சந்திரயானை விடுங்க இஸ்ரோ இப்ப சூரியனுக்கே ஆதித்யா எல்1 விண்கலத்தை அனுப்ப தயாராகிடுச்சு!
இஸ்ரோ நிறுவனம் சந்திராயனை தொடர்ந்து அடுத்ததாக சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் ஒன் என்ற சாட்டிலைட்டை தற்போது வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. இஸ்ரோவின் இந்த திட்டம் உலக நாடுகள் மத்தியில் மிக முக்கியமான திட்டமாக பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இஸ்ரோ கடந்த மாதம் நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம் இன்றும் ஒரு சில நாட்களில் நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விண்கலம் தற்போது நிலவே மிக அருகில் நெருங்கி விட்டது. வரும் 23ஆம் தேதி இது நிலவில் தரையிறங்க அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

சந்திராயன் திட்டம் ஒரு பக்கம் வெற்றி பாதையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இஸ்ரோ அடுத்ததாக தற்போது புதிய திட்டத்திற்கு தயாராகி வருகிறது. சந்திரனுக்கு அடுத்ததாக சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளை தற்போது தீவிரமாக செய்து வருகிறது.
இஸ்ரோ இப்படியாக சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் ஒன் என்ற சாட்டிலைட்டை தற்போது வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. சூரியனை ஆய்வு செய்யும் இந்த ஆதித்யா திட்டம் கடந்த 2008 ஆம் ஆண்டு முதன்முறையாக கான்செப்ட் செய்யப்பட்டு அதற்கான பணிகள் துவங்கப்பட்டது. தற்போது இது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த சாட்டிலைடின் நோக்கம் சூரியனின் வெளிப்புறப் பகுதியில் உள்ள கொரோனா மற்றும் முதல் மூன்று லேயர்களை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டு தயாரிக்கப்பட்டது. இதற்காக கடந்த 2016 17ஆம் ஆண்டு ரூபாய் 3 கோடி ஒதுக்கப்பட்டது. அப்பொழுது முதல் பணிகள் துவங்கப்பட்டு தற்போது அது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்தத் திட்டத்தின் படி இந்த சேட்டிலைட் ஹாலோ ஆர்பிட் எனப்படும் பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடத்திற்கு சென்று ஆய்வுகளை மேற்கொள்ளும். ஹாலோ ஆர்பிட்டில் எல் 1,2,3 என்ற மூன்று பாகங்கள் உள்ளன இதில் எல்1 பகுதியிலிருந்து தான் இந்த ஆதித்யா விண்கலம் சூரியனை ஆய்வு செய்யப் போகிறது.

அதனால் இந்த திட்டத்திற்கு ஆதித்யா எல் ஒன் என பெயரிட்டுள்ளனர். இந்த விண்கலம் தற்போது சுமார் 1500 கிலோ எடையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலத்தில் மொத்தம் ஏழு பே லோடுகள் உள்ளன. வி எல் சி, எஸ்யுஐடி, ஏஎஸ்பிஇஎக்ஸ், பாபா, எஸ் ஓ எல் இ எக் எஸ், ஹெச் இ எல் ஒன் ஓ எஸ், மேக்னட் மீட்டர் ஆகிய கருவிகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.
இது சூரியனின் வெளி லேயர் ஆன கொரோனா, சோலார் எமிஷன் சூரியனிலிருந்து வரும் வெளிச்சம் கோரனல் மற்றும் அங்கிருந்து நிலவு குறித்து ஆய்வு ஆகியவற்றை இந்த ஆதித்யா எல்1 விண்கலம் செய்ய உள்ளது. பூமியில் உள்ள அனைத்து விதமான வெப்ப நிலைகளும் சூரியனை மையப்படுத்தியே இருக்கிறது.
இதனால் சூரியனை ஆய்வு செய்வதால் அதன் மூலம் கிடைக்கும் தகவல்களை வைத்து பூமிக்கு நிகழும் உள்ள ஆபத்துக்கள் மற்றும் பூமி வெப்பமயமாதலை எவ்வளவு வேகமாக தடுக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வுகளை எல்லாம் நடத்த முடியும். இதற்காக தான் இந்த ஆதித்யா விண்கலம் தயார் செய்யப்பட்டுள்ளது.
இதுபோக சூரிய புயல் குறித்த ஆய்வுகளையும் இந்த விண்கலம் நடத்தப் போகிறது. அதன்படி சூரிய புயல்கள் எப்போது நடக்கும் என இந்த விண்கலம் முன்கூட்டியே கணிக்கும் திறனை கொண்டுள்ளதாக இருக்கிறது. இதை சரியான நேரத்தில் இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்ப தயாராகி வருகிறது.
பூமி இந்த ஹாலோ எல்ஒன் வட்டப்பாதைக்கு மிக அருகில் வரும்போது இந்த ஏவுதல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த ஆதித்யா எல்ஒன் விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திற்கு வந்துவிட்டது. அங்கு இந்த விண்கலம் டிஎஸ்எல்வி ராக்கெட்டில் லோடு செய்யப்பட்டு ஏறுவதற்கு தயாராகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்திய மட்டுமல்ல உலக அளவில் பல விஞ்ஞானிகளை கவனத்தை ஈர்க்கும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் ஆதித்யா எல்1 விண்கலத்தை தயார் செய்துள்ளது தற்போது பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. சந்திரயான் விண்கலம் போல ஆதித்யா விண்கலமும் அறிவியலில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications
