லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தியில் நுழையும் Exide... பல ஜிகாவாட் மையங்களை அமைக்க இருப்பதாக அறிவிப்பு!

பிரபல பேட்டரி உற்பத்தி நிறுவனமான எக்ஸைட் (Exide) இந்தியாவில் பல ஜிகாவாட் லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தி மையங்களை அமைக்க இருப்பதாக அறிவித்திருக்கின்றது. இதன் வாயிலாக நாட்டில் மின் வாகன பயன்பாட்டின் எண்ணிக்கை இன்னும் பல மடங்கு உயரும் வாய்ப்பு உருவாகும். இதுகுறித்த இன்னும் கூடுதல் முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தியில் நுழையும் Exide... பல ஜிகாவாட் மையங்களை அமைக்க இருப்பதாக அறிவிப்பு!

முன்னணி பேட்டரி செல் உற்பத்தி நிறுவனமான எக்ஸைட் (Exide) நாட்டில் ஜிகாவாட் லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தி மையங்களை அமைக்கத் திட்டமிட்டிருக்கின்றது. மையங்களா?.. ஆமாங்க, ஒன்றல்ல பல பேட்டரி தயாரிப்பு ஆலைகளை அமைக்கப் போவதாக நிறுவனம் அறிவித்திருக்கின்றது.

லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தியில் நுழையும் Exide... பல ஜிகாவாட் மையங்களை அமைக்க இருப்பதாக அறிவிப்பு!

சமீப சில காலமாக இந்தியர்கள் மத்தியில் மின் வாகனங்களுக்கு பேராதரவு கிடைக்கத் தொடங்கியிருக்கின்றது. கடந்த காலங்களைக் காட்டிலும் இது பல மடங்கு அதிகரித்திருப்பதை நம்மால் கண்கூடாகப் பார்க்க முடிகின்றது. ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் பல கட்ட முயற்சிகளினாலேயே இது சாத்தியமாகியிருக்கின்றது.

லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தியில் நுழையும் Exide... பல ஜிகாவாட் மையங்களை அமைக்க இருப்பதாக அறிவிப்பு!

பெட்ரோல், டீசல் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் பொருட்டு மானியம், வரி சலுகை மற்றும் பதிவு கட்டணம் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அரசுபுதிய மின் வாகனங்களுக்கு வழங்கி வருகின்றன. இதன் விளைவாக நாட்டில் முன்பைக் காட்டிலும் பல மடங்கு எலெக்ட்ரிக் வாகனங்களின் இயக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது.

லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தியில் நுழையும் Exide... பல ஜிகாவாட் மையங்களை அமைக்க இருப்பதாக அறிவிப்பு!

மின் இயக்கத்தை அதிகரிக்க செய்வது மட்டும் அரசின் நோக்கமல்ல என்பது இங்கு கவனிக்கத்தகுந்தது. மின் வாகனம் மற்றும் மின் வாகனம் சார்ந்த பிற உபகரண உற்பத்திகளில் நாட்டை சிறந்து விளங்க வைக்கின்ற வகையிலான முயற்சிகளிலும் அரசு ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில் மிக சமீபத்தில் ஒன்றிய அரசு பேட்டரி உற்பத்தி பணிகளை நாட்டில் ஊக்குவிக்கும் வகையில் ஓர் சிறப்பு திட்டத்தை அறிவித்தது.

லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தியில் நுழையும் Exide... பல ஜிகாவாட் மையங்களை அமைக்க இருப்பதாக அறிவிப்பு!

இந்த திட்டத்தின் கீழாகவே பல ஜிகாவாட் லித்தியம் அயன் பேட்டரி செல் உற்பத்தி ஆலைகளை அமைக்க எக்ஸைட் நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. அண்மையில் கனரக தொழில்துறை அமைச்சகம், மேம்பட்ட வேதியியல் செல் (Advanced Chemistry Cell) பேட்டரி சேமிப்பகத்தை ஊக்குவிப்பதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் பங்கேற்கும் வகையிலேயே எக்ஸைட் நிறுவனம் தற்போது விண்ணப்பித்திருக்கின்றது.

லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தியில் நுழையும் Exide... பல ஜிகாவாட் மையங்களை அமைக்க இருப்பதாக அறிவிப்பு!

இதற்கான ஒப்புதல் கிடைத்த உடன் ஆலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டு நிறுவனமான லெக்லாஞ்ச் உடனான கூட்டணியில் பேட்டரிகள் லித்தியன் அயன் பேட்டரி சிஸ்டம் மற்றும் எனர்ஜி சொல்யூஷன்ஸ் உருவாக்கப்பட இருக்கின்றன.

லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தியில் நுழையும் Exide... பல ஜிகாவாட் மையங்களை அமைக்க இருப்பதாக அறிவிப்பு!

எக்ஸைட் நிறுவனத்தின் இந்த முயற்சி இந்தியாவின் மின் வாகன கொள்கையை ஒரு படி மேலே எடுத்து செல்ல உதவியாக இருக்கும் என யூகிக்கப்படுகின்றது. ஏற்கனவே இந்நிறுவனம் லீட் ஆசிட் ரக பேட்டரி உற்பத்தி, வடிவமைப்பு மற்றும் மார்கெட்டிங் என பல தரப்பட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தியில் நுழையும் Exide... பல ஜிகாவாட் மையங்களை அமைக்க இருப்பதாக அறிவிப்பு!

டெலிகாம் நிறுவனங்கள், வாகனங்கள், ரயில்வே துறை, பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கான பேட்டரிகளை நிறுவனம் உற்பத்தி செய்து வருகின்றது. மேலும், இந்நிறுவனம் உலகின் 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அதன் பேட்டரிகளை ஏற்றுமதி செய்து வருகின்றது.

லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தியில் நுழையும் Exide... பல ஜிகாவாட் மையங்களை அமைக்க இருப்பதாக அறிவிப்பு!

இந்த நிலையிலேயே ஜிகாவாட் லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தி ஆலைகளை உருவாக்கும் பணிகளை மேற்கொள்ள இருப்பதாக நிறுவனம் தகவல் வெளியிட்டிருக்கின்றது. நாட்டில் அதிகரித்து வரும் மின் வாகன பயன்பாட்டிற்கு நிறுவனத்தின் இந்த முயற்சி பெரும் பங்கினை வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தியில் நுழையும் Exide... பல ஜிகாவாட் மையங்களை அமைக்க இருப்பதாக அறிவிப்பு!

இந்த முயற்சி குறித்து நிறுவனத்தின் எம்டி மற்றும் சிஇஓ-ஆன சுபிர் சக்ரபோர்தி கூறியதாவது, "நாங்கள் இப்போது பல-கிகாவாட் லித்தியம்-அயன் செல் உற்பத்தி ஆலைகளை அமைக்க இந்திய அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட, மேம்பட்ட வேதியியல் செல் உற்பத்திக்கான ஊக்கத் திட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டுள்ளோம். செல் உற்பத்தி என்பது லித்தியம்-அயன் பேட்டரி உற்பத்தி சங்கிலியின் ஒருங்கிணைந்த பகுதியாக செயல்படும். மேலும், இந்த ஆலையை அமைப்பதன் வாயிலாக சந்தையில் போட்டியான விலையில் பேட்டரிகளை எங்களது மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியும் என நாங்கள் நம்புகின்றோம்'' என்கிறார்.

Most Read Articles

English summary
Exide decided to set up a multi gigawatt lithium ion cell manufacturing plant
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X