திருமணத்தப்போ அம்பானி குடும்பத்தினர் இத்தன கார்கள பயன்படுத்தினாங்களா! ரூ.1.32 கோடி முதல் ரூ.16 கோடி கார் வரை!

உலகம் முழுக்க இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி வீட்டு திருமணம் பற்றிய பேச்சே பெருசாக உள்ளது. அந்த அளவிற்கு மிகவும் காஸ்ட்லியான கல்யாணமாகவே அவருடைய மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட-இன் திருமணம் அரங்கேறி இருக்கின்றது. இந்த திருமணத்திற்காக சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 6 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டு இருக்கலாம் என கணக்கிடப்பட்டு இருக்கின்றது. இது தோராயமான மதிப்பு மட்டுமே ஆகும். துள்ளியமான செலவு பற்றிய விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

அதேவேளையில், தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்கள் சில, நாம் கணித்திருப்பதைவிட மாபெரும் தொகையை இந்த கல்யாணத்திற்காக அம்பானி குடும்பத்தினர் செலவிடப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கின்றன. இதனால்தான் ஒட்டுமொத்த உலகமே ஆச்சரியத்துடன் இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. இந்த பிரம்மாண்ட திருமணத்தில் சொகுசு கார்களுக்கும் சற்றும் பஞ்சமில்லை.

Anant ambani s grand wedding car fleet

உலகின் பல்வேறு மூலைகளில் இருந்தும் இந்த திருமணத்திற்கு செல்வந்தர்களும், பிரபலங்களும் தங்களின் வருகையை தந்தனர். இந்த விருந்தினர்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக நூற்றுக் கணக்கான மிக மிக விலை உயர்ந்த ஆடம்பர கார்களை அம்பானி குடும்பத்தினர் வாடகை எடுத்ததாகக் கூறப்படுகின்றது. கார்கள் மட்டுமில்லைங்க விமானங்களும் இவர்களின் கல்யாணத்திற்காக அதிக எண்ணிக்கையில் வாடகைக்கு எடுக்கப்பட்டு இருக்கின்றன.

விருந்தினர்கள் தடையின்றி வந்து செல்லும் நோக்கில் செய்யப்பட்ட ஏற்பாடுகளில் மிகவும் முக்கியமான ஏற்பாடுகள் இவை ஆகும். இதில், சுவாரஷ்யம் என்னவென்றால் ஏற்கனவே இந்த குடும்பத்தினரிடத்தில் நூற்றுக்கும் அதிகமான விலை உயர்ந்த மற்றும் ஆடம்பர கார்கள் இருக்கின்றன என்பதுதான். இந்த கார்களில் சிலவும் விருந்தினர்கள் வந்து செல்வதற்காக பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

இதற்கு சான்றாக பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் நிக் ஜோனஸ் தம்பதியினரை பிக்-அப் செய்ய ரோல்ஸ்-ராய்ஸ் கல்லினன் பயன்படுத்தப்பட்டது. அம்பானி வீட்டின் மிக மிக விலை உயர்ந்த கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இந்த நிலையிலேயே தங்களிடம் இருக்கும் சொகுசு கார்கள் போதாமல் இன்னும் பல நூற்றுக் கணக்கான கார்களை இந்த குடும்பத்தினர் வாடகைக்கு எடுத்திருக்கின்றனர்.

அந்த அளவிற்கே அதிக விருந்தினர்கள் இந்த திருமணத்திற்கு அழைக்கப்பட்டு இருக்கின்றனர். சொகுசு கார்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் விதமாக, ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நடைபெற்ற பகுதிக்கு அருகில் ஏகப்பட்ட மஞ்சள் நிற பதிவெண் கொண்ட சொகுசு கார்கள் சாலையோரத்தில் அணி வகுத்து நின்றுக் கொண்டிருக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

இது ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றது. விருந்தினர்களுக்கே இவ்ளோ விலை உயர்ந்த கார்களை பயன்படுத்தினாங்களே என்ற பலரையும் இந்த வீடியோ ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றது. இதைவிட மிகப் பெரிய ஆச்சரியமாக இந்த பணம் கொழுத்த குடும்பத்தினர் திருமணத்தின் போது பயன்படுத்திய வாகனங்கள் இருக்கின்றன.

திருமணத்தின்போது முகேஷ் அம்பானி குடும்பத்தினர் பயன்படுத்திய வாகனங்கள் பற்றிய விபரங்களும் தற்போது வெளியாகி உள்ளன. அவர்கள் பயன்படுத்திய வாகனங்கள் திருமணத்திற்கான பிரத்யேக அலங்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு இருந்தன. அம்பானி குடும்பத்தினருக்காக மட்டுமே சுமார் 15 சொகுச கார்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. மெர்சிடிஸ் பென்ஸ் வி220டி ஸ்பிரிண்டர் வேன் (Mercedes-Benz V220d Sprinter van)கூட பயன்படுத்தப்பட்டு இருந்தது.

