பெருசா கண்ட கனவு எல்லாம் ஒரே நாள்ல ஒடச்சிட்டாங்க! காஷ்மீர் லித்தியம் போதாது இறக்குமதி தான் செய்யனும் போல

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்பாடு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாது என்ற காரணத்தால் அரசு இந்த ரக வாகனங்களை அதிகமாக விற்பனை செய்ய ஊக்குவித்துவருகிறது மக்களும் பயண செலவுகள் குறைவு என்பதால் பெட்ரோல் வாகனங்களை விட விலை அதிகமாக இருந்தாலும் இந்த ரக வாகனங்களை வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பெட்ரோல் வாகனங்களை விட எலெகட்ரிக் வாகனங்கள் அதிக விலையில் விற்பனைக்கு காரணம் இதன் பேட்டரிதான்.

முழு எலெக்ட்ரிக் வாகனமாக இருந்தாலும் சரி, பிளக் இன் ஹைபிரிட் வாகனமாக இருந்தாலும் சரி அதில் லித்தியம் அயான் பேட்டரியின் பயன்பாடு தான் இருக்கிறது. இந்தியாவில் லித்தியம் அயான் பேட்டரிகளின்தயாரிப்பு குறைவு தான். இதனால் இந்த ரக பேட்டரிகளை இந்தியா வெளிநாடுகளிலிருந்து தான் இறக்குமதி செய்கிறது. இந்தியாவிற்கான லித்தியம் அயான் பேட்டரிகளை அதிகமாக வழங்குவது சீனா, ஹாங்காங் மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகள் தான்.

பெருசா கண்ட கனவு எல்லாம் ஒரே நாள்ல ஒடச்சிட்டாங்க! காஷ்மீர் லித்தியம் போதாது இறக்குமதி தான் செய்யனும் போல

இந்த நாடுகளிடம் தான் அதிகமாக லித்தியம் அயான் பேட்டரிக்கான லித்தியம் என்ற மூலப்பொருள் இருக்கிறது. இதனால் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரிக்காக பெரும்பாலான நாடுகள் இவர்களைச் சார்ந்தே இருக்கின்றன. இந்நிலையில் இந்தியாவில் லத்தியம் கிடைக்குமா என ஆய்வு செய்ய அட்டாமிக் எனர்ஜி துறைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி அந்த துறை அதிகாரிகள் இந்தியாவில் அருணாச்சல பிரதேசம், ஆந்திரா, சத்தீஷ்கர், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் லித்தியம் தாது கிடைக்கும் பகுதிகளில் ஆய்வு செய்தனர். இதில் முன்னதாக கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தின் மாரியாகலா பகுதியில் 1600 டன் லித்தியம் இருப்பதைக் கண்டுபிடித்தனர். ஆனால் இது போதுமான அளவு இல்லை.

இந்நிலையில் தற்போது ஜம்மு காஷ்மீர் பகுதியில் 5.9 டன் அளவிலான லித்தியம் தாதுக்குள் இருப்பதை முதன் முறையாக கண்டுபிடித்துள்ளனர். இதை எடுப்பது மூலம் இந்தியாவில்தயாராகும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இந்தியவிலிருந்தே லித்தியம் அயான்களை எடுக்க முடியும் என தெரியவந்துள்ளது. இந்த 5.9 மில்லியன் டன் லித்தியம் மூலம் சுமார் 10 ஆயிரம் ஜிகாவாட்ஸ் ஹவர் பவர் கொண்ட பேட்டரி செற்களைத் தயாரிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளனர்

ஒரு காருக்கு 50-70 கிலோ வாட் ஹவர் பேட்டரி தான் தேவைப்படுகிறது. ஒரு ஸ்கூட்டருக்கு அதை விட மிக குறைவு தான். இதனால் இந்த லித்தியம்யத்தை எடுப்பதன் மூலம் இந்தியாவின் அடுத்த சில ஆண்டுகளுக்கான லித்தியம் அயான் பேட்டரி தேவையை இந்தியாவாலேயே தயாரித்துக்கொள்ள முடியும். இப்படி செய்வதன் மூலம் பேட்டரி விலை வெகுவாக குறையும், லத்தியம் பேட்டரிகளுக்காக நாம் அண்டைநாட்டை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

தற்போதைய நிலையில் எலெக்ட்ரிக் வாகன துறைக்கு லித்தியம் தேவை என்பதால் தற்போது தான் தங்கம், அதை விற்பனை செய்பவர்களுக்குப் பல கோடி லாபம் கிடைக்கப்போகிறது. இது குறித்து தொழிற்துறை வல்லுநர்கள் கூறும் போது இது ஒரு நல்ல செய்தி தான் ஆனால் எதிர்கால தேவையைக் கணக்கிடும் போது இந்த அளவு பத்தாது இதனால் எப்படியும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்த முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.

ஒரு வேலை இந்த லித்தியம் வெட்டி எடுக்கப்பட்டால் இதின் விலை மிகவும் குறைவாக இருக்கும். மத்திய அரசு இதைக் குறைவான விலையில் வாகனம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஒதுக்கினால் மட்டுமே அதன் விலை குறையும். ஆனால் ஜம்மு காஷ்மீரில் கிடைக்கும் லித்தியத்தை வைத்து 10 ஆயிரம் ஜிகா வாட்ஸ் ஹவர் பவர் கொண்ட பேட்டரி செல்களை தயாரிக்க முடியும் 1 ஜிகா வாட்ஸ் ஹவர் என்றால் 10 லட்சம் கிலோ வாட் ஹவர் என கணக்கிட வேண்டும்.

இந்தியாவிற்கு தற்போது மாதம் 3 ஜிகா வாட் லித்தியம் அயான் பேட்டரி தேவைப்படுகிறதா. இதுவே 2030ம் ஆண்டு 70 ஜிகா வாட் பவர் கொண்ட பேட்டரி தேவைப்படும். இந்த தேவை அதிகரிப்பை இந்த ஒரு இடத்தால் மட்டும் பூர்த்தி செய்ய முடியாது என கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டிலிருந்து தொடர்ந்து இறக்குமதி செய்ய வேண்டும் எனவும் கூறப்படுகிறது. இதனால் சில வாகனங்களின் விலை மட்டுமே குறையுமே தவிர ஒட்டு மொத்தமாக எலெக்ட்ரிக் வாகன விற்பனையே குறையாது.

More from DriveSpark

Article Published On: Saturday, February 11, 2023, 9:26 [IST]
English summary
Experts says kashmir lithium is enough for future indias battery need
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+