எந்த எலக்ட்ரிக் வாகனமாக இருந்தாலும் 15-நிமிட சார்ஜிங் போதும்!! பெங்களூர் நிறுவனத்தின் புதிய கண்டுப்பிடிப்பு!

ஆற்றல் தொழிற்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனமான எக்ஸ்போனெண்ட் எனர்ஜி, எலக்ட்ரிக் வாகனங்களுக்கான புதிய நீர்-சார்ந்த தொழிற்நுட்பத்தை வெளியீடு செய்துள்ளது. எக்ஸ்போனெண்ட் எனர்ஜி நிறுவனத்தை பற்றியும், அதன் புதிய தொழிற்நுட்பத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை பற்றியும் இனி விரிவாக இந்த செய்தியில் பார்க்கலாம்.

எக்ஸ்போனெண்ட் எனர்ஜி (Exponent Energy), பெங்களூரை சேர்ந்த எனர்ஜி டெக் ஸ்டார்ட்-அப் நிறுவனம். வழக்கமான எரிபொருள் என்ஜின் வாகனங்கள் உடன் ஒப்பிடுகையில் எலக்ட்ரிக் வாகனங்கள் நம்மை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றிருப்பதாக நம்பும் எக்ஸ்போனெண்ட் நிறுவனம், எலக்ட்ரிக் வாகனங்கள் துறையை 100% வளர்ச்சி அடைய செய்ய ஆற்றல் சார்ந்துள்ள பிரச்சனைகளை எளிமையானதாக மாற்ற வேண்டும் என கூறுகிறது.

exponent unveils thermal management system

இந்த நிலையில், பெங்களூரில் நடைபெற்ற ஃபைனல் லிங்க் என்ற நிகழ்ச்சியில் நீர்-சார்ந்த தெர்மல் மேனேஜ்மெண்ட் சிஸ்டத்தை எக்ஸ்போனெண்ட் எனர்ஜி வெளியீடு செய்துள்ளது. ஆன்-போர்டு அம்சமாக இல்லாமல் ஆஃப்-போர்டு அம்சமாக இந்த தொழிற்நுட்பம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, விருப்பப்படும் எலக்ட்ரிக் வாகன உரிமையாளர்கள் வாகனத்தை வாங்கிய பின் தனியாக இதனை வாங்கி பொருத்திக் கொள்ளலாம்.

பேட்டரி உடன் இணைந்து செயல்படும் இந்த தொழிற்நுட்பம் எலக்ட்ரிக் வாகனங்களின் விலைகளை 30% குறைவானதாக மாற்றும் என எக்ஸ்போனெண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல், எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கு ஆகும் செலவையும் 33% வரையில் குறைக்க முடியும் என எக்ஸ்போனெண்ட் நம்புகிறது.

exponent unveils thermal management system

இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, இந்த தெர்மல் மேனேஜ்மெண்ட் சிஸ்டத்தின் உதவியால் எலக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரிகளை வெறும் 15 நிமிடங்களில் விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும் என கூறுகிறது. இந்த 15-நிமிட சார்ஜிங் நேரத்தை நிஜ உலகில் பெற முடியுமாம். இந்த விரைவான 15-நிமிட சார்ஜிங்கை கடந்த 3 மாதங்களில் சுமார் 25,000க்கும் அதிகமான முறை எக்ஸ்போனெண்ட் செய்து காட்டியுள்ளது.

இதற்காக, பெங்களூர் சாலைகளில் 200க்கும் மேற்பட்ட எலக்ட்ரிக் வாகனங்கள் 10 இலட்ச கிமீ-க்கும் அதிகமான தொலைவிற்கு இயக்கப்பட்டு உள்ளன. தற்போதைக்கு பெங்களூரில் மட்டுமே செயல்பட்டுவரும் எக்ஸ்போனெண்ட் எனர்ஜி நிறுவனம் விரைவில் சென்னை உள்பட டெல்லி என்சிஆர், மும்பை, ஹைதராபாத் மற்றும் அகமதாபாத் என மேலும் 5 நகரங்களுக்கு தனது செயல்பாடுகளை விரிவுப்படுத்த தயாராகி வருகிறது.

exponent unveils thermal management system

இந்த மார்க்கெட் விரிவாக்க பணிகளை 2025 மார்ச் மாதத்திற்கு உள்ளாக செய்து முடிக்க திட்டமிட்டுள்ள எக்ஸ்போனெண்ட் எனர்ஜி நிறுவனத்தின் நிர்வாகிகள், 1,000 இ-பம்புகளை நிறுவி, 2025ஆம் ஆண்டு முடிவதற்கு உள்ளாக 25,000 எலக்ட்ரிக் வாகனங்களை தங்களது நிறுவனத்தின் இயக்க ஆற்றலில் இயங்கக்கூடியவைகளாக மாற்ற மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: பெங்களூர், இந்தியாவின் மென்பொருள் தலைநகரம் என அழைக்கப்படுவது எதன் காரணமாக என்பதை மீண்டும் மீண்டும் நிரூப்பித்து வருகிறது. இந்த நீர்-சார்ந்த தெர்மல் மேனேஜ்மெண்ட் சிஸ்டத்திற்கு காப்புரிமையை எக்ஸ்போனெட் எனர்ஜி நிறுவனம் பெற்றிருந்தாலும், எக்ஸ்போனெண்ட் போன்று நூற்றுக்கணக்கிலான ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பெங்களூரில் செயல்படுகின்றன. அவற்றின் யோசனைகள் அடுத்து ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரும்.

More from DriveSpark

Article Published On: Monday, July 31, 2023, 19:31 [IST]
English summary
Exponent unveils water based thermal management system
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X