இதன் மதிப்பு ரூ. 1.32 கோடி ஆகும். இதுவே கடைசியாக வந்த வாகனம் ஆகம். இதற்கு அடுத்தபடியாக மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் 350டி (Mercedes-Benz GLS 350d) சொகுசு வாகனமும் பயன்படுத்தப்பட்டு இருந்தது. இந்த வாகனத்தின் மதிப்பு ரூ. 1.77 கோடிக்கும் அதிகம் ஆகும்.

இதைத்தொடர்ந்து, மணப் பெண் ராதிகா மெர்ச்சன்ட்-க்கு பயன்படுத்தப்பட்ட காரும் இந்த வீடியோவில் இடம் பெற்றிருக்கின்றது. லெக்சஸ் எல்எம் 350 அல்ட்ரா லக்சூரி எம்பிவி (Lexus LM 350h Ultra Luxury MPV)-யே மணப் பெண்ணுக்காக பயன்படுத்தப்பட்டு இருந்தது. சமீபத்திலேயே இந்த காரை அம்பானி குடும்பத்தினர் வாங்கினர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதன் மதிப்பு ரூ. 2.9 கோடிக்கும் அதிகம் ஆகும். மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி (Mercedes-Benz G63 AMG)-யும் இந்த திருமண கான்வாயில் இடம் பெற்றிருந்தது. இதன் மதிப்பு ரூ. 3 கோடி ஆகும். இதுதவிர குண்டு துளைக்க முடியாத வசதிக் கொண்ட ரேஞ்ஜ் ரோவர் ஆட்டோபயோகிராஃபி (Range Rover Autobiography) மற்றும் பழைய தலைமுறை ரேஞ்ஜ் ரோவர் ஆட்டோபயோகிராஃபி ஆகிய கார்களும் இந்த கான்வாயில் இடம் பெற்றிருந்தன.

இதில் புல்லட் ப்ரூஃப் வசதிக் கொண்ட வாகனம் ஆகாஷ் அம்பானிக்காக பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் மதிப்பு ரூ. 5 கோடி ஆகும். இந்த காருக்கு அடுத்தபடியாக ரேஞ்ஜ் ரோவர் எல்டபிள்யூபி ஆட்டோபயோகிராஃபி (Range Rover SV LWB Autobiography) காரும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இதன் மதிப்பு ரூ. 5.26 கோடி ஆகும். இதுதவிர, 4 கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடிஸ் மேபேக் எஸ்600 (Mercedes-Maybach S600), 6 கோடி ரூபாய் மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் (Rolls-Royce Ghost), 10 கோடி ரூபாய் மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls-Royce Cullinan) ஆகியவையும் திருமணத்தின்போது அம்பானி குடும்பத்தினருக்காக பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இதுமட்டுமில்லைங்க, அம்பானி குடும்பத்தினர் மிக மிக காஸ்ட்லியான கார்களாக கருதப்படும் ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் (Rolls-Royce Phantom), ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் (Anant Ambani's Rolls-Royce Cullinan Black Badge), ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் VIII இடபிள்யூபி (Rolls-Royce Phantom VIII EWB) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600 குவார்டு (Mercedes-Benz S600 Guard) ஆகிய கார் மாடல்களும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

இந்த கார்கள் ஒவ்வொன்றும் 12கோடி ரூபாய்க்கும் அதிகம் விலை க் கொண்டவை ஆகும். குறிப்பாக, புல்லட் மற்றும் குண்டுகளின் தாக்கத்தை தாங்கும் வசதிக் கொண்ட மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600 குவார்டு காரின் மதிப்பு ரூ.16கோடி என கூறப்படுகின்றது. இத்தகைய மிக மிக விலை உயர்ந்த கார்களையே அம்பானி குடும்பத்தினர் இந்த திருமணத்தின்போது பயன்படுத்தி இருக்கின்றனர். இதுபோன்று அவர்களிடத்தில் இன்னும் பல விலை உயர்ந்த ஆடம்பர கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: முகேஷ் அம்பானி வீட்டின் கடைசி திருமணம் இது என்பதால் மிகவும் விமரிசையாக இந்த திருமணம் கொண்டாடப்பட்டு இருக்கின்றது. பல ஆயிரம் கோடி ரூபாயை தண்ணீரை போல் வாரி இறைத்திருக்கின்றனர். மேலும், இப்போதே இந்த திருமணத்தால் ஏற்பட்ட தாக்கத்தில் இருந்து மும்பை மெல்ல மெல்ல மீள தொடங்கி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, July 19, 2024, 11:15 [IST]
English summary
Explore the luxury cars featured at anant ambanis wedding
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+