அசாதாரண திறமையால் உயிர் பிழைத்த ரேசிங் வீரர்

Written By:

அசாதாரண திறமையால் ரேசிங் பந்தய வீரர் உயிர் பிழைத்த வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த ரேசிங் சம்பவத்தின் யூட்யூப் வீடியோ சமீபத்தில் வெளியாகி, அனைவரையும் ஆச்சர்யபட வைத்துள்ளது. இந்த வீடியோ, ஆர்சிஎன் ரேஸ் அல்லது ரண்ட்ஸ்ட்ரெக்கன் - சேலஞ்ஜ் நர்பர்க்ரிங் என்று அழைக்கபடும் ரேசிங் போட்டியின் போது கிடைத்ததாகும்.

ஜெர்மனியின் நர்பர்கிரிங் ஓடுதளம், உலகின் மிகவும் பழமையான ரேஸ் டிராக்குகளில் ஒன்றாக உள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இந்த ரேஸ் டிராக், பச்சை நரகம் என்றும் அழைக்கப்படுகிறது.

28 கிலோமீட்டர் நீளம், 187 வளைவுகளை கொண்ட இந்த ரேஸ் டிராக் உலகிலேயே அதிக உயிர்களை காவு வாங்கிய ரேஸ் டிராக்காக விளங்குகிறது. இந்த ரேசிங் ட்ராக், பந்தய வீரர்களுக்கு சவால்கள் நிறைந்த டிராக்காகவும், ஆபத்துகள் நிறைந்த டிராக்காகவும் உள்ளது.

Extraordinary Reflexes and Skill Saves This Racer at Nurburgring in Germany

எந்த ஒரு காரையும் வேகமாக இயக்குவதற்கு, நல்ல திறன் வேண்டும். நொடி பொழுதுகளில் எடுக்கும் முடிவுகளில் தான் மரணம் மற்றும் உயிர்பிழைத்தலுக்கான வித்தியாசங்கள் இருக்கிறது.

இது போன்ற விஷயங்களால், ரேசிங்கில் இன்னும் அதிக அளவிலான பாதிப்புகள் உள்ளது. ரேசிங்கில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு புற கண்களும் வேண்டும் என்பது இந்த வீடியோவில் ஊர்ஜிதமாகிறது.

ஆர்சிஎன் ரேஸ் பந்தயத்தின் இந்த வீடியோவில், ஒரு ரேசிங் டிரைவர் அவரது வாகனத்தை இயக்கும் போது, கட்டுபாட்டை இழந்த ஒரு பிஎம்டபுள்யூ கார், திடீரென அவரின் குறுக்கே வேகமாக கடக்கிறது.

எந்த விதமான எச்சரிக்கை சமிஞ்சைகள் இல்லாமல் பிஎம்டபுள்யூ கடந்து சென்றாலும், மில்லிசெகண்ட்களில் ரேசிங் டிரைவர் எடுத்த சமயோஜித்த முடிவினால், எந்த ஓரு ஆபத்துகளும் இல்லாமல் உயிர் பிழைத்துள்ளது அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

அசாதாரண திறமையால் உயிர் பிழைத்த ரேசிங் வீரர்

English summary
Extraordinary Reflexes and Skill Saves This Racer at Nurburgring in Germany. In this video below, the driver's split second decision and reflex action saves him from crashing into another car during a race. The BMW that loses control from the inside line almost wipes both the cars off the track, but a split-second action saves the driver.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more