நீர் மூழ்கியாக மாறும் காரை வச்சிருக்காரா!.. நம்ப அம்பானி கிட்டகூட இல்லாத காரை இவரு வச்சிருக்காரே!
எலான் மஸ்க், இவரை அறியாதவர்களே இருக்க முடியாது. உலகின் நம்பர் பணக்காரர் இவரே ஆவார். மேலும், டெஸ்லா (Tesla) எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனத்தின் நிறுவனரும் இவரே ஆவார். மேலும், டுவிட்டர் (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) தளத்தின் உரிமையாளராகவும் இவர் உள்ளார். இவர் வாங்கிய பின்னர் அதற்கு 'எக்ஸ்' என்கிற பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இவர் ஓர் மிகப் பெரிய கார் காதலராகவும் அறியப்படுகின்றார். குறிப்பாக, தன்னுடைய சொந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் பலவற்றை அவர் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்.
அந்தவகையில், தன்னுடைய சொந்த நிறுவனத்தின் தயாரிப்பான சைபர் டிரக் (Cyber Truck), மாடல் ஒய் (Model Y) மற்றும் மாடல் எஸ் பெர்ஃபார்மன்ஸ் (Tesla Model S Performance) ஆகிய கார் மாடல்களையே அவர் பயன்படுத்தி வருகின்றார். இதில், மாடல் ஒய் எலெக்ட்ரிக் காரையே அவர் தன்னுடைய குடும்பத்திற்கான வாகனமாக அவர் பயன்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

அதேவேளையில், அவர் வைத்திருக்கும் மாடஸ் எஸ் பெர்ஃபார்மன்ஸ் எலெக்ட்ரிக் கார் அதிக திறனை வெளியேற்றக் கூடியதாக உள்ளது. அது வெறும் 2.5 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும். இந்த கார்கள் தவிர இன்னும் பல கார்களை அவர் வைத்திருக்கின்றார். அவற்றின் பட்டியலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
1967 ஜாகுவார் இ-டைப் ரோட்ஸ்டர் (1967 Jaguar E-Type Roadster): உலக பணக்காரர் எலன் மஸ்க் வைத்திருக்கும் மிகவும் பழைமையான மற்றும் அரிய வகை கார் மடாலாக இது இருக்கின்றது. இந்த பட்டியலின் மிகவும் சிறப்பு வாய்ந்த கார் மாடலாகவும் அது காட்சியளிக்கின்றது. 1967 ஜாகுவார் இ-டைப் ஓர் ரோட்ஸ்டர் ரக காராகும். கார் ஆர்வலரின் பலரின் கனவு கார் மாடல் இது என்பது குறிப்பிடத்தகுந்தது.
என்சோ பெராரி, இதை இதை "உலகின் மிகவும் அழகான கார்" என விவரிக்கின்றார். இத்தகைய காரையே தன்னுடைய குழந்தை பருவத்தில் இரு்நது பிரியமான காராக பார்த்து வந்து தற்போது அக்காரை அவர் பயன்படுத்தி வருகின்றார். இந்த காரில் 265 குதிரை திறனை வெளியேற்றக் கூடிய 4.2 லிட்டர் ஆறு சிலிண்டர்கள் கொண்ட எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
1976 லோட்டஸ் எஸ்பிரிட் (1976 Lotus Esprit): 1967 ஜாகுவார் இ-டைப் ரோட்ஸ்டர் கார் மாடலுக்கு அடுத்தபடியாக எலன் மஸ்க் இடம் இருக்கும் மிகவும் பழைமையான கார் மாடலாக 1976 லோட்டஸ் இ-ஸ்பிரிட் இருக்கின்றது. ஜேம்ஸ் பாண்ட் நடித்த "தி ஸ்பை ஹூ லவ்டு மீ" எனும் படத்தில் இந்த கார் பயன்படுத்தப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. வேட் நெல்லி என்பவரிடத்தில் இருந்து இந்த காரை எலன் மஸ்க் வாங்கி இருக்கின்றார்.
முன்னதாக இந்த காரை அவர் பயன்படுத்தி வந்திருக்கின்றார். 2013-லேயே அவர் லோடஸ் எஸ்பிரிட் காரை வாங்கி இருக்கின்றார். ஏலத்தின் வாயிலாகவே இந்த காரை அவர் வாங்கினார். காரிலிருந்து நீர்மூழ்கிக் கப்பலாக மாறும் திறன் கொண்டதே இந்த கார் என்பது குறிப்பிடத்தகுந்தது. கார் ஆர்வலர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு இந்த காருக்கு உண்டு. அந்த காரை படத்தில் நீர்மூழ்கிக் கப்பலாக மட்டுமே பயன்படுத்தினர் என்பது கவனிக்கத்தகுந்தது.
1997 மெக்லாரன் எஃப்1 (1997 McLaren F1): மெக்லாரன் எஃப்1 உலகின் அதி வேக நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் எனும் புகழைக் கொண்ட காராக உள்ளது. இந்த சாதனையை இப்போதும் அந்த கார் தக்கவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரை தற்போது எலன் மஸ்க் வைத்திருக்கவில்லை என ஒரு பக்கம் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஓர் விபத்திற்கு பின்னர் அந்த காரை அவர் சரி செய்து வேறொருவருக்கு விற்றுவிட்டதாகக் கூறப்படுகின்றது.
பிஎம்டபிள்யூ எம்5 (BMW M5 by Hamann Motorsport): எலன் மஸ்கின் கார் சேகரிப்பில் உள்ள மற்றொரு மிக சிறந்த மற்றும் அரிய வகை கார் மாடலாக இது காட்சியளிக்கின்றது. ஹமான் மோட்டார்ஸ்போர்ட் என்ற பிஎம்டபிள்யூ நிபுணர்களால் சீரமைக்கப்பட்ட ஓர் மாடலே இந்த எம்5 ஆகும். இந்த கார் பல மாற்றங்களை கொண்டுள்ளது.
அதில், 600 குதிரை திறனை உற்பத்தி செய்யக் கூடிய மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது 4 கதவு கொண்ட செடான் ஆகும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 322 கிலோமீட்டர் ஆகும். இத்தகைய சூப்பர் ஃபாஸ்ட் வேகத்தில் செல்லக் கூடிய காரையே எலன் மஸ்க் வைத்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த கார் மாடல்களுடன் சேர்த்து டெஸ்லா ரோட்ஸ்டர் (Tesla Roadster), எனும் கார் மாடலையும் எலன் மஸ்க் பயன்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஓர் 2.5 ஸ்போர்ட் பதிப்பு என கூறப்படுகின்றது. மிகவும் சக்திவாய்ந்த பதிப்பு இதுவாகும். அதேவேளையில், எலன் மஸ்க் ஓர் தீவிர மின்சார மற்றும் கிளாசிக் கார் சேகரிப்பாளர் என்பது தெரிய வந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








