வெறும் டீ-சர்ட் போட்டுனு போய் வாங்குற காரா இது? நடிகராக இருந்தாலும் 5 கோடி ரூபாய் காருக்கு இது எல்லாம் ஓவர்

பகத் பாசில் (Fahad Fasil), பிரபல மலையாள நடிகர்; நடிகை நஸ்ரியாவின் கணவர் என்பதெல்லாம் ஊரறிந்த விஷயம். மலையாள நடிகராக அறியப்பட்டாலும் பகத் பாசில் தென்னிந்திய அளவில் முன்னணி நடிகராக விளங்குகிறார். நாளுக்கு நாள் பகத் பாசிலின் மார்க்கெட் உயர்ந்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில், நடிகர் பகத் பாசில் புதியதாக ரேஞ்ச் ரோவர் (Range Rover) கார் ஒன்றை வாங்கியுள்ளார். காரை பகத் பாசிலின் வீட்டிற்கே சென்று டெலிவிரி கொடுக்கும்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. அதனை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

ஒருத்தருக்கு எப்போது நல்ல நேரம் வரும் என்றே சொல்ல முடியாது. இளமை காலம் முடிந்து, பல வருடங்கள் கழித்து கூட வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டவர்கள் இருக்கின்றனர். அத்தகையர்களுள் சிறந்த உதாரணமாக, மலையாள நடிகர் பகத் பாசிலை சொல்லலாம். கேரளாவின் ஆலப்புழாவில் பிறந்தவரான பகத் பாசில் தனது 20வது வயதில் முதல் திரைப்படத்தில் நடித்தார்.

fahad fasil buys range rover

இந்த படம் எப்போது திரைக்குவந்தது என்று தெரியுமா? 2002இல். அதாவது, சுமார் 23 வருடங்களுக்கு முன்னர். இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் நடிகர் என மலையாள சினிமாவை கலக்கிய பாசில் அவர்களின் மகனான பகத் பாசிலுக்கு ஆரம்பத்தில் அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் கிடைப்பதிலும், அவற்றில் நடிப்பதிலும் பெரியதாக எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை.

இருப்பினும், நடிகர் பகத் பாசிலால் இப்போது இருப்பதுபோல் பெரிய ரசிகர் பட்டாளத்தை துவக்கத்தில் பெற முடியவில்லை. 2014ஆம் ஆண்டில் நடிகை நஸ்ரியாவை திருமணம் செய்த போது கூட நஸ்ரியாவின் கணவராகவே அறியப்பட்டார். ஆனால், இப்போதோ தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஓய்வின்றி பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

fahad fasil buys range rover

அந்த அளவிற்கு ஒரு கட்டத்திற்குமேல் ரசிகர்களை தனது அட்டகாசமான நடிப்பால் வெகுவாக ஈர்க்க ஆரம்பித்த பகத் பாசில் தற்போது புதியதாக ரேஞ்ச் ரோவர் கார் ஒன்றை வாங்கியுள்ளார். பொதுவாகவே, மலையாள சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு ஆட்டோமொபைல் வாகனங்கள் என்றாலே தனி ஈர்ப்பு உள்ளதையும், அவ்வப்போது புது, புது விலையுயர்ந்த கார்களை அவர்கள் வாங்குவதையும் நமது செய்தித்தளத்தில் பார்த்திருக்கிறோம்.

இதில், நடிகர் பகத் பாசிலும் விதிவிலக்கு இல்லை. தற்போது இவர் புதியதாக வாங்கி இருப்பது ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி (Autobiography) கார் ஆகும். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரின் 'ரந்தம்போர் எடிசன்' (Ranthambore Edition) என்கிற ஸ்பெஷல் எடிசன் காரை பகத் பாசில் வாங்கி உள்ளார்.

fahad fasil buys range rover

இதுதொடர்பாக இன்ஸ்டாகிராம் (Instagram)-இல் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், ஷோரூமில் இருந்து பிராண்ட்-நியூ ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி கார் ஒன்று பகத் பாசிலின் வீட்டிற்கு கொண்டு செல்லப்படுவதை காண முடிகிறது. ஷோரூமில் இருந்து லாரி ஒன்றில் இந்த பிராண்ட்-நியூ கார் பகத் பாசிலின் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே கிடைக்கும் ரந்தம்போர் எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.4.98 கோடியாக தற்சமயம் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சமீப காலமாகவே, சினிமாக்காரர்கள் பலர் போட்டிப் போட்டுக் கொண்டு ரேஞ்ச் ரோவர் கார்களை வாங்கி வருகின்றனர். இருப்பினும், மற்றவர்களிடம் இருந்து நடிகர் பகத் பாசில் தனது ரந்தம்போர் எடிசனின் மூலமாக தனித்து தெரிகிறார். ஏனெனில், அந்த அளவுக்கு இந்த ஸ்பெஷல் எடிசன் காரின் தோற்றம் தனித்துவமானதாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 1, 2025, 23:59 [IST]
English summary
Fahad fasil buys brand new range rover autobiography ranthambore edition
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X