மாருதி எல்லாம் கிடையாது! ஹேப்பியா பைக், காரை விக்குறவங்க இவங்க தான்!

இந்தியாவில் வாகன டீலர்ஷிப் நடத்துவதில் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார், ராயல் என்ஃபீல்டு, மற்றும் அசோக் லேலேண்ட் ஆகிய நிறுவனங்களின் டீலர்ஷிப்களை எடுத்தவர்கள் சந்தோசமாக இரப்பதாக FADA நடத்திய கருத்துகணிப்பில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து 5 ஆண்டுகளாக இந்த கருத்து கணிப்பு நடந்து வரும் நிலையில் இந்த 2025ம் ஆண்டிற்கான கருத்து கணிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம்.

கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் திருப்திகரமான டீலர்ஷிப்பிற்கான கருத்து கணிப்பு நடந்தது. இந்த கருத்து கணிப்பை FADA அமைப்பு சிங்கப்பூரை சேர்ந்த PremonAsia என்ற நிறுவனத்துடன் இணைந்து நடத்தியது. இது இந்தியா முழுவதும் உள்ள 9 பிராந்தி மொழிகளி் நடத்தப்பட்டது. இதில் 5000 டீலர்ஷிப்களை நடத்தகி வரும் 1800 டீலர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

FADA Dealership Statisfaction

இந்த கருத்து கணிப்பு 1000 புள்ளிகளுக்காக நடத்தப்பட்டது. ஒவ்வொரு டீலரும் வழங்கும் பதிலை வைத்து புள்ளிகள் வழங்கப்படும். இந்த புள்ளிகளை வைத்து சராசரியாக எவ்வளவு புள்ளிகளை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பெற்றுள்ளது என்பதை மனதில் வைத்து அந்த நிறுவனத்தின் டீலர் ஷிப்பை நடத்தி வருபவர்கள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள் என கணிக்கப்படுகிறது.

இந்த கருத்து கணிப்பில் டீலர்களின் திருப்தி பல்வேறு பிரிவுகளில் பிரித்து பார்க்கப்படுகிறது. உதாரணமாக விற்பனைக்கு பிறகான சர்வீஸ், லாபம், நீண்ட கால டீலர்ஷிப் நடத்தும் வாய்ப்பு, சவாலான தருணங்களை சமாளிப்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து டீலர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.

FADA Dealership Statisfaction

இதை வைத்து ஆய்வு செய்த போது 4 வீலர் செக்மெண்டில் ஜேஎஸ்டபிள்யூ மோட்டார் நிறுவனம் தான் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்நிறுவனம் 868 புள்ளிகளை பெற்றுள்ளது. அடுத்தாக மஹிந்திரா நிறுவனம் 832 புள்ளிகளையும், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 812 புள்ளிகளையும் பெற்றுள்ளது. இதை தொடர்ந்து கியா நிறுவனம் 736 புள்ளிகளையும், ஹூண்டாய் நிறுவனம் 734 புள்ளிகளையும், மாருதி நிறுவனம் 727 புள்ளிகளையும் பெற்றுள்ளது.

2 வீலர் செக்மெண்டை பொருத்தவரை சென்னையை சேர்ந்த ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தான் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்நிறுவனம் 852 புள்ளிகளை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து ஹீரோ நிறுவனம் 817 புள்ளிகளையும், ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் 747 புள்ளிகளையும், டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் 632 புள்ளிகளையும், பெற்றுள்ளது. இதில் ராயல் என்ஃபீல்டு மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்தாண்டை விட 140 புள்ளிகள் அதிகம் பெற்றுள்ளது.

FADA Dealership Statisfaction

கமர்ஷியல் வாகன செக்மெண்டை பொருத்தவரை அசோக் லேலேண்ட் நிறுவனம் 786 புள்ளிகளை பெற்று முதலிடத்தை பிடதித்துள்ளது. 3 வீலர் செக்மெண்டில் 924 புள்ளிகளை பெற்று அதுல் ஆட்டோ நிறுவனம் முதலிடத்தையும், சொகுசு கார் செக்மெண்டில் 884 புள்ளிகளை பெற்று வால்வோ நிறுவனம் முதலிடத்தையும் பிடித்துள்ளது.

மேலும் இந்த கருத்துகணிப்பில் டீலர்களிடம் விற்காமல் இருக்கும் கார்களை திரும்ப வாங்குவது, அல்லது அதற்கான பணத்தை கழிப்பது போன்ற திட்டங்களை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இன்னும் மேம்படுத்த வேண்டும் எனவும், பயிற்சிக்கான கட்டணம், வாகனங்கள் மற்றும் ஸ்பேர் பார்ட்ஸ்களில் மிக குறைவாக உள்ள மார்ஜின், பாலிசி ஃபிளக்ஸிபிளிட்டி ஆகிய விஷங்களில் மாற்றம் வேண்டும் என பெரும்பாலான டீலர்கள் விரும்புவது தெரியவந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதிகமான இன்வென்டரிகளை பாதுகாப்பதற்கான செலவு, குறைவான ஆப்ரேஷனல் பட்ஜெட், முடிவுகளை எடுக்க போதுமான அனுமதியில்லாதது, நீண்ட காலம் டீலர் ஷிப் நடத்த நம்பிக்கை ஏற்படாதது உள்ளிட்ட பல விஷயங்களில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இது நிச்சயம் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மத்தியில் முக்கிய முடிவுகளை எடுக்க வழி வகுக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, September 18, 2025, 9:01 [IST]
English summary
Fada dealership satisfaction study 2025 mg royal enfield volvo happiest
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X