காப்பீடு நிறுவனங்களை கதற வைக்கும் காஸ்ட்லியான கார் விபத்துக்கள்!

Written By:

அழகு இருக்கும் இடத்தில் ஆபத்து இருக்கும் என்பதுபோல, டிசைனாலும், செயல்திறனாலும் வசீகரிக்கும் சூப்பர் கார்கள் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்கள் விபத்தில் சிக்கும்போது மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்துகின்றன. அது உரிமையாளருக்கு மட்டுமில்லை, காப்பீடு நிறுவனங்களுக்கும் பெரும் தலைவலியாக அமைந்துவிடுகின்றன.

விபத்து ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ள ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு பிரிமியம் தொகை மிக அதிகமாக இருந்தபோதிலும், அவை விபத்தில் சிக்கி சரிசெய்யும்போது சில சமயம் புதிய காருக்கு இணையான விலைக்கு ரிப்பேர் செலவுகள் ஆகின்றன. இதனால், கார் நிறுவனங்களுக்கும், உரிமையாளர்களுக்கும் இடையில் பெரும் அக்கப்போராக மாறிவிடுகிறது. அதுபோன்று, காப்பீடு நிறுவனங்களை கதறவிட்ட சமீபத்தில் நடந்த 5 மோசமான ஸ்போர்ட்ஸ் கார் விபத்துக்களை ஸ்லைடரில் காணலாம்.

05. ஃபெராரி 458 இட்டாலியா

05. ஃபெராரி 458 இட்டாலியா

அமெரிக்காவின் புளோரிடாவிலுள்ள போகா ரேட்டன் என்ற இடத்தில், ஃபெராரி 458 இட்டாலியா கார் ஒன்று நீர் தேங்கிய சாலையை கடக்க முயன்றபோது, வழுக்கியதால் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. மிக மோசமாக சேதமடைந்த இந்த காரில் எஞ்சின் மட்டுமே சிறிய சேதங்களுடன் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆனால், காரை ஓட்டியவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். இந்த காரை மீண்டும் பழையபடி புதுப்பித்து ரிப்பேர் செய்வதற்கு அதிக அளவு தொகையை இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம் தர வேண்டியிருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

இழப்பீடு கிடைக்குமா?

இழப்பீடு கிடைக்குமா?

தற்போது இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம் தலையை பிய்த்துக் கொண்டிருக்கிறது. ஒருவேளை, காரை சரிசெய்வதற்கான தொகையை இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம் தருவதற்கான வாய்ப்பு இல்லையெனில், நசுக்குவதற்கு அனுப்பப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக, மதிப்பீடுகள் தொடர்ந்து வருகின்றன. ஃபெராரி 458 இட்டாலியா கார் 2009ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை உற்பத்தியில் இருந்தது. பின்புறத்தில் நடுநாயகமாக எஞ்சின் பொருத்தப்பட்டிருந்ததால், சேதமடையாமல் தப்பியது. மணிக்கு 340 கிமீ வேகம் வரை எட்டிப்பிடிக்க கூடிய இந்த காருக்கு மாற்றாக, தற்போது 488 ஜிடிபி மாடல் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. இந்திய மதிப்பில் ரூ.2.57 கோடி மதிப்பு கொண்டது.

விலை மதிப்பில்லா கார்கள்

விலை மதிப்பில்லா கார்கள்

சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த கிளாஸிக் கார்களுக்கான பந்தயத்தில், துரதிருஷ்டவசமாக விலை மதிப்பில்லாத அரிய கார் மாடல்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன. அதில், 1959ம் ஆண்டு லீ மான்ஸ் கார் பந்தயத்தில் இரண்டாம் இடம் பிடித்த, சர் ஸ்டெர்லிங் மோஸ் பயன்படுத்திய அஸ்டன் மார்ட்டின் டிபிஆர்-1 காரும் ஒன்று. இதன் மதிப்பு 30 மில்லியன் டாலர்களாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், இந்த விபத்தில் ஜாகுவார் எக்ஸ்கே 1.51 லட்சம் டாலர்கள் மதிப்பிலானது. மற்றொரு ஆஸ்டின் ஹீலி 100 கார் 90,000 டாலர்கள் மதிப்பு கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மொத்தமாக 30 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான கார்கள் விபத்தில் சிக்கியுள்ளன.

கிளாஸிக் கார் பிரியர்கள் சோகம்

கிளாஸிக் கார் பிரியர்கள் சோகம்

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமானதாக கூறப்படும் ஒரேவிஷயம் காரை செலுத்தியவர்கள் யாருக்கும் காயமில்லை. மேலும், இந்த கார்களை மீண்டும் சரிசெய்யப்படும் என்று உரிமையாளர்கள் திட்டவட்டமாக கூறியிருக்கின்றனர். தற்போது 20 மில்லியன் பவுண்ட் மதிப்புடைய அஸ்டன் மார்ட்டின் டிபிஆர்-1 கார் இங்கிலாந்தின் பிரபல முதலீட்டாளரான அட்ரியன் பீகிராஃப்ட் வசம் உள்ளது. மீண்டும் இந்த கார் பழையபடி புனரமைத்து வரும் என்று கிளாஸிக் கார் ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

