பிரம்மிப்பில் ஆழ்த்தும் பணக்கார விளையாட்டு வீரர் மேவெதரின் மோட்டார் உலகம்!

By Saravana

இந்த மாத துவக்கத்தில் நடந்த ஜெனீவா மோட்டார் ஷோவில் உலகின் பெரும் விலை கொண்ட புகாட்டி சிரோன் கார் அறிமுகம் செய்யப்பட்டது. மொத்தமாக 500 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு முன்னதாகவே, இந்த காரை முன்பதிவு செய்வதற்கு பெரும் பணக்காரர்கள் முண்டியடித்தனர்.

மேலும், சிலர் புகாட்டி சிரோன் கார் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாகவே, கோடிகளை கொட்டி அடித்துப் பிடித்து இந்த காரை முன்பதிவு செய்துள்ளனர். அதில் ஒருவர்தான் உலகின் பெரும் பணக்கார குத்துச் சண்டை வீரர் மேவெதர். இவரிடம் இருக்கும் பணத்திற்கு சாட்சியாக நிற்பது இவரது கார் கராஜ். ஆம், இவரது கார் கராஜில் நூற்றுக்கும் மேற்பட்ட விலையுயர்ந்த கார்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இந்தநிலையில், விரைவில் புகாட்டி சிரோன் காரும் இவரது கராஜை அலங்கரிக்க வருகிறது.

புகாட்டி சிரோன்

புகாட்டி சிரோன்

உலகின் அதிவேக தயாரிப்பு நிலை மாடல் என கின்னஸ் சாதனை படைத்த புகாட்டி வேரான் காருக்கு மாற்றாக, இந்த புதிய புகாட்டி சிரோன் கார் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் தொழில்நுட்ப வல்லமையின் மணி மகுடத்திற்கு அழகு சேர்க்கும் மாடலாக விளங்குகிறது.

சிரோன் எஞ்சின்

சிரோன் எஞ்சின்

புகாட்டில் வேரான் காரில் இருந்த அதே டபிள்யூ16 8.0 லிட்டர் எஞ்சினை மேம்படுத்தி இந்த காரில் பொருத்தியிருக்கின்றனர். 16 சிலிண்டர்கள் கொண்ட இந்த காரின் எஞ்சின் அதிகபட்சமாக 1,479 பிஎச்பி பவரையும், 1,600 என்எம் டார்க்கையும் வாரி வழங்கும் வல்லமை பொருந்தியது. அனைத்து சக்கரங்களுக்கும் டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் மூலமாக எஞ்சின் ஆற்றல் கடத்தப்படுகிறது.

எடை

எடை

கார்பன் ஃபைபர் யூனிபாடி கட்டமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கார் 1,995 கிலோ எடை கொண்டது.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

மணிக்கு 420 கிமீ வேகம் கொண்டதாக கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. இது புகாட்டி வேரான் காரை விட சற்றே கூடுதல் வேகம் கொண்டதாக வந்திருக்கிறது. மேலும், 0 - 100 கிமீ வேகத்தை 2.5 வினாடிகளிலும், 0 - 200 கிமீ வேகத்தை வெறும் 6.5 வினாடிகளிலும், 0 - 300 கிமீ வேகத்தை 13.6 வினாடிகளிலும் தொட்டுவிடுமாம்.

விலை

விலை

புதிய புகாட்டி சிரான் கார் 2.4 மில்லியன் யூரோ விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.17.82 கோடி விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த விலை மேவெதருக்கு ஜூஜுபியாக கூற முடியும். ஏனெனில், அவர் தற்போது வைத்திருக்கும் கார்களை பார்த்தாலே உங்களுக்கு புரிந்துவிடும். ஆனால், மேவெதர் வீட்டு கராஜை தொடும்போது இதன் விலை 3.5 மில்லியன் டாலர்களாக இருக்குமாம்.

எக்கச்சக்க கார்கள்

எக்கச்சக்க கார்கள்

குத்துச் சண்டை சாம்பியனான ஃப்ளாய்ட் மேவெதர், சுமார் 100-க்கும் மேற்பட்ட கார்களை தனது கராஜில் வைத்திருக்கிறார். உலகின் பல விலை உயர்ந்த கார்களை தன் வசம் கொண்டுள்ளார். உலகிலேயே அதிக கார்களை கொண்ட கராஜில் இவரின் கார் கராஜும் ஒன்றாக இருக்கிறது.

விந்தையான பழக்கம்

விந்தையான பழக்கம்

ஃப்ளாய்ட் மேவெதர் ஒரே காரின் பல்வேறு மாடல்களை வாங்கும் வழக்கமும் கொண்டவர். இதனால், அவரின் கராஜ் மிகவும் வித்தியாமானதாக காட்சியளிக்கிறது.

