குண்டூசி கூட வந்து தாக்க முடியாது! வடகொரிய அதிபர் பயணிக்கும் இந்த ரயிலை பற்றி உங்களுக்கு தெரியுமா?

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சமீபத்தில் ரஷ்யாவிற்கு ரயிலில் பயணம் செய்துள்ளார் . பெரும்பாலும் விமான பயணங்களை தவிர்க்கும் இவர் தனக்கான பிரத்தியேக அதிக சொகுசு வசதி மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த ரயிலை தயாரித்து பயன்படுத்து வருகிறார். இந்த ரயில் குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

உலகிலேயே தற்போது சர்வாதிகார நாடு என்று ஒன்று இருக்கிறது என்றால் அது வடகொரியா தான். அந்த நாட்டில் தற்போது கிம் ஜாங் உன் என்ற அதிபரின் ஆட்சி நடந்து வருகிறது. இந்நாட்டு சகல நாடுகளுடன் போட்டியாக பல்வேறு செயல்பாடுகளை செய்து வருகிறது. முக்கியமாக பல வல்லரசு நாடுகளுக்கு போட்டி போடும் வகையில் தனது ராணுவ பலத்தை அதிகரித்துள்ளது.

kim jong un train

வடகொரியா நாட்டில் ஏகப்பட்ட விமானங்கள் ஏவுகணைகள் என பல ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டாலும் அந்நாட்டில் உள்ள அதிபர் கிம் ஜாங் உன் பெரும்பாலும் விமான பயணத்தை விரும்புவதில்லை அவர் பயணிப்பதற்காகவே பிரத்தியேகமாக அதிக சொகுசு வசதி மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த ரயிலை பயன்படுத்தி வருகிறார்.

தற்போது ரஷ்ய அதிபர் புட்டின் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் அலுவல் ரீதியாக சந்திக்க வேண்டிய சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வடகொரியாவில் இருந்து ரஷ்யாவின் மாஸ்கோ நகருக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங்கும் பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்த இரு பகுதிக்கும் இடையே சுமார் 1180 கிலோ மீட்டர் தூரம் இருக்கும்.

kim jong un train

இந்த பயணத்தை மேற்கொள்ள வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் விமானத்தை தேர்வு செய்யாமல் ரயில் பயணத்தை தேர்வு செய்துள்ளார். வடகொரியாவை கிம் ஜாங் உன்னின் மூதாதையர்கள் தான் ஆண்டு வருகின்றனர். அவர்களும் விமான பயணத்தை விரும்புவதில்லை ரயில் பயணத்தை தான் விரும்புகிறார்கள்.

இதற்கு முக்கியமான காரணம் விமான பயணம் ஆபத்து நிறைந்ததாக இருப்பதால் அவர்கள் தங்கள் பயணத்திற்கு என பிரத்தியேகமாக சொகுசு வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஆயுதங்கள் நிறைந்த ரயில் ஒன்றை தயார் செய்து வைத்துள்ளனர். அந்த ரயிலில் தான் அந்நாட்டின் அதிபர் பெரும்பாலும் பயணிக்கின்றார்.

kim jong un train

இதன் அடிப்படையில் அதிபர் கிம் ஜாங் உன் தனது ரயில் பயணத்தை தற்போது ரஷ்யாவிற்கு துவங்கியுள்ளார். இந்த ரயிலில் ஏகப்பட்ட சுவாரசியமான விஷயங்கள் உள்ளன. இந்த ரயில் 21 பெட்டிகளை கொண்ட ரயிலாக இருக்கிறது. இந்த 21 பெட்டிக்களும் குண்டு துளைக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு ராக்கெட் லாஞ்சரே வந்து இந்த ரயிலை தாக்கினாலும் ரயிலுக்கு எந்த வித ஆபத்து ஏற்படாத வகையில் இந்த ரயிலை உருவாக்கியுள்ளனர்.

உட்புறம் பல்வேறு சொகுசு வசதிகள் இருக்கிறது. லெதர் சோபாக்கள் உள்ளிட்ட உள்ளிட்ட பல சொகுசு வசதிகள் நிறைந்த ரயிலாக இது இருக்கிறது. இதில் உணவு தயார் செய்வதற்கு என்று பல பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அங்கு சீனா வடகொரியா கொரியா உள்ளிட்ட பல நாட்டு உணவுகளை தயார் செய்ய முடியும் அதற்கான அத்தனை மூலப் பொருட்களும் அந்த ரயிலில் இடம் பெற்றுள்ளது.

இது போக இந்த பயணத்தின் போது அதிபர் கிம் ஜாங் உடன் தனது சக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த மீட்டிங் அறைகள் அவர் தங்குவதற்கு சொகுசான பெட்ரூம் மற்றும் அவர் குடும்பமே பயணித்தால் அவர்களுக்கு தேவையான விஷயங்கள் சொகுசான டாய்லெட் மற்றும் பிற அனைத்து வசதிகளும் இந்த ரயிலில் இடம் பெற்றுள்ளன.

