எங்க பாத்தாலும் ஒரே டிராஃபிக்கா இருக்கு... இத எப்படிதான் தவிர்க்கிறது?.. இதோ அதற்கான வழிகள்!

இந்தியாவில் நாளுக்கு நாள் பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் சாலைகள் முழுவதும் வாகனங்களால் நிரம்பிக் காணப்படுகின்றன. குறிப்பாக, முக்கிய நகரங்களின் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை பலமடங்கு பெருகிக் காணப்படுகின்றது. இதனால், பகல் நேரங்களில் விரைவான பயணம் மேற்கொள்வதில் பெருத்த சிக்கல் நிலவுகின்றது.

அவசர வாகனங்கள்கூட போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஸ்தம்பித்துக் கொண்டிருக்கும் சூழலே நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தென்படுகின்றது. இத்தகைய சூழலை தவிர்க்க வழியே இல்லையா என்பதே பலரின் கேள்வியாக இருக்கின்றது. ஆனால், இதனை தவிர்க்க சில வழிகள் உள்ளன. அதனையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

How to avoid traffic jam

தினசரி டிராஃபிக்கில் பயணித்து சளித்து போனவர்கள் சிலர் தற்போது டிராஃபிக் ப்ரோ (Pro)-வாக மாறி இருக்கின்றனர். டிராஃபிக்கை எப்படி கையாள வேண்டும் என்கிற யுக்திகளை கற்றவர்களாக அவர்கள் மாறி இருக்கின்றனர். இத்தகையோர் வழங்கி இருக்கும் டிராஃபிக்கை தவிர்க்கும் டிப்ஸ்களையே இந்த பதிவில் வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் அதுகுறித்த விரிவான தகவலைக் காணலாம்.

டிராஃபிக் ப்ரோ-க்கள் கையாள்வது இரண்டே முறைகள்தான். ஒன்று நாம் செல்லும்பாதை டிராஃபிக் நிறைந்து காணப்பட்டால் பிளானை மாற்றிக் கொள்ள வேண்டும் அல்லது வேறு பாதையைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். இந்த இரண்டே டிராஃபிக்கைத் தவிர்க்க மிக சிறந்த யுக்தி ஆகும்.

Heavy traffic

ஆனால், நம்மில் பெரும்பாலானோர் பிளானை மாற்றிக் கொள்ள தயாராக இருக்க மாட்டார்கள். ஆகையால், வேறு பாதையை தேர்வு செய்து பயணிப்பவர்களே இங்கு அதிகமானோர் உள்ளனர். கொஞ்சம் நேரமும், பெட்ரோலும் விரையமாகும். அதேவேளையில், டிராஃபிக்கில் மாட்டிக் கொள்வதனால் ஏற்படும் நேரம் விரையமாதலைத் தவிர்த்துக் கொள்ள முடியும்.

பயணத்தைத் தொடங்கும் முன் உள்ளூர் டிராஃபிக் ரிப்போர்ட்டை தெரிந்துக் கொள்வது நல்லது. இப்போது எல்லாம் சில ரேடியோ சேனல்கள் டிராஃபிக் அறிவிப்புகளை உடனுக்குடன் தெரிவிக்கின்றன. அவர்களே மாற்று பாதை பற்றிய தகவலையும் உங்களுக்கு கூறுவர். இதன்படி உங்கள் ரூட்டை மாற்றிக் கொண்டால் டிராஃபிக்கைத் தவிர்க்க முடியும்.

Cars stuck in traffic

இதேபோல், கூகுள் மேப்பும் இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவும். இது டிராஃபிக் உள்ள சாலையை உங்களுக்கு காண்பித்துக் கொடுக்கும். அதேவேளையில், டிராஃபிக் இல்லாமல் போவதற்கான மாற்று பாதையையும் அது உங்களுக்கு காண்பித்துக் கொடுக்கும். கூகுள் மேப்பை போலவே இன்னும் சில டிராஃபிக் ஆப்புகள் தற்போது பயன்பாட்டில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

அவற்றில் சில இன்னும் துள்ளியமான டிராஃபிக் தகவலை வழங்கும். ஒரே ரூட்டில் பயணிக்காமல் வெவ்வேறு ரூட்டில் பயணிக்க கற்றுக் கொள்ளுங்கள். மேப் போன்றவற்றின் உதவி இல்லாமலேயே ஷார்ட் கட் மற்றும் டிராஃபிக் இல்லாமல் பயணிக்க இந்த யுக்தி உதவும். இவ்வாறு பயணித்தவர்களே இப்போது மிகப் பெரிய டிராஃபிக் ப்ரோக்களாக உள்ளனர்.

டிராஃபிக்கில் இருந்து தப்பிக்க வழியே இல்ல எனும் நிலை தென்படுதா? உங்கள் பயண பிளானை மாற்றுவது மட்டுமே ஒரே தீர்வு. ஆனால், அவசர வேலையின்போது இதை செய்ய முடியாது. ஆகையால், கொடி நடையாக நடந்தே சென்றுவிட வேண்டும். இல்லை எனில் சைக்கிளை பயன்படுத்திக் கொள்ளலாம். இவை இரண்டைக் காட்டிலும் மிக சிறந்த மற்றொரு வழி என்னவென்றால் அருகில் உள்ள மெட்ரோ அல்லது புறநகர் ரயிலைப் பிடித்து நம்முடைய பயணத்தைத் தொடரலாம்.

இதன் வாயிலாக நேரத்தைப் பலமடங்கு மிச்சப்படுத்த முடியும். இல்லை எனில் அதிகம் டிராஃபிக் நிறைந்துக் காணப்படும் அலுவல் நேரத்தில் பயணங்களை மேற்கொள்வதை தவிர்த்துவிடலாம். ஒரே நேரத்தில் நூற்றுக் கணக்கான வாகனங்கள் சாலையில் குவிவதே பெரும்பாலான போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக இருக்கின்றது. ஆகையால், பிரைம் டைம்களில் பயணிப்பதை முழுமையாக தவிர்த்துவிடுங்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தினசரி அலுவல் பயணங்களுக்கு தனிப்பட்ட வாகனங்களை பயன்படுத்தாமல் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தினால் இந்த டிராஃபிக் பெரும் அளவில் குறையும். ஆனால், நம்மில் பலர் சொகுசாக பயணிப்பதையே விரும்புகின்றனர். இதன் விளைவே வாகனங்கள் அதிகரிப்பதற்கும், போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதற்கும் முக்கிய காரணமாக இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 24, 2023, 9:04 [IST]
English summary
Facing traffic jam here is some idea how to avoid traffic
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X