அடுத்த வேடிக்கை

அடுத்த வேடிக்கை

ஃப்ளாய்ட் மேவெதரிடம் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கார்களில், வெள்ளை நிற கார்கள் மற்றும் கருப்பு நிற கார்கள் என 2 தொகுப்புகளாக வைத்திருக்கிறார். இவரிடம் உள்ள அனைத்து கருப்பு வண்ண கார்களும் லாஸ் ஏஞ்ஜலஸ்ஸிலும், அனைத்து வெள்ளை வண்ண கார்களையும் மியாமியில் உள்ள கராஜிலும் வைத்திருக்கிறார்.

ஒரே டீலரிடம் 100 கார்கள்;

ஒரே டீலரிடம் 100 கார்கள்;

அமெரிக்காவிலுள்ள டோபின் மோட்டார்கார்ஸ் என்ற டீலரிலிருந்து மட்டும் 100 கார்களை வாங்கியிருக்கிறாரம். இதில், அனைத்து கார்களையும் ரொக்கம் கொடுத்து வாங்கியியுள்ளராம். இந்த டீலருக்கும், மேவெதருக்குமான வாடிக்கை பந்தம் 18 ஆண்டுகளாக நீடிக்கிறதாம். சரி, அவரிடம் நூற்றுக்கணக்கான கார்கள் இருப்பதால், அதில் டாப் 10 கார்களை தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறோம். இதிலிருந்தே, அவரது கார் கலெக்ஷன் ஆர்வத்தை புரிந்து கொள்ள முடியும்.

பென்ட்லீ முல்சான்

பென்ட்லீ முல்சான்

பென்ட்லீ முல்சான் தான் பென்ட்லீ நிறுவனம் விற்கும் மாடல்களிலேயெ மிகவும் விலை உயர்ந்த மாடல் ஆகும். இது நடமாடும் சொகுசு சின்னமாக கருதப்படுகிறது. இந்த காரின் எஞ்சின் அதிகபட்சமாக 505 எச்பி பவரை அளிக்க வல்ல வி8 இஞ்ஜின் கொண்டுள்ளது. மணிக்கு 305 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்ட இந்த கார் இந்திய மதிப்பில் ரூ.4 கோடி முதல் ரூ.5.5 கோடி வரை விலை மதிப்பு கொண்டது. இதுமட்டுமா, இன்னும் எத்தனை பென்ட்லீ உள்ளே இருக்கிறது என்று அவருக்கே தெரியாது போலும்.

 02. புகாட்டி வேரான்

02. புகாட்டி வேரான்

கடந்த ஆண்டு புகாட்டி வேரான் கிரான்ட் ஸ்போர்ட் விட்டெஸி மாடல் சூப்பர் காரை வாங்கினார். இதற்காக, அவரது கராஜில் ஏற்கனவே இருந்த 4 புகாட்டி வேரான் கார்களை விற்றுவிட்டு வாங்கினாராம். உலகின் அதிவேக தயாரிப்பு நிலை மாடல் கார் என்ற பெருமைமிக்க புகாட்டி வேரானுக்கு உண்டு. இந்த காரில் இருக்கும் 8.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 987 பிஎச்பி பவரையும், 1250 என்எம் டார்க்கையும் வழங்கும். இந்த காரை 3.5 டாலர் விலை கொடுத்து கராஜிற்கு கொண்டு வந்துள்ளார். அவர் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மாடல்களில் இதுவும் ஒன்று. லிட்டருக்கு 4 கிமீ மைலேஜ் தரும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், ஒரு கிலோமீட்டருக்கு எத்தனை லிட்டரை குடிக்கும் என்று அதன் மேவெதருக்கு வெளிச்சம்.

 03. ஃபெராரி 458 இட்டாலியா

03. ஃபெராரி 458 இட்டாலியா

மேவெதரிடம் பல ஃபெராரி கார்கள் இருக்கின்றன. அதில், ஃபெராரி 458 இட்டாலியா மாடலும் ஒன்று. அந்த வெற்றிகரமான ஸ்போர்ட்ஸ் கார் மாடல். கடந்த ஆண்டுடன் உற்பத்தி முடிவுக்கு வந்துவிட்டது. இந்த காரில் 4.5 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக 570 பிஎஸ் பவரையும், 540 என்எம் டார்க்கையும் வழங்கும். 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் கொண்டது. 0- 100 கிமீ வேகத்தை 2.9 வினாடிகளில் தொட்டுவிடும். மணிக்கு 340 கிமீ வேகம் வரை செல்லும்.

04. ஃபெராரி 599 ஜிடிபி ஃபியரானோ

04. ஃபெராரி 599 ஜிடிபி ஃபியரானோ

மேவெதரிடம் இருக்கும் மற்றொரு ஃபெராரி மாடல். இந்த காரில் 612 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 6.0 லிட்டர் வி12 எஞ்சின் உள்ளது. இந்த காரின் விசேஷம் என்னவெனில், மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக விற்பனை செய்யப்பட்ட கடைசி ஃபெராரி மாடல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இதனை பொக்கிஷமாக பாதுகாத்து வரும் வாடிக்கையாளர்களில் மேவெதரும் ஒருவர்.

 05. ஃபெராரி என்ஸோ

05. ஃபெராரி என்ஸோ

ஃபெராரி நிறுவனத்தின் ஸ்தாபகரின் பெயரில் வெளியான மிகவும் விசேஷமான மாடல். இந்த காரில் இருக்கும் எஞ்சின் 651 எச்பி பவரை அளிக்க வல்லது. அத்துடன், அதிகபட்சமாக மணிக்கு 354 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது. இது அம்சமான டிசைன் கொண்ட ஃபெராரி என்று கூற முடியாவிட்டாலும், ஃபெராரியின் விசேஷமான மாடல்களில் ஒன்றாக இருக்கிறது.

 06. மெக்லாரன் 650எஸ்

06. மெக்லாரன் 650எஸ்

மேவெதர் கராஜில் இல்லாத பிராண்டை தேடுவதுதான் சிரமம். ஆம், அவரிடம் மெக்லாரன் 650எஸ் சூப்பர் காரும் உள்ளது. மெக்லாரன் எம்பி-4-12சி காரின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட புதிய சூப்பர் கார் மாடல். கடந்த 2014ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரில் 641 பிஎச்பி பவரையும், 680 என்எம் டார்க்கையும் வழங்கும் 3.8 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 333 கிமீ வேகம் வரை செல்லும். 0 - 100 கிமீ வேகத்தை 3 வினாடிகளில் தொட்டுவிடும்.

07. மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி

07. மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் மிகவும் பிரத்யேகமான கல்விங் அமைப்புடைய மாடல். மெர்சிடிஸ் ஏஎம்ஜி 300எல் காருக்கு மாற்றாக வந்தது. 2010 முதல் 2015 வரை விற்பனையில் இருந்தது. தற்போது இதற்கு மாற்றாக மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி கார் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது.

08. லம்போ அவென்டேடார்

08. லம்போ அவென்டேடார்

சூப்பர் கால் உலகின் முடிசூடா மன்னம். கடந்த 2011ல் லம்போ மூர்சிலாகோ காருக்கு மாற்றாக வந்தது. விற்பனையிலும் அசத்தி வருகிறது.

09. போர்ஷே 911 டர்போ கேப்ரியோ

09. போர்ஷே 911 டர்போ கேப்ரியோ

தனித்துவமான வடிவமைப்பு கொண்ட போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார் மாடல்களுக்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில், மேவெதரிடம் 911 டர்போ கேப்ரியோ மாடல் உள்ளது. இந்த காரில் இருக்கும் 3.8 லிட்டர் டர்போ எஞ்சின் 560 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த கார் ரூ.1.51 கோடி விலை மதிப்புகொண்டது.

10. ரோல்ஸ்ராய்ஸ்கள்...

10. ரோல்ஸ்ராய்ஸ்கள்...

உலக கோடீஸ்வரர்களின் அதிகபட்சமான கனவு கார் இதுவாக உள்ளது. ஆனால், கோடிகளை கொட்டி கொடுத்தாலும், வாடிக்கையாளர் பின்புலத்தை ஆராய்ந்த பிறகே, காரை விற்பனை செய்கிறது ரோல்ஸ்ராய்ஸ். எனவே, ஒரு ரோல்ஸ்ராய்ஸ் வைத்திருப்பதே அந்தஸ்தின் பெரும் அடையாளம். ஆனால், மேவெதரிடம் 16 ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் உள்ளனவாம்.

இதர கார்கள்

இதர கார்கள்

பகானி ஹூவைரா, அஸ்டன் மார்ட்டின் ஒன்-77, கோனிக்செக் சிசிஎஸ்எக்ஸ்ஆர் டிரெவெட்டா என இந்த பட்டியலை முடிக்க இன்று போதாது போலிருக்கிறது.

ஓட்டுவதில்லையாம்...

ஓட்டுவதில்லையாம்...