03. லாஃபெராரி விபத்து

03. லாஃபெராரி விபத்து

சமீபத்தில் ஹங்கேரி நாட்டின் புதாபெஸ்ட் நகரில், டீலர்ஷிப்பில் டெலிவிரி பெற்ற சிறிது நேரத்தில் ஒரு லாஃபெராரி கார் விபத்தில் சிக்கியது. அதிவேகம் எல்லாம் இல்லை. சாதாரணமாக சாலையில் சென்றுகொண்டிருக்கும்போதே, இந்த காரின் ஓட்டுனர் ஆக்சிலரேட்டரை வேகமாக கொடுத்ததுதான் விபத்துக்கு காரணமாகிவிட்டது. 963 குதிரைசக்தி திறன் கொண்ட அந்த காரை ஓட்டிவர், பழக்கமில்லாமல் திமிறிக்கொண்டு பாய்ந்த அந்த காரை கட்டுப்படுத்த முடியாமல் போனது. இதில், காரின் வலது பக்கம் கடுமையாக சேதமடைந்தது.

ஸ்பெஷல் ஃபெராரிகளில் ஒன்று

ஸ்பெஷல் ஃபெராரிகளில் ஒன்று

மொத்தம் 499 லாஃபெராரி கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ளன. இந்த நிலையில், கடந்த ஆண்டு டெலிவிரி கொடுத்தது முதல் இதுவரை விபத்தில் சிக்கிய நான்காவது லாஃபெராரி கார் மாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கார் ஒரு மில்லியன் டாலர் மதிப்பு கொண்டது. தற்போது அனைத்து லாஃபெராரி கார்களுக்கும் விற்று தீர்ந்து டெலிவிரி கொடுக்கப்பட்டு வருவதால், அரிதான மாடல்களில் ஒன்றாக விளங்குகிறது.

02. லம்போர்கினி அவென்டேடார்

02. லம்போர்கினி அவென்டேடார்

சீனாவில், சமீபத்தில் நடந்த மோசமான விபத்தில் லம்போர்கினி அவென்டேடார் கார் ஒன்று மிக மோசமாக சேதமடைந்தது. டிரக் ஒன்றின் பின்புறத்தில் மோதியதால், காரின் டாப் கழன்றதுடன், முன்புறத்திலும் கடுமையாக சேதம் ஏற்பட்டது.

சான்ஸே இல்ல...!!

சான்ஸே இல்ல...!!

விபத்தில் சிக்கிய லம்போர்கினி அவென்டேடார் கார் 4 லட்சம் டாலர் மதிப்புடையது. இந்த கார் இவ்வாறு படுமோசமாக விபத்தில் சிக்கினாலும், அதில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த காரை மீண்டும் புதுப்பிக்க முடியாத அளவுக்கு சேதமடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

சான்ஸே இல்ல...!!

சான்ஸே இல்ல...!!

விபத்தில் சிக்கிய லம்போர்கினி அவென்டேடார் கார் 4 லட்சம் டாலர் மதிப்புடையது. இந்த கார் இவ்வாறு படுமோசமாக விபத்தில் சிக்கினாலும், அதில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த காரை மீண்டும் புதுப்பிக்க முடியாத அளவுக்கு சேதமடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

01. மீண்டும் ஒரு ஃபெராரி

01. மீண்டும் ஒரு ஃபெராரி

சமீபத்தில் இத்தாலி நாட்டின் மிலன் நகரிலுள்ள மோன்ஸா கார் பந்தய களத்தில் நடந்த விபத்தில் ஃபெராரி எஃப்எக்ஸ்எக்ஸ் கார் படுமோசமான விபத்தில் சிக்கியது. பந்தய களத்தின் பக்கவாட்டில் இருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்தில் சிக்கிய அந்த கார் கடுமையாக சேதமடைந்தது. காயங்களுடன் ஓட்டுனரை கார் பந்தய களத்தில் இருந்த மீட்புப்படையினர் மீட்டனர்.

அரிதான ஃபெராரி

அரிதான ஃபெராரி

விபத்தில் சேதமடைந்த ஃபெராரி எஃப்எக்ஸ்எக்ஸ் கார் அரிதான ஃபெராரி கார்களில் ஒன்று. இந்த காரின் மதிப்பு 3 மில்லியன் டாலர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த காரை மீண்டும் சரிசெய்வதற்கு அதிக செலவாகும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இருந்தாலும், இந்த காரின் மதிப்பை வைத்து மீண்டும் சரிசெய்து கார் பந்தய களத்திற்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய காஸ்ட்லி கார் விபத்துக்கள்...

01. உலகின் காஸ்ட்லி கார் விபத்துக்கள்...

02. உலகின் காஸ்ட்லி கார் கராஜ்கள்...

03. உலகின் காஸ்ட்லி ஃபெராரி... விலை ரூ.321 கோடி

 
மேலும்... #ஆஃப் பீட்
English summary
அதிக இழப்புகளை ஏற்படுத்திய சமீபத்திய கார் விபத்துக்களின் சிறப்புத் தொகுப்பு!
Story first published: Monday, November 16, 2015, 17:40 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark