பார்க்கும் இடத்தில் எல்லாம் ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள்... இத்தனை எப்படி திடீரென சாலைக்கு வந்துச்சு!
இந்தியாவின் பணக்கார குடும்பமான அம்பானி குடும்பத்தினர் ரோல்ஸ் ராய்ஸ் (Rolls-Royce) கார்களை அதிகமாக வைத்துள்ளனர். இந்த நிலையில், அண்மையில் பெங்களூருவில் நடந்த ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் பேரணியில், ரூ.100 கோடிக்கு மேல் மதிப்புள்ள டஜன் கணக்கான ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் அணிவகுத்தன. இந்த அணிவகுப்பு அம்பானி குடும்பத்தின் ரோல்ஸ் ராய்ஸ் கார் சேகரிப்பையே மிஞ்சும் அளவிற்கு இருந்தது.
பெங்களூருவில் சமீபத்தில் நிறைவடைந்த இந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் பேரணியின் வீடியோவை, "தி பிக் கேரேஜ்" என்ற இன்ஸ்டாகிராம் சேனல் பகிர்ந்துள்ளது. கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் பிஎம்டபிள்யூ ஷோரூம்கள் மற்றும் சேவை மையங்களைக் கொண்ட "குன் எக்ஸ்க்ளூசிவ்" என்ற டீலர் நெட்வொர்க் இந்த பேரணியை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த ஆடம்பரமான கார் பேரணியில் முதல் வாகனமாக, பிஎம்டபிள்யூ ஐ7 (BMW i7) என்கிற எலக்ட்ரிக் செடான் கார் ஒன்று முன்னிலை வகித்தது. அதனைத் தொடர்ந்து, ஹோட்டலில் இருந்து வெளியேறும் இரண்டு ரோல்ஸ் ராய்ஸ் ஃபாண்டோம் (Phantom) VII செடான் கார்களை வீடியோவில் காணலாம். அதில் ஒரு ஃபாண்டோம் VII சீரிஸ் II கார் கருப்பு நிறத்தில் இருந்தது.

மற்றொன்று, வெள்ளை நிறத்தில் இருந்த வழக்கமான ஃபாண்டம் VII மாடல் ஆகும். அடுத்து, இரண்டு முந்தைய தலைமுறை ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் (Ghost) கார்கள், வெள்ளை நிறத்தில் அணிவகுத்து வந்தன. முதலாவது, சில்வர் வண்ண பொனட் உடன் கூடிய கோஸ்ட் சீரிஸ் I கார் ஆகும். இரண்டாவது கோஸ்ட் சீரிஸ் II கார் ஆகும்.
பேரணியில் இவற்றை தொடர்ந்து, அடர் கருப்பு நிறத்தில் ஒரு கல்லினன் (Cullinan) சீரிஸ் II எஸ்யூவி மற்றும் ஒரு டாக்ஸி பதிவு செய்யப்பட்ட கோஸ்ட் சீரிஸ் I கார் ஆகியவையும் இடம்பெற்றன. இந்த கோஸ்ட் டாக்ஸி கார் ஆனது, பெங்களூருவின் எஜிபுரா பகுதியை சேர்ந்த கார்களை வாடகைக்கு விடும் ஒரு டிராவல்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமானது ஆகும்.

இந்த டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்துபவர் முடிதிருத்தும் தொழிலாளியாக இருந்து வாடகை கார் நிறுவன உரிமையாளராக மாறியவர் என கூறப்படுகிறது. பெங்களுருவில் நடந்த பேரணியில் மேற்கூறப்பட்ட கார்களை தொடர்ந்து, வெள்ளை நிறத்தில் மீண்டும் ஒரு ஃபாண்டம் VII மற்றும் இரண்டு கல்லினன் சீரிஸ் I கார்கள் அணிவகுத்தன. அவற்றில் ஒரு கல்லினன் சீரிஸ் I கார், நீல நிற பொனட் உடன் கூடிய அழகிய நீல நிறத்திலும், மற்றொன்று பிளாக் பேட்ஜ் எடிசனாகவும் இருந்தன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெங்களூருவில் நடந்த இந்த பேரணியில் பங்கேற்ற இந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் மொத்த மதிப்பு ரூ.100 கோடிக்கும் அதிகமாகும். இது, இந்திய சாலைகளில் இதுவரை கண்டிராத மிக விலையுயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் அணிவகுப்பு என்பதை உறுதியாக சொல்லலாம்.

அம்பானி குடும்பத்தின் ரோல்ஸ் ராய்ஸ் வாகனத் தொடரை பற்றி ஏற்கனவே நாம் குறிப்பிட்டிருந்தாலும், அம்பானி குடும்பத்தின் ஒட்டுமொத்த சொகுசு கார்கள் சேகரிப்பிற்கு முன்னர் இது சாதாரணமானது ஆகும். குறிப்பாக, அம்பானி குடும்பத்திடம் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார்கள் மட்டுமே சுமார் 10 உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவை இல்லாமல், கோஸ்ட், ஃபாண்டோம் கார்களையும் முகேஷ் அம்பானி குடும்பத்தினர் வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications









