உவ்வே... உல்லாச கப்பல்களில் குழாய் தண்ணீரை பயணிகள் குடிக்க மாட்டாங்க... ஏன் தெரியுமா?

உல்லாச கப்பல்களில் குழாய் தண்ணீரை பயணிகள் குடிப்பதில்லை. இதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உவ்வே... உல்லாச கப்பல்களில் குழாய் தண்ணீரை பயணிகள் குடிக்க மாட்டாங்க... ஏன் தெரியுமா?

விடுமுறை நாட்களை உற்சாகமாக கழிக்க விரும்புபவர்களுக்கு உல்லாச கப்பல்கள் சூப்பர் சாய்ஸ். உல்லாச கப்பல்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரில் பல்வேறு ஆச்சரியங்களும், சுவாரஸ்யங்களும் இருக்கின்றன. அதைதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். உல்லாச கப்பல்களில் பயணிக்க வேண்டும் என ஆசைப்படுபவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், உங்களுக்குதான் இந்த பதிவு.

உவ்வே... உல்லாச கப்பல்களில் குழாய் தண்ணீரை பயணிகள் குடிக்க மாட்டாங்க... ஏன் தெரியுமா?

கடல் நீரை குடிநீராக மாற்றுவது எப்படி?

உல்லாச கப்பல்களின் தண்ணீர் ஏறக்குறைய உப்பு அகற்றப்படாத கடல் நீர்தான். ஆனால் நீராவி ஆவியாதல் உள்ளிட்ட செயல்முறைகள் மூலம் உப்பு தண்ணீர் குடிப்பதற்கு ஏற்ற தண்ணீராக மாற்றம் செய்யப்படுகிறது. இதன்பின் அந்த தண்ணீரில் மினரல்கள் சேர்க்கப்படும். மேலும் கூடுதல் பாதுகாப்பிற்காக குளோரினும் சேர்க்கப்படும்.

உவ்வே... உல்லாச கப்பல்களில் குழாய் தண்ணீரை பயணிகள் குடிக்க மாட்டாங்க... ஏன் தெரியுமா?

அத்துடன் பில்டர் செய்வது மற்றும் உப்பு அகற்றுதல் பணிகளுக்காக ஆர்ஓ எனப்படும் ரிவர்ஸ் ஆஸ்மோஸிஸ் (Reverse Osmosis) சிஸ்டமும் உல்லாச கப்பல்களில் பயன்படுத்தப்படுகிறது. இது நாம் வீடுகளில் வைத்திருக்கும் ஆர்ஓ சிஸ்டம் போன்றதுதான். ஆனால் மிகவும் பெரிதாக இருக்கும் என்பது மட்டுமே வித்தியாசம்.

உவ்வே... உல்லாச கப்பல்களில் குழாய் தண்ணீரை பயணிகள் குடிக்க மாட்டாங்க... ஏன் தெரியுமா?

உல்லாச கப்பல்களில் குழாய் தண்ணீரை குடிக்கலாமா?

உல்லாச கப்பல்களில் குழாய் மூலமாக வழங்கப்படும் தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாகதான் இருக்கும். அது பாதுகாப்பானதும் கூட. ஆனால் உல்லாச கப்பல் பணியாளர்கள் அறிவுறுத்தாத வரை மட்டுமே. அதாவது குழாய் தண்ணீரை குடிக்க வேண்டாம் என்று உல்லாச கப்பல் பணியாளர்கள் கூறினால், நீங்கள் குடிக்க கூடாது.

உவ்வே... உல்லாச கப்பல்களில் குழாய் தண்ணீரை பயணிகள் குடிக்க மாட்டாங்க... ஏன் தெரியுமா?

உல்லாச கப்பல்களில் பயன்படுத்தப்படும் குடிநீர் உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில் பாதுகாப்பாகவே இருக்கும். குடிநீரை பில்டர் செய்த பிறகுதான் பயணிகளுக்கு வழங்குவார்கள். அத்துடன் உல்லாச கப்பல்களில் வழங்கப்படும் குடிநீர் அடிக்கடி பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

உவ்வே... உல்லாச கப்பல்களில் குழாய் தண்ணீரை பயணிகள் குடிக்க மாட்டாங்க... ஏன் தெரியுமா?

உல்லாச கப்பல்களின் குடிநீர் துறைமுகங்களில் இருந்து பெறப்படுகிறதா?

ஒரு சில உல்லாச கப்பல்களுக்கு துறைமுகத்தில் இருந்து தண்ணீர் பெறப்படுகிறது. ஆனால் ஒரு சில உல்லாச கப்பல்களில், துறைமுகங்களில் இருந்து பெறப்படும் தண்ணீரை குடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது துவைப்பது மற்றும் இன்ஜின் கூலிங் போன்றவற்றுக்கு மட்டுமே அந்த தண்ணீரை பயன்படுத்துவார்கள்.

உவ்வே... உல்லாச கப்பல்களில் குழாய் தண்ணீரை பயணிகள் குடிக்க மாட்டாங்க... ஏன் தெரியுமா?

ஆனால் வேறு சில உல்லாச கப்பல்களிலோ, ஏற்கனவே உப்பு அகற்றப்பட்ட கடல் நீருடன் சேர்த்து தங்களின் குடிநீர் அளவை அதிகரித்து கொள்ள அந்த தண்ணீரை பயன்படுத்துகிறார்கள். ஆனால் ஆறுகளில் பயணம் செய்யும் உல்லாச கப்பல்கள் துறைமுகங்களில் இருந்துதான் குடிநீரை பெறுகின்றன. எவ்வாறாயினும் நம்பிக்கையான இடங்களில் இருந்துதான் துறைமுகம் வாயிலாக தண்ணீர் பெறப்படும்.

உவ்வே... உல்லாச கப்பல்களில் குழாய் தண்ணீரை பயணிகள் குடிக்க மாட்டாங்க... ஏன் தெரியுமா?

அத்துடன் பில்டர் செய்யப்படுவதுடன், அதன் தூய்மை தன்மை குறித்து பரிசோதனையும் நடத்தப்படும். இது தவிர கூடுதல் பாதுகாப்பிற்காக குளோரினும் சேர்க்கிறார்கள். இதன் காரணமாக துறைமுகங்களில் இருந்து பெறப்பட்டாலும், உல்லாச கப்பல்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் தண்ணீர் பாதுகாப்பானதாகவே இருக்கும்.

உவ்வே... உல்லாச கப்பல்களில் குழாய் தண்ணீரை பயணிகள் குடிக்க மாட்டாங்க... ஏன் தெரியுமா?

டாய்லெட் தண்ணீரை சுத்திகரித்து குழாய்களில் வழங்குகிறார்களா?

உல்லாச கப்பல்களில் டாய்லெட் தண்ணீரை சுத்திகரித்து குழாய்களில் வழங்குகிறார்களா? என்ற சந்தேகம் பலருக்கும் இருந்து வருகிறது. இதற்கு இல்லவே இல்லை என்பதுதான் பதில். உல்லாச கப்பல்களில் கழிவு நீர் பொதுவாக க்ரே வாட்டர் மற்றும் பிளாக் வாட்டர் என தனித்தனியாக பிரிக்கப்படும். இதில், கிரே வாட்டர் என்பது ஷவர்களில் இருந்து வருவது. அதே சமயம் பிளாக் வாட்டர் டாய்லெட்களில் இருந்து வருகிறது.

உவ்வே... உல்லாச கப்பல்களில் குழாய் தண்ணீரை பயணிகள் குடிக்க மாட்டாங்க... ஏன் தெரியுமா?

உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது இந்த தண்ணீரை குடிநீருக்கு இணையான தரத்துடன் மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பங்கள் வந்து விட்டன. இருந்தபோதும் உல்லாச கப்பல்களில் அதனை குடிநீராக பயன்படுத்துவது இல்லை. அதற்கு பதிலாக தரையில் இருந்து குறிப்பிட்ட தூரத்தில், விதிகளுக்கு ஏற்ப அவை கடலில் கலக்கப்பட்டு விடுகின்றன.

உவ்வே... உல்லாச கப்பல்களில் குழாய் தண்ணீரை பயணிகள் குடிக்க மாட்டாங்க... ஏன் தெரியுமா?

ஆனால் டாய்லெட் தண்ணீரை சுத்திகரித்து வழங்குகிறார்களோ? என பயந்து கொண்டு, உல்லாச கப்பல்களில் பயணம் செய்யும் ஒரு சிலர் குழாய் தண்ணீரை குடிப்பதே கிடையாது. ஆனால் இந்த விஷயத்தில் நீங்கள் தேவையில்லாமல் பயப்பட வேண்டாம். ஏற்கனவே குறிப்பிட்டதை போல் குழாய் தண்ணீரை தாராளமாக குடிக்கலாம்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Facts About Cruise Ship Drinking Water. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X