இவ்ளோ பெரிய அமெரிக்க பிராண்ட இந்திய நிறுவனம் கையகப்படுத்திருச்சா! அவங்க கொடி பறந்த இடத்துல நம்ம கொடி பறக்கபோது
இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் எக்ஸிகாம் (Exicom). இது ஓர் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் (EV charging) தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிறுவனம் ஆகும். அதாவது, மின் வாகனங்களுக்கான சார்ஜிங் கருவி மற்றும் மையங்களை உருவாக்கி தரும் நிறுவனமாக இது செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனமே தற்போது அமெரிக்க நிறுவனத்தை கையகப்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் ட்ரைடியம் (Tritium) எனும் நிறுவனத்தையே அது வாங்கியிருக்கின்றது. இது ஓர் டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் டெக்னாலஜி கம்பெனி (DC fast charging technology company) ஆகும்.
அதாவது, மின்சார வாகனங்களை வேகமாக சார்ஜ் செய்யும் கருவிகளை தயார் செய்வதில் கை தேர்ந்த நிறுவனம் ட்ரைடியம் செயல்பட்டு வருகின்றது. இத்தகைய ஓர் நிறுவனத்தையே இந்திய நிறுவனமான எக்ஸிகாம் தற்போது கையகப்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 37 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கே நிறுவனம் கை மாறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 310 கோடி ரூபாய்க்கே நிறுவனம் வாங்கப்பட்டு இருக்கின்றது. தற்போது எக்ஸிகாம் நிறுவனம் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்-இல் மிகப் பெரிய மின்சார வாகன சார்ஜிங் கருவிகளை உருவாக்கிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இங்கு வைத்து ட்ரைடியம் நிறுவனத்தின் அதி வேக சார்ஜிங் கருவிகள் தயாரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, ஹைதராபாத் எக்ஸிகாம் ஆலையில் 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் உற்பத்தி பணிகளுக்கு தயாராகிவிடும் என்பது தெரிய வந்திருக்கின்றது. ஆகையால், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திற்குள் நாட்டில் ட்ரைடியம் பிராண்டின் அதி வேக சார்ஜிங் கருவிகள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ட்ரைடியம் சார்ஜிங் கருவிகள் இந்தியாவிற்கு ஏற்றவையாக இருக்கும் என நிறுவனத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கின்றார். அதாவது, 20 டிகிரி செல்சியஸ் முதல் 55 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தைகூட தாங்கும் வகையிலேயே அந்த கருவிகள் இருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது.
இது வரும் காலக்கட்டத்திற்கு ஏற்ப கூடுதல் வெப்பத்தை தாங்கும் விதமாக மேம்படுத்தப்படும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. ஆகையால், அதிக திறன் வாய்ந்த சார்ஜிங் கருவிகளாக அது இருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. மேலும், இந்தியாவின் மிகப் பெரிய சார்ஜிங் கருவி தேவையை இந்த நிறுவனம் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியாவில் மின்சார வாகனங்களின் விற்பனை மிகப் பெரிய வளர்ச்சி அடைந்துக் காணப்படுகின்றது. சூழல் இப்படியாக இருக்க இந்தியாவில் இப்போதும் சார்ஜிங் மையங்களின் தட்டுப்பாடு தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றது. எனவே, விரைவில் இந்த நிலையைக் கணிசமாக குறைக்க ட்ரைடியம் சார்ஜிங் கருவிகள் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏற்கனவே இந்த பிரிவில் மிகப் பெரிய அளவில் தேவைகளைப் பூர்த்தி செய்துக் கொண்டிருக்கின்றது எக்ஸிகாம் நிறுவனம். இந்த நிறுவனம் எம்ஜி மோட்டார், டாடா மோட்டார்ஸ், கியா, மெர்சிடிஸ் பென்ஸ், வால்வோ, மஹிந்திரா, ஹூண்டாய் மற்றும் ஜேபிஎம் உள்ளிட்ட நிறுவனங்களுடன் கை கோர்த்து அந்த பிராண்டுகளின் வாகனங்களுக்கான சார்ஜிங் கருவிகளை தயாரித்து வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான தேவை நாளுக்கு அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த தேவையை பூர்த்தி செய்யும் விதமாக வாகன உற்பத்தியாளர்கள் தொடர்ந்து புதுமுக எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்குக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றனர். இதேபோல், வளர்ந்து வரும் மின்சார வாகன தேவையை பூர்த்தி செய்யும் எக்ஸிகாம் போன்ற பிராண்டுகள் நாட்டில் சார்ஜிங் மையங்களை அதிகளவில் உருவாக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








