உலகின் முதல் பறக்கும் காருக்கு அங்கீகாரம் கிடைத்தது... போக்குவரத்தில் புதிய அத்தியாயம்!

By Saravana Rajan

உலகின் முதல் தயாரிப்பு நிலை பறக்கும் கார் மாடலாக கருதப்படும் டெர்ராஃப்யூஜியா நிறுவனத்தின் டிரான்சிஷன் பறக்கும் காருக்கு அமெரிக்க வான்போக்குவரத்து ஆணையம் சட்டப்பூர்வமான அங்கீகாரம் அளித்துள்ளது.

டெர்ராஃப்யூஜியா நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று, விதிமுறைகளில் சிறப்பு தளர்வுகளுடன் இந்த காருக்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, போக்குவரத்து துறை புதிய அத்யாயத்தில் நுழைய இருக்கிறது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

வகை

வகை

லைட் ஸ்போர்ட்ஸ் ஏர்கிராஃப்ட்[LSA] என்ற வகையில், இந்த பறக்கும் காருக்கு சிறப்பு தளர்வுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு, எல்எஸ்ஏ வகை குட்டி விமானங்களின் எடை 598.7 கிலோவுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆனால், காருக்குண்டான பாதுகாப்பு அம்சங்களை சேர்த்திருப்பதால், எடை கூடியிருக்கிறது. இதனை கருத்தில்கொண்டு விதியில் தளர்வு கொடுத்து அனுமதிக்க டெர்ராஃபியூஜியா கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கை உள்பட பல விதிமுறை தளர்வுகளுடன் இதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

மேம்படுத்தும் பணிகள்

மேம்படுத்தும் பணிகள்

கடந்த 2006ம் ஆண்டு முதல் டெர்ராஃப்யூஜியா டிரான்சிஷன் பறக்கும் கார் தயாரிக்கப்பட்டு, 2009ல் முதல்முறையாக பறக்கவிட்டு சோதனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, 2012ம் ஆண்டு மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் இரண்டாவது டிரான்சிஷன் கார் உருவாக்கப்பட்ட சோதனை செய்யப்பட்டது. தற்போது மூன்றாவது டிரான்ஸ்சிஷன் கார் உருவாக்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்த கார் சோதனை செய்யப்பட உள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

இந்த பறக்கும் கார் சாலையில் செல்வதற்கான பாதுகாப்பு விதிமுறைகளின்படி கட்டமைக்கப்பட்டிருக்கிறது. கார் கவிழ்ந்தால், பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் காக்கும் ரோல்கேஜ், மோதல்களை உள்வாங்கி பயணிகளை காக்கும் க்ரம்பிள் ஸோன் பகுதிகளுடன் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

 இருக்கை வசதி

இருக்கை வசதி

பைலட் உள்பட இரண்டு பேர் பயணிக்கும் வசதி கொண்டது.

 ஓடுபாதை

ஓடுபாதை

சாலையில் செல்லும்போது இதன் இறக்கைகள் மடங்கிக்கொள்ளும். ஓடுபாதைக்கு சென்று, பறப்பதற்கான பட்டனை அழுத்தினால், சில வினாடிகளில் இறக்கைகள் விரிந்து பறப்பதற்கு தயாராகிவிடும்.

வேக விபரம்

வேக விபரம்

தரையில் டிரான்சிஷன் கார் மணிக்கு 110 கிமீ வேகம் வரையிலும், ஆகாயத்தில் மணிக்கு 177 கிமீ வேகத்திலும் பறக்கும். இந்த காரில் 87 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.

பயண நேரம்

பயண நேரம்

முழுமையாக எரிபொருள் நிரப்பும்போது, தொடர்ச்சியாக 4 மணி நேரம் வரை பறக்கலாம். அதாவது, ஒருமணி நேரம் பறப்பதற்கு 19 லிட்டர் பெட்ரோல் செலவாகும். அதேபோன்று, தரையில் செல்லும்போது லிட்டருக்கு 15 கிமீ மைலேஜ் தருமாம்.

 பைலட் பயிற்சி

பைலட் பயிற்சி

இந்த காரை இயக்குவதற்கு வாடிக்கையாளர்கள் சிறப்பு பயிற்சி பெறுவது அவசியம். 20 மணி நேரம் ஓட்டி பயிற்சி பெறுவதுடன், தேர்வில் வெற்றி பெற்றால்தான் டெலிவிரி கொடுக்கப்படும்.

முன்பதிவு

முன்பதிவு

இந்த புதிய பறக்கும் காருக்கு ஏற்கனவே 100 பேர் வரை முன்பதிவு செய்து காத்திருக்கின்றனராம். ஒரு காரின் விலை இந்திய மதிப்பில் ரூ.1.43 கோடியாக தெரிவிக்கப்படுகிறது.

விற்பனை

விற்பனை

வரும் 2018ம் ஆண்டு இந்த பறக்கும் கார் வணிக ரீதியில் விற்பனைக்கு வர இருக்கிறது.

 ஹைபிரிட் பறக்கும் கார்

ஹைபிரிட் பறக்கும் கார்

இந்த காரை தொடர்ந்து அடுத்து பெட்ரோல் மற்றும் பேட்டரியில் இயங்கும் டிஎஃப் எக்ஸ் என்ற புதிய ஹைபிரிட் எலக்ட்ரிக் காரை டெராஃபியூஜியா வடிவமைத்து வருகிறது. இது வர்த்தக அறிமுகத்துக்கு 12 ஆண்டுகள் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Monday, June 27, 2016, 18:04 [IST]
English summary
FAA Approves Terrafugia Transition flying car.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+