Just In
- 5 min ago
புதிய மினி கன்ட்ரிமேன் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்
- 5 min ago
விற்பனையில் இமாலய சாதனையை படைத்த மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா... என்னனு தெரியுமா?
- 1 hr ago
அதிக பாதுகாப்பானது... குறைந்த விலை பிளாட்டினா 110 பைக்கில் தரமான அம்சம் அறிமுகம்... என்ன தெரியுமா அது?
- 2 hrs ago
புதிய ரெனோ கார்களுக்கு ரூ.75,000 வரை தள்ளுபடி சலுகை... விபரம் உள்ளே!
Don't Miss!
- Sports
அடுத்தடுத்து பரவிய கொரோனா.... சொந்த நாட்டிற்கு படையெடுத்த வீரர்கள்... பி.எஸ்.எல் தொடர் ஒத்திவைப்பு
- Movies
வெட்டவெளியில் கணவருடன் தாறுமாறு ரொமான்ஸ்…இளசுகளை புலம்பவிட்ட முன்னணி நடிகை!
- Finance
இன்றும் 598 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. 15,100 கீழ் முடிந்த நிஃப்டி..!
- News
"விஜயகாந்த் இருப்பதே வெற்றிக் கூட்டணி".. அப்ப மக்கள் நலக் கூட்டணி?.. அதிமுக பொளேர் கேள்வி!
- Lifestyle
ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு... மக்களுக்கு இந்த கிழமையில் தான் அதிகமா மாரடைப்பு ஏற்படுமாம்..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
லெதர் இருக்கைகள் Vs ஃபேப்ரிக் இருக்கைகள்... சாதக, பாதகங்கள்...
கார்களில் லெதர் மற்றும் ஃபேப்ரிக் இருக்கைகளின் சாதக, பாதகங்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் சுருக்கமாக பார்க்கலாம்.

காரில் நீங்கள் நீண்ட தூரம் பயணம் செய்யும்போது, சௌகரியத்தை உறுதி செய்வதில் இருக்கைகள் மிக முக்கிய பங்கை வகிக்கின்றன. ஆனால் கார் வாங்குவது என வந்து விட்டால், லெதர் இருக்கைகளை (Leather Seats) தேர்வு செய்வதா? அல்லது ஃபேப்ரிக் இருக்கைகளை (Fabric Seats) தேர்வு செய்வதா? என்ற குழப்பமும் கூடவே வந்து விடும்.

உண்மையில் லெதர் இருக்கைகள் என்றாலும் சரி அல்லது ஃபேப்ரிக் இருக்கைகள் என்றாலும் சரி, இரண்டிலுமே ஒரு சில சாதகங்களும், ஒரு சில பாதகங்களும் இருக்கின்றன. அவை என்னென்ன? என்பதை இந்த செய்தியில் சுருக்கமாக வழங்கியுள்ளோம். கார் வாங்கும்போது இருக்கையை தேர்வு செய்வதற்கு இந்த தகவல்கள் உங்களுக்கு உதவும் என நம்புகிறோம்.

லெதர் இருக்கைகள்:
லெதர் இருக்கைகளை பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் 'சொகுசு' என்றுதான் கூற வேண்டும். லெதர் இருக்கைகள் ஆடம்பர அம்சமாக பார்க்கப்படுகின்றன. விலை உயர்ந்த கார்களில் லெதர் இருக்கைகள்தான் வழங்கப்படுகின்றன. ஆனால் லெதர் இருக்கைகளுக்காக நீங்கள் செலவழிக்கும் கூடுதல் தொகை வீண் என்று அர்த்தம் கொள்ள கூடாது.

உண்மையில் ஃபேப்ரிக் இருக்கைகளை விட லெதர் இருக்கைகள் பல வழிகளில் உயர்ந்தவை. கவர்ச்சிகரமான தோற்றமும், வாசனையும்தான், லெதர் இருக்கைகளை பலரும் விரும்புவதற்கு காரணம். அத்துடன் லெதர் மிகவும் சௌகரியமான ஒரு மெட்டீரியல். காரில் அதிக நேரம் பயணம் செய்பவர்கள், லெதர் இருக்கைகள் வழங்கும் சௌகரியம் மூலம் அதிகம் பலன் பெறலாம்.

அத்துடன் லெதர் இருக்கைகளை சுத்தம் செய்வது மிகவும் எளிமையானது. மேலும் லெதர் இருக்கைகள் நீடித்து உழைக்க கூடியவை. எனவே நீங்கள் நீண்ட காலத்திற்கு அவற்றை சிறப்பாக வைத்திருக்க முடியும். இதுதவிர காரின் உட்புறத்தில் ஒட்டுமொத்த அழகியலை, லெதர் இருக்கைகள் அதிகரிக்கின்றன. லெதர் இருக்கைகள் இருந்தால், உங்களின் காரின் கேபின் இன்னும் கவர்ச்சியாக காட்சியளிக்கும்.

மேலும் லெதர் இருக்கைகளுடன் கூடிய காரை வாங்குவதற்காக நீங்கள் கூடுதலாக செலவழிக்கும் தொகை எங்கும் சென்று விடாது. ஏனெனில் லெதர் இருக்கைகள் உங்கள் காரின் மறு விற்பனை மதிப்பை அதிகரிக்கும். எனவே பயன்படுத்தப்பட்ட கார்கள் சந்தையில் நீங்கள் காரை விற்பனை செய்வதாக இருந்தால், அதிக மறு விற்பனை மதிப்பு கிடைக்கும்.

ஆனால் லெதர் இருக்கைகளிலும் ஒரு சில குறைகள் இருக்கவே செய்கின்றன. ஃபேப்ரிக் இருக்கைகளுடன் ஒப்பிடும்போது லெதர் இருக்கைகள் விலை உயர்ந்தவை என்பது முக்கியமான ஒரு குறைபாடு. அத்துடன் லெதர் இருக்கைகளில் பழுது ஏற்பட்டால், அதனை சரி செய்வதற்கு அதிக செலவு ஆகும். அதேபோல் லெதர் இருக்கைகளை சுத்தம் செய்வது எளிமையானதுதான் என்றாலும், அவற்றை பராமரிப்பது சற்று சிரமமானது.

ஃபேப்ரிக் இருக்கைகள்:
ஃபேப்ரிக் இருக்கைகளை தயார் செய்வது மிகவும் எளிமையானது. அத்துடன் லெதர் இருக்கைகளுடன் ஒப்பிடும்போது, ஃபேப்ரிக் இருக்கைகள் விலை குறைந்தவை. எனவே பட்ஜெட் கார்களில் ஃபேப்ரிக் இருக்கைகள்தான் அதிகம் வழங்கப்படுகின்றன. அதேபோல் லெதர் இருக்கைகளை போல் அல்லாமல், ஃபேப்ரிக் இருக்கைகளை பராமரிப்பது மிகவும் எளிமையானது என்பது இதன் கூடுதல் சிறப்பம்சம்.

அதே சமயம் வெகு விரைவாகவே அழுக்காகி விடும் என்பது ஃபேப்ரிக் இருக்கைகளின் பாதகங்களில் முக்கியமானது. அத்துடன் தற்போது கார் வாங்குபவர்கள் மத்தியில் லெதர் இருக்கைகள் மீதான மோகம் அதிகரித்து வருகிறது. எனவே பயன்படுத்தப்பட்ட கார்கள் சந்தையில் நீங்கள் விற்பனை செய்வதாக இருந்தால், ஃபேப்ரிக் இருக்கைகள் கொண்ட காரின் மதிப்பு குறைவாகவே இருக்கும்.