ஒருமுறை ஈஎஸ்பிஎன் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மேவெதர், தான் வைத்திருக்கும் பல கார்களை ஓட்டுவதில்லை என்று தெரிவித்திருந்தார். எனவே, அவரது கராஜில் நிற்கும் பல கார்கள் வேலை வெட்டி இல்லால், சோம்பேறியாக ஒரு இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டு நிற்கின்றன.

உலகின் பணக்கார கார் கராஜ்

உலகின் பணக்கார கார் கராஜ்

மேவெதரின் கராஜில் இருக்கும் கார்களின் மதிப்பு 22 மில்லியன் டாலர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இதில், பல அரிய வகை கார் மாடல்களும் இருப்பதால், உண்மையான மதிப்பு இதற்கு மேலும் இருக்கும் என கருதப்படுகிறது. உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிடுவது போன்று, உலகின் பணக்கார கராஜ் பட்டியலை வெளியிட்டால், அதில் முதன்மையான இடங்களில் ஒன்றை மேவெதர் கார் கராஜ் நிச்சயம் இடம்பிடிக்கும்.

சொத்து மதிப்பு

சொத்து மதிப்பு

உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரரான ஃப்ளாயிட் மேவெதர் ஜுனியரின் தற்போதைய சொத்து மதிப்பு 650 மில்லியன் டாலர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இதுவும் ஆடம்பர பிராண்டுதான்...

இதுவும் ஆடம்பர பிராண்டுதான்...

தனது மகன் கோரவுன் பிறந்தாளுக்கு பென்ட்லீ கோல்ஃப் கார்ட் காரில் வலம் வரும் மேவெதர்.

கல்ஃப்ஸ்ட்ரீம் V விமானம்

கல்ஃப்ஸ்ட்ரீம் V விமானம்

மேவெதரிடம் நூற்றுக்கணக்கான கார்கள் தவிர்த்து இரண்டு தனிநபர் விமானங்களும் உள்ளன. அதில், ஒன்று கல்ஃப்ஸ்ட்ரீம் V விமானமாகும். அமரிக்காவின் கல்ஃப்ஸ்ட்ரீம் விமான நிறுவனத்தின் தயாரிப்பு இது.

கஸ்டமைஸ்

கஸ்டமைஸ்

உள்புறத்தில் சொகுசான இருக்கைகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கஸ்டமைஸ் செய்யப்பட்டிருக்கிறது. சாதாரணமாக 14 பேர் முதல் 19 பேர் வரை செல்லும் விதத்தில் கஸ்டமைஸ்செய்து தரப்படுகிறது. குளிர்சாதனப் பெட்டி, ரெஸ்ட் ரூம் உள்ளிட்டவற்றுடன் இந்த கல்ஃப்ஸ்ட்ரீம் V விமானத்தை கஸ்டமைஸ் செய்து வாங்கியிருக்கிறார்.

பணியாளர் எண்ணிக்கை

பணியாளர் எண்ணிக்கை

இந்த விமானத்தில் தனது வர்த்தக தொடர்புகளுக்காகவும், விளையாட்டுக்காவும் பெரிதும் பயன்படுத்தியுள்ளார். 2 பைலட்டுகள், 2 பணியாளர்களை கொண்டு இயக்கப்படுகிறது.

தொழில்நுட்ப விபரம்

தொழில்நுட்ப விபரம்

96 அடி நீளமும், 93 அடி இறக்கை அகலமும் கொண்டது இந்த விமானம். விமானத்திற்குள் பயன்பாட்டு பகுதி என்றால் 50 அடி நீளமும், 7 அடி அகலும் கொண்ட கேபின் இருக்கிறது. 6.2 அடி உயரத்திற்கான உடற்கூடு அமைப்பை பெற்றிருக்கிறது.

பயண தூரம்

பயண தூரம்

ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் அதிகபட்சமாக 12,000 தூரம் வரை பறக்கும். மணிக்கு 904 கிமீ வேகம் வரை பறக்கும்.

விலை

விலை

ஆரம்பத்தில் அமெரிக்க ராணுவ பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த விமானத்தின் பிசினஸ் க்ளாஸ் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டது. அதில், ஒன்றையே மேவெதர் வாங்கி வைத்துள்ளார். இந்த விமானத்தின் விலை ரூ.42 மில்லியன் டாலர் முதல் 53.5 மில்லியன் டாலர் விலை கொண்டதாக தெரிவிக்கப்படுகிறுத.

தொடர்புடைய செய்தி

தொடர்புடைய செய்தி

அரபு ஷேக்கின் பிரம்மாண்டமான மோட்டார் உலகம்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Exotic Cars Owned by Floyd Mayweather.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X