென்னே டர்போ ஜிடி (Porsche Cayenne Turbo GT), ஃபெர்ராரி புரோசாங் (Ferrari Purosangue) மற்றும் மசேராட்டி லவன்டே(Maserati Levante) உள்ளிட்ட கார் மாடல்கள் அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் ஆடம்பர கார்களை பயன்படுத்தி வரும் கிரிக்கெட் விளையாட்டூ வீரர்களில் ரோஹித் ஷர்மாவும் ஒருவர் ஆவார். இந்த நிலையிலேயே டிரீம் 11 பக்கம் தன்னுடைய ரசிகர்களை ஈர்க்கும் பொருட்டு அவர் தன்னுடைய கிவ்-அவே செய்திருக்கின்றார். இதன் வாயிலாக மிகவும் எளிமையான ஓர் நபர் தற்போது பலன் அடைந்திருப்பது தெரிய வந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