இது மட்டுமல்ல இந்த ரயில் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த ரயிலாக இருக்கிறது. இந்த ரயிலில் ஏகப்பட்ட ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளன. எதிரிகள் தாக்குதல் நடத்தினால் பதில் தாக்குதல் நடத்த இவர்கள் தயாராக இருக்கிறார்கள். இது போக தொழில்நுட்ப ரீதியில் இந்த ரயில்களில் ஏகப்பட்ட தொழில்நுட்ப அம்சங்களும் உள்ளன.

முக்கியமாக இந்த ரயிலை சிறிய துப்பாக்கி கொண்டு முதல் பெரிய ஏவுகணை வந்து தாக்கினாலும் இந்த ரயிலுக்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாத வகையில் ஸ்ட்ராங்காக இந்த ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல இந்த ரயில் எப்பொழுதும் தனது தொடர்பு சிஸ்டத்தை இழக்க கூடாது என்பதற்காக நேரடி சாட்டிலைட் தொடர்பு அம்சங்களை கொண்ட ரயிலாக இருக்கிறது.

மேலும் இந்த ரயிலில் ஏவுகணைகளை கண்காணிக்கும் ரேடர்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதன்படி இந்த ரயிலை நோக்கி சில கிலோமீட்டர் தூரத்தில் இருந்து ஏதாவது ஏவுகணை தாக்க முற்பட்டால் உடனடியாக அதை சுதாரித்துக் கொண்டு இந்த ரயிலில் பொருத்தப்பட்டுள்ள மற்ற ஆயுதங்கள் தானாக புறப்பட்டு ரயிலை நோக்கி வரும் ஏவுகணையை அது ரயிலை தாக்கும் முன்பே இந்த ஏவுகணையை தாக்கி அழித்து விடும் வகையில் தொழில் நுட்ப அம்சங்கள் எல்லாம் இருக்கிறது.

இந்த ரயில் அதிக எடை கொண்ட ரயில் என்பதாலும் இதில் அதிகமான ஆயுதங்கள் இருப்பதாலும் அதன் செயல்பாடுகளுக்காக இந்த ரயிலின் வேகம் குறைவாகவே இருக்கும். குறிப்பாக இந்த ரயில் அதிகபட்சமாக 50 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும்படி தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. அது தான் பாதுகாப்பானது.

அதன்படி பார்த்தால் இவர் பயணிக்கும் இந்த ரயில் சுமார் 1180 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க குறைந்தபட்சம் 24 மணி நேரமாவது ஆகும் . உலகில் மணிக்கு 110, 250, 320, 600 என வேகமான ரயில்கள் எல்லாம் இருக்கும்போது இவர் பயணிக்கும் முறையில் குறைவான வேகத்திலேயே பயணிக்கும்படி வடிவமைத்துள்ளார். இதற்கு முக்கியமான காரணம் பாதுகாப்பு அம்சம் தான் என கூறப்படுகிறது.

அதிபர் கிங் ஜாங் உன் கடந்த 2021 ஆம் ஆண்டு தான் பதவியை ஏற்றுக்கொண்டார். அதற்கு முன்பிருந்த அதிபர்கள் யாரும் விமானத்தை பயன்படுத்தவில்லை. இதற்கு முக்கியமான காரணம் 1986 ஆம் ஆண்டு இவர்கள் விமானத்தில் பயணிக்கும் போது நடந்த சோதனையில் விமானம் வெடித்து சிதறி உள்ளது. இதனால் அவர்கள் விமானத்தையே வேண்டாம் என தவிர்த்து உள்ளதாக தெரிகிறது. ஆனால் அதிபர் கிங் ஜாங் உன் அவ்வப்போது விமானத்தில் பறந்து வருகிறார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடந்த ஒரு மீட்டிங்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து பேசினார். அப்பொழுது அவர் சிங்கப்பூருக்கு விமானத்தில் தான் வந்தார். இது மட்டுமல்ல இவர் படிக்கும் காலத்திலும் அடிக்கடி விமான பயணம் செய்து வந்துள்ளார். ஆனால் விமானங்களில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக அதில் பயணிப்பதை இவர் தவிர்த்து வருகிறார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வட கொரிய அதிபர் கிம் ஜாங்கும் உலகின் சர்வாதிகார அதிபர்களில் ஒருவராக இருக்கிறார். இவரது இந்த ரயில் குறித்த பேச்சு தான் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்படும் விஷயமாக இருந்து வருகிறது.அதிபர் கிம் ஜாங் உன் பற்றி மக்கள் பல ஆர்வமாக தேடிப் படித்து வருகின்றனர். இவர் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்ட் சொல்லுங்கள்

More from DriveSpark

Article Published On: Wednesday, September 13, 2023, 17:10 [IST]
English summary
Exploring kim jong uns armored train journey to russia